Followers

Sunday, August 18, 2013

சிங்கம்புலியும் - புலிசிங்கமும்

மனிதன் புதிது புதிதாக ஒவ்வொன்றையும் உருவாக்க ஆசைப்படுபவன்.

சிங்கம்புலி (Liger) , புலிசிங்கம் (Tigon) இவை இரண்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டு உருவாக்கபட்ட உயிரினங்கள். அதாவது இவை காட்டில் இருக்கிறதோ இல்லையோ வனவிலங்கு பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் இருக்கிறது.


ஆண்சிங்கம் பெண்புலியுடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் சிங்கம்புலி(Liger).

ஆண்புலி பெண்சிங்கத்துடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் புலிசிங்கம் (Tigon).

இந்த லைகர் மற்றும் டைகன் இரண்டுமே சிங்கம்,புலி இவற்றின் குணாதிசயங்களை கொண்டிருக்கின்றன.  உதாரணமாக லைகர்கள் நீச்சலடிக்க ஆசைப்படுபவை.  இவைகள் இரண்டையும் பார்த்தால் வித்தியாசப்படுத்து கொஞ்சம் யோசிக்கனும் உடலில் புள்ளிகள் மற்றும் வரிகள் காணப்படுகிறது. லைகர்கள் தம் பெற்றோரை விட இரண்டு மடங்கு பெரிதாக வளர்கிறது.

இவற்றை திபெத்திய புத்த பிக்குகள் (லாமாக்கள்) வளர்த்தால் சைவமாக மாற வாய்ப்பு உண்டு !.



இந்த படத்தில், தாய்லாந்து காஞ்சனபூரி புலி கோவிலில்.. புத்த பிக்குகள் வளர்த்தும் புலிகள்.



தற்போது உலகிலேயே பெரிய லைகர் 500 கிலோகிராம் எடையுடன் 10 அடி நீளத்துடன் இருக்கிறது.

இவற்றிற்கு மரபியல் சம்பந்தமான(Dwarfism,gigantism) உடற்குறைகள் அதாவது தாறுமாறான உடல் உறுப்பு பெருக்கம் அல்லது வளர்ச்சி  இருப்பதாக சொல்லப்படுகிறது, கண்காணித்து வருகிறார்கள். அதோடு கூட வாழ்நாள் அவற்றின் பெற்றோரை போல் இருக்காது.  இதற்கு இன்னும் மரபியல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

Download As PDF

தமிழ் சினிமாவை நம்பாதீங்க - வைரமுத்து அதிரடி

கோவை தமிழ் மன்ற துவக்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதில் இருந்து சில...

ஒவ்வொருவரும் தமிழ் மீது காதல் கொள்ளுங்கள். விஞ்ஞான கல்வியுடன், வாழ்க்கையை நெறிப்படுத்தும் தமிழை கற்றுக்கொள்ளுங்கள்.  வாழ்க்கை முடிவில் நாம் விட்டுச் செல்வது, புகழ் தான்.  வாழும் காலத்தில் நல்லதை செய்யவேண்டும். கவிதை திறன் உங்களது முழுத்திறமைகளை வெளிப்படுத்தும் கருவி.  சொல்லை மட்டும் அல்ல அதிலுல்ல பொருளையும் கண்டுபிடித்து வாழ்க்கைக்கு பயன் படுத்துங்கள். உலகை புரிந்து வாழ வேண்டும்.  தமிழை புரிந்து பேசி பொருளை கண்டுபிடியுங்கள்.  குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை சூட்டுங்கள். விடாது உழைத்து வெற்றியடையுங்கள்; அப்படிப் பெறும் வெற்றிக்கு உரிய மரியாதையை கொடுங்கள்.  உழைப்பின்றி வெற்றி கிடையாது.

வாழ்க்கை என்பது, இன்பம், துன்பம், வறுமையை கொண்டது. அனைத்து காலங்களையும், நிலைகளையும், நிகழ்வுகளையும் சமமாகப் பாருங்கள்.  நாம் கற்கும் கல்வி, நமது சமூகத்தை மேம்படுத்த வேண்டும்.  தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாது.

அச்சம் தவிர்த்து உண்மையை பேசுங்கள்.  உண்மையுடன் செயல்படுங்கள்.  இந்நாடு உங்களை நம்பி உள்ளது. சினிமா வாழ்க்கை கற்பனையானது. தமிழ் சினிமாவை நம்பாதீர்கள். அதில் காதலின் ஒரு பகுதி மட்டுமே காண்பிக்கப் படுகிறது.

சமூக வாழ்க்கையை காண்பிப்பதில்லை. காதல் என்பது கண்ணில் தோன்றி, உள்ளத்தில் முடியும் ஒரு புரிதல்.  தியாகம் இன்றி, வாழ்க்கை கிடையாது.  விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒரு நல்ல ஆசிரியர், தனது மாணவனின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்.

குழந்தைகளிடம் பண்பு, பரிவு, இரக்கம், காட்டுங்கள்.  தினமும் புத்தகம் படியுங்கள். புத்தகங்கள் பல நல்ல பண்புகளை நமக்கு கற்றுக்கொடுக்கின்றன.

நல்ல வாசிப்பு என்பது நம்மை தூங்க விடாது.  தூங்குவதற்கு புத்தகம் தேவையில்லை.  வாழ்க்கையை உயர்த்தவே புத்தகங்கள்.  இளம் வயதை பக்குவமாக கையாள வேண்டும்.  சொற்களை சரியாக பயன்படுத்துங்கள். சரியான சொற்கள், பண்பாடு நமக்கு மிகவும் அவசியம்.  வாழ்க்கைக்கு தேவையான இங்கிதம், பண்பாடு ஆகியவற்றை தமிழ் இலக்கியங்கள் கற்றுக்கொடுக்கின்றன.

எந்த நோக்கமும் இன்பத்தை சார்ந்தது.  உண்மையான இன்பம், அறத்தால் வருவது. சத்தியத்தால் கிடைப்பது.  நேர்மையான வாழ்க்கையால் வருவது. தவறான வழியில் கிடைக்கும் இன்பம், நிலைத்து நிற்பதில்லை, பெண்களை மதியுங்கள். சமாக கருதி வாய்ப்பு கொடுங்கள்.

source of  news : dinamalar dtd.18.8.2013
Download As PDF

Friday, August 16, 2013

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு - பகுதி 2)


இந்தியாவின் மையப்பகுதியான விந்திய மலைப்பகுதிகளில் (போபால் தென்கிழக்கே) பிம்பெட்கா குகைப் பகுதிகளில் தொன்மையான பாறை சித்திரங்கள்  காணப்படுகின்றன.


 (V.S. Wakankar ) வாகன்கர்  என்பவர்  1957 ல் இச்சித்திரங்களை பற்றிய ஆய்வுகள் வெளியிட்டு இருக்கிறார்.  2003 ல் இந்த பகுதி இந்திய மரபுரிமை பகுதியாக யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டது ( the World Heritage List of UNESCO)




பலதரப்பட்ட வடிவங்கள் உள்ள இந்த பாறைசித்திரங்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. யானை, குதிரை மேல் இருந்து போர் புரிவது,போர் காட்சி, முகமூடி அணிந்த மனிதர்களின் வேட்டை, நீண்ட கொம்புகளை கொண்ட மாடு, மான்கள், நாட்டியம் ஆடுபவர்கள் போன்ற சித்திரங்கள் காணப்படுகின்றன.


நூற்றுக்கணக்கான சித்திரங்கள் இருந்த போதிலும் காலம் செல்ல செல்ல அவற்றின் மீது சூப்பர் இம்போஸ் என சொல்லபடும் சித்திரத்தின் மேல் சித்திர ஓவிய புதுபிப்பும் செய்யப்பட்டு இருக்கிறது.


