கரபாத் மலைசிகரங்களில் (போபால், மத்தியபிரதேசம்) காணப்படும் செம்புக்காலத்தை சேர்ந்த இந்த ஓவியங்கள் ஐரோப்பிய செம்புக்காலத்தில் கிடைத்த ஓவியங்களுக்கும் முந்தியது. இந்த ஓவியங்கள் சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் காணக்கிடைக்கின்றன.
இன்னும் சில தகவல்கள் மற்றும் படங்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...
தொடர்புடைய பகுதி :
இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) -பகுதி 2
சித்திரங்களில் காணப்படும் (Chalcolithic ) செம்புக்காலத்தில் இருந்திருக்கக்கூடிய காண்டா மற்றும் சிவப்பு யானை விலங்குகள் அழிந்து போய்விட்டன.(சிவப்பு யானை உண்மையா தெரியவில்லை ?)
பிரான்ஸை சேர்ந்த முற்கால வரலாற்றை ஆய்வு செய்பவர் (Dr. Jean Clottes) ஜேன் க்ளாட்ஸ் மற்றும் இவரோடு இந்த கலப்பணி செய்பவர் இந்தியாவை சேர்ந்த மீனாக்ஷி துபே (Dr. Meenakshi Dubey ) இவர்களின் குழு இந்திய மலைப்பகுதிகளில் பழங்கால ஓவியங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு பல தகவல்கள் திரட்டியுள்ளனர்.
மலை முகடுகளின் சரிவான உள்வாங்கிய பாறைகளில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. அந்த கால கட்டத்தில் இருந்திருக்ககூடிய சிவப்பு யானை மற்றும் காண்டா மிருகங்கள் அழிந்து போன மிருகங்கள் எனத் தெரிவிக்கிறார்.
போபாலுக்கு அருகில் உள்ள ஷாம்லா மலைப்பகுதியில் உள்ள மனித சமூக பூங்கா ( ethnographic park) இங்கு இந்திய பழங்குடிகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்கிறது.
ஒரிஷா பழங்குடிகள் சவுரர்கள் (Sauras) தங்கள் மூதாதையரின் பிக்டோகிராபிக்ஸ் எனப்படும் சித்திரங்களை தம் வீடுகளில் தொடர்ந்து பயன் படுத்தி வருகிறார்கள். இந்த சுவர் சித்திரங்களை உற்று நோக்கினால் அந்த கால கிராமத்து சூழல், நாட்டியமாடும் பழங்குடிகள், வளர்ப்பு பிராணிகள்,குரங்குகள், குதிரைகள், விவசாயம், காட்டு விலங்குகள்,பறவைகள்... இப்படி பல தகவல்கள் அறியலாம்.
வீடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் "இட்டல் அல்லது இடிடல்" எனும் இந்த வகை சித்திரங்களை வரைகிறார்கள். சிவப்பு மற்றும் வெள்ளையில் உள்ள இவை தம் வீட்டை பில்லி சூனியங்களில் இருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள். இவற்றின் மூலமாக கொடும் நோய்களில் இருந்தும், தீய சக்திகளிடம் இருந்தும் தூய ஆன்மாக்கள் தம்மை பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.
கொடும் நோய்களிடம் இருந்தும் நல்ல விளைச்சல் கிடைக்கவும் வீட்டின் முன் ஆடுகளை பலியிடுவது வழக்கம்.
இந்தியாவில் இது போன்று பழமையான விஷயங்கள் தம்மை ஈர்பதாகவும், பாரம்பரியம் தொடரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சொல்கிறார் ஜேன்.
இன்னும் சில தகவல்கள் மற்றும் படங்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...
தொடர்புடைய பகுதி :
இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) -பகுதி 2
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !