விஞ்ஞானிகள் சிலர் தீவிரமாக யோசிக்கிறார்கள் அழிந்து போன மிருகங்களை திரும்ப கொண்டுவர முடியுமா ? அப்படி அந்த மிருகங்களை திரும்ப உருவாக்கப்பட்டால் அதனால் என்ன பயன்?
இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜுராசிக் பார்க் ஆங்கில திரைப்படம் மைக்கேல் க்ரிக்டன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இதில் அழிந்து போன டைனஸோர் மிருகங்களை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்குவதாக கதை.
ஆனால் அந்த கதைப்படி (அந்த டெக்னாலஜி) மேஜிக்கெல்லாம் செய்து மிருகங்களை உருவாக்குவது என்பது நடவாத காரியம். இருந்தாலும் மிருகங்களை உருவாக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.
சைபீரியாவின் வடகிழக்கு மூலைப் பகுதியில் உள்ளது ப்ளைஸ்டோசீன் பார்க் (Pleistocene Park) அழிந்து போன தாவர உன்னிகளான காட்டெருமை, கலைமான், இனங்களை உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சடைமுடி யானையை உருவாக்குவது பெரும் சவால். பனிப்பாறை பகுதியில் உறைந்து கிடைத்த படிமத்தின் ஜீன் (DNA) கொண்டு திரும்ப அந்த யானையை உருவாக்க முடியுமா?
"பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டுவரும் சடைமுடி யானை"
டி.என்.ஏ நுண்தொடர்பிழை உடைந்து போயிருக்கும் ஒருவேலை, அந்த விடுபட்ட பகுதியை இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும். அந்த கோடிங்கை கண்டுபிடிக்க ஆசிய யானைகள் உதவுமா?
ஒருவேலை ஜீராஸிக் பார்க் கதையில் வருவது போல தவளையின் டிஎன் ஏ இந்த இணைப்பு இடைவெளியை நிரப்புமா? டோலி ஆட்டின் குளோனிங் சிஸ்டத்தை போல (SCNT = somatic cell nuclear transfer) ஆசிய யானையின் கருமுட்டையில் வலு ஊட்டப் பெற்ற மமூத் யானையின் நியூக்ளியஸ் பதிவிடுதல் சாத்தியமா? இதில் பல உள்குத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்கிறார் லெஸ்டர்.
"மறு உருவாக்க லிஸ்டில் உள்ள வட அமெரிக்க தூது புறா"
"1936ல் அழிந்துபோன டாஸ்மேனியன் புலி"
"பாதுகாக்கப்பட்டு வரும் கடைசி வெள்ளை காண்டாக்கள்"
சமீபத்தில் (1936 ? ) அழிந்து போன தைலாசின் அல்லது டாஸ்மேனியன் புலி மறு உருவாக்கம் சாத்தியமென்கிறார்கள்.
நியூசவுத்வேல்ஸ் (ஆஸ்திரேலியா) பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்(palaeontology research குரூப்) இது சாத்தியமென்கிறார். 1990 லிருந்து இது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இப்படி விலங்கு மறு உருவாக்க ஆய்வு நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.
பையோ பேங்க்
சாண்டியாகோ உயிர் தொழில்நுட்ப கல்லூரி விலங்கியல் பதப்படுத்தும் கூடத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உயிர் கருக்கள்,செல்கள் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது.
தொடர்புடைய பதிவு : பனிகண்ட யானை மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா?
கோவை ஆவி உடன் சேர்ந்து பதிவர்விழாவில் கலந்து கொள்ள கோநேஜீ டிராவல்ஸில்
இப்பதான் மனிதனே புலியாகவும் டைனோசராகவும் மாறி வர்றானே??
ReplyDelete