காலத்தின் முற்பட்ட, மிக மிகப் பழமையான சித்திரங்களும் இருப்பதாக சுமார் 1,50,000 ஆண்டுகள்(   ஆப்பிரிக்காவில் இருந்து வெளிப்பட்ட நாகரீக மனிதனின் காலம் Acheulian) தெரிவித்திருந்தார் விஷ்ணு வாகன்கர்(1972).
சம்பல் பள்ளத்தாக்கு, பந்த்பூரா-காந்திசாகர் பகுதியிலும் (வட போபால், மத்தியபிரதேசம்) குகை சித்திரங்கள் உள்ளன.


முப்பரிமாண முதலை (ஆஸ்திரேலிய x-ray style)  





இப்பகுதிகளில் 1990 களில் இருந்து, Rock Art Society of India (RASI) மற்றும்  IFRAO (International Federation of Rock Art Organizations இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவு : இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) part 1


Download As PDF

Wednesday, August 14, 2013

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு)

கரபாத் மலைசிகரங்களில் (போபால், மத்தியபிரதேசம்) காணப்படும் செம்புக்காலத்தை சேர்ந்த இந்த ஓவியங்கள் ஐரோப்பிய செம்புக்காலத்தில் கிடைத்த ஓவியங்களுக்கும் முந்தியது. இந்த ஓவியங்கள் சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் காணக்கிடைக்கின்றன.





சித்திரங்களில் காணப்படும் (Chalcolithic ) செம்புக்காலத்தில் இருந்திருக்கக்கூடிய காண்டா மற்றும் சிவப்பு யானை விலங்குகள் அழிந்து போய்விட்டன.(சிவப்பு யானை உண்மையா தெரியவில்லை ?)










பிரான்ஸை சேர்ந்த முற்கால வரலாற்றை ஆய்வு செய்பவர்  (Dr. Jean Clottes)  ஜேன் க்ளாட்ஸ் மற்றும் இவரோடு இந்த கலப்பணி செய்பவர் இந்தியாவை சேர்ந்த மீனாக்ஷி துபே (Dr. Meenakshi Dubey ) இவர்களின் குழு இந்திய மலைப்பகுதிகளில் பழங்கால ஓவியங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு பல தகவல்கள் திரட்டியுள்ளனர்.

மலை முகடுகளின் சரிவான உள்வாங்கிய பாறைகளில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.    அந்த கால கட்டத்தில் இருந்திருக்ககூடிய சிவப்பு யானை மற்றும் காண்டா மிருகங்கள் அழிந்து போன மிருகங்கள் எனத் தெரிவிக்கிறார். 





போபாலுக்கு அருகில் உள்ள ஷாம்லா மலைப்பகுதியில் உள்ள மனித சமூக பூங்கா ( ethnographic park) இங்கு இந்திய பழங்குடிகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்கிறது. 

ஒரிஷா பழங்குடிகள் சவுரர்கள் (Sauras) தங்கள் மூதாதையரின் பிக்டோகிராபிக்ஸ் எனப்படும் சித்திரங்களை தம் வீடுகளில் தொடர்ந்து பயன் படுத்தி வருகிறார்கள்.  இந்த சுவர் சித்திரங்களை உற்று நோக்கினால் அந்த கால கிராமத்து சூழல், நாட்டியமாடும் பழங்குடிகள், வளர்ப்பு பிராணிகள்,குரங்குகள், குதிரைகள், விவசாயம், காட்டு விலங்குகள்,பறவைகள்... இப்படி பல தகவல்கள்  அறியலாம்.


  




வீடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் "இட்டல் அல்லது இடிடல்" எனும்  இந்த வகை சித்திரங்களை வரைகிறார்கள். சிவப்பு மற்றும் வெள்ளையில் உள்ள இவை தம் வீட்டை பில்லி சூனியங்களில் இருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.  இவற்றின் மூலமாக கொடும் நோய்களில் இருந்தும், தீய சக்திகளிடம் இருந்தும் தூய ஆன்மாக்கள் தம்மை பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.

கொடும் நோய்களிடம் இருந்தும் நல்ல விளைச்சல் கிடைக்கவும் வீட்டின் முன் ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

இந்தியாவில் இது போன்று பழமையான விஷயங்கள் தம்மை ஈர்பதாகவும், பாரம்பரியம் தொடரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சொல்கிறார் ஜேன்.


இன்னும் சில தகவல்கள் மற்றும் படங்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...

தொடர்புடைய பகுதி :

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) -பகுதி 2
Download As PDF

Tuesday, August 13, 2013

”ஙப் போல் வளை” என்றால் ஙே என்று முழிப்பது ஏன்?

தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு ”ங்கா..”.

தமிழின் சிறப்பெழுத்து "ழ”  வைப்போல இன்னொரு எழுத்து “ங”  இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம்.

சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு.

”ங போல் வளை “

        'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
        அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும்

sculptures by Antony Gormley University of oxford
 
இதை விளக்க தமிழறிஞர்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். 
ங இந்த எழுத்து பல கோணங்களை கொண்டது. அதன் கோணத்தின் ஒவ்வொன்றுக்கும் நிமிர், எதிர்ப்பு வந்தால் சாய்ந்துவிடு. மேலும் எதிர்ப்பா கீழ் நோக்கி வா, மறுபடியும் தலை எடுத்து வளைந்து பார், பின் கிட. நிமிர்ந்து நில் என்பதை தான் ங போல் வளைந்து கொடுக்க வேண்டும் என அவ்வை சுட்டி காட்டுகிறார்.

"திரு. நாஞ்சில் நாடன் இது பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
 ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும்.      ‘ங’ எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என.            மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான ‘ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். எடுத்துக்காட்டு – அங்கு, இங்கு, எங்கு, ஈங்கு, ஏங்கு, கங்கு, சங்கு, பங்கு, தங்கு, நுங்கு, வாங்கு, மங்கு, முங்கு, தங்கம், சுங்கம், கலிங்கம், பாங்கு, தூங்கு, நீங்கு, வாங்கு, வீங்கு, மூங்கில். "

உயிர்மெய் எழுத்தில் க வை அடுத்து ங, ஙா வைத் தவிர உள்ள அந்த வரிசையில் வரும் மற்ற எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லை. காலப்போக்கில் கரைந்து போய் விட்டது என்று சொல்லலாம்.
ஆனால் அரிச்சுவடியில் 216 எழுத்துகளின் பட்டியலில் மட்டும் ஒன்றாய் கலந்து இருக்கிறது. ”ஙே ” என்று முழிப்பதற்கும் அடுத்தவனை திட்டும் முதல் எழுத்தாக இன்னும் அழியாமல் உள்ளது.
Download As PDF

Monday, August 5, 2013

ஆண்மை அதிகரிக்க‌ செய்யும் மருந்துக்காக கடத்தப்படும் கடல்பல்லிகள்

கடல் குதிரை போன்ற ஒரு கடல் உயிரினம் "கடல் பல்லி"  இவை சாதாரணமாக நம் வீடுகளில் காணப்படும் பல்லியை போன்றது கடலில் மட்டும் காணப்படும் இவை இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இது "பைப் ஃபிஷ்" என்றே குறிப்பிடப்படுகிறது.


இந்த உயிரினம் இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக சீனா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தபட விருந்த உலர வைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் சமீபத்தில் பறிமுதல் செய்யப் பட்டது.





மீன்களை பிடிப்பது போல இவைகளை பிடிப்பதில் என்ன பிரச்சனை ?சரி இவைகளை தடை படுத்தப்பட வேண்டிய அவசியம் என்ன ?

கடல் குதிரை மற்றும் கடல் பல்லிகள் இந்திய வனவிலங்கு பாது காப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த கடல்பல்லிகள், கடற்சூழலியலில் முக்கியமானதொரு பங்காற்றுவதால் அவற்றை பாதுகாக்கவேண்டியது அவசியம் என்கிறார் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் கடல்வாழ் உயிரியல் வல்லுநர் டாக்டர் தீபக் சாமுவேல்.


இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால் பிடிக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட இந்த கடல்பல்லிகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்றாக இந்த கடல்பல்லிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்காகவே இவை சட்டவிரோதமாக இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப் படுவதாகவும் தமிழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தமிழக மீனவர்களிடமிருந்து ஒரு கிலோ உலரவைக்கப்பட்ட கடல்பல்லிகள் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும், இங்கிருந்து இவை இலங்கைக்கு சென்றபிறகு அதன் மதிப்பு ஒரு கிலோவுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாயாக அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விரிவான தகவலை இந்த  BBC  ஒலிப்பதிவில் கேட்கலாம்.
(இயக்குவதற்கு முன் ஒலி அளவை குறைத்துக்கொள்ளவும்...)

 
Source of News BBC dated 11 July 2013 17:29 ஜிஎம்டி


Download As PDF

Thursday, August 1, 2013

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (இறுதி பகுதி)

விளைச்சல் விநோதம்

துவரை,வாழை,ஆரஞ்சு,பப்பாளி இவைகளில் இஞ்சக்சன் ஊட்ட மருந்து முறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்தார்.  (குட்டை ரக) விதையில்லா ஆரஞ்சு, பப்பாளி இன்றைக்கும் விவசாயிகள் மத்தியில் ஒரு ஆச்சர்யமான விளைச்சல்.

வாழைப்பழம் போல் ஆரஞ்சை தோலுரித்து அப்படியே சுவைக்கலாம்(விதை இல்லை)
திருமதி.லக்ஷ்மிபாய் அம்பேத்கர்,திரு.அம்பேத்கர்,திரு.ஜி.டி.நாயுடு

அவருடைய கோபால் பாக் இல்லத்தில் 18-1/2 அடி உயர சோளச்செடி 26 கிளைகளுடன் 39 கதிர்கள் உருவாக்கி அசத்தினார். 11 அடி உயரம் வளர்ந்த ராட்சச பருத்தி செடி 24 ராத்தல் பருத்தியை கொடுத்தது. ஜெர்மானியர் இதற்கு “நாயுடு காட்டன் “ என்று பெயர் வைத்தனர். இந்த டெக்னாலஜியை ரகசியமாக வைத்திருந்தார் ஆனால் ஒரு கட்டத்தில் அமெரிக்க பல்கலைக் கழக நண்பருக்கு தொழில் ரகசியத்தை சொல்லி விட்டார். நினைத்திருந்தால் பெருந் தொகைக்கு அந்த இரகசியத்தை விற்றிருக்கலாம்.

பின்புலத்தில் 15 அடி உயர தினை மற்றும் 11 அடி உயர பருத்தி செடி

ஒரு துவரை செடி ஆறடி உயரமும் எட்டு அவுன்ஸ் துவரையும் கொடுக்கும் ஆனால் நாயுடு வளர்த்த செடி ஒரு மரமாக வே வளர்ந்தது அது 65 அவுன்ஸ் துவரை கொடுத்தது.

ராட்சச செடிகளை பார்த்து பிரமித்த சர்.சி.வி.ராமன் இது "தாவரவியல் விநோதம் (Botanic marvels) " என்று குறிப்பிட்டார்.

"மினி கார்"

இந்தியாவிலேயே முதன் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை இவரால் ஆரம்பிக்கப்பட்டது(நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ்).  பல தொழில் ஸ்தாபனங்கள் இவரை பின்பற்றின. தற்போது வரைக்கும் கோவையின் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு வடநாட்டில் கிராக்கி உண்டு முக்கிய காரணம் அதன் உழைப்பு மற்றும் தரம்.

அரசாங்க அனுமதி அப்போது மறுக்கப்பட்டதால் வெளிநாட்டு கம்பெனிகளுடனான ஒப்பந்தங்களை இவர் நிறைவேற்ற முடியாமல் போனது. அப்போதே நானோ கார் ரகங்கள் (டாட்டா நானோ), அதிக மைல் ஓடக்கூடிய டயர்கள். மெசின் டூல்கள், ரேடியோ இப்படி பலதும் அடங்கும். ஆட்டோமொபைல் சம்பந்தமாக இங்கிலாந்தில் இருந்து இங்கு வந்து இவரிடம் குறிப்பு எடுத்து கொண்டு போனார்கள்.

தற்போதும் சொல்லப்படும் ஒரு கருத்து இந்நாடு ஒரு ஜீனியஸை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.


முனிசிபல் தேர்தலில் இருந்து பாராளுமன்ற தேர்தல் வரை போட்டியிட்டார். காமராஜரை எதிர்த்து போட்டியிட்டவர் தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டபின் நண்பருக்கு அனுப்பிய தந்தி “சக்ஸஸ்புல் டிபீட் இன் எலெக்‌ஷன்”
எதிர்த்து நிற்பவருக்கே ஓட்டு போடுங்கள் என்றால் இவர் எப்படி ஜெயிப்பது? அப்படிபட்ட வித்தியாசமான மனிதர்.

பல கருவிகளுக்கு இவர் பேடண்ட் உரிமை கோரவில்லை.

1948 லேயே பூமிக்கடியில் எலெக்ரிக் வயர்கள் (கன்சீல்ட்) இணைப்பு கொண்ட கட்டிடம் இன்றும் கண்காட்சியாக உள்ளது.

விருந்தின் முதல் சாப்பாடு இவருக்கே பரிமாரப்பட வேண்டும் ருசி இல்லாத உணவு விருந்தினருக்கு கொடுக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு.

கண்டுபிடிப்புகள் :

நுணுக்கமாக அளவிடும் கருவி

இரும்பு சட்டத்தில் உள்ள நசுக்கல்களையும், வெடிப்புகளையும் கண்டறியும் கருவி (magno flux testing unit)

விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்டுகள்

மோட்டாரின் அதிர்வை சோதிக்கும் இயந்திரம் (auto vibrator testing machine)

காசை போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் (slot singing machine)

ஆரஞ்சு பிழியும் கருவி

மண்ணென்னையில் ஓடும் மின் விசிறி

''1952 ல் 70 ரூபாய்க்கு ரேடியோ''

கேமரா லென்ஸ் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர்

எடிசன் செய்து பார்க்க முயன்ற ஒரு கருவி  “வோட் ரெக்கார்டிங் மெசின்” அப்படி ஒரு கருவியை நாயுடு உருவாக்கிக் காட்டினார். இது தலையிட்டு கெடுக்க முடியாத (tamper-proof) பாதுகாப்பு தன்மை கொண்டது.

ஒரு அங்குலத்தில் இருநூறில் ஒரு பாகம் (1/200) அளவுள்ள மெல்லிய பிளேடு. இதற்கு நார்வே நாட்டு உருக்கு பயன்படுத்தப் பட்டது. இதை கொண்டு ஓர் ஆண்டிற்கு சேவ் செய்து கொள்ளலாம். நார்வே நாட்டு உருக்கை தருவிக்க அரசு அனுமதி தரவில்லை.

கையடக்க எலெக்ட்ரிக் ரேஸர்

நீரிழிவு நோய்க்கு ஒரு மருந்து

இது போல எண்பதிற்கு அதிகமான கண்டுபிடிப்புகள்.

டீசல் எஞ்சின், கார், ரேடியோ தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவ ஆசைப்பட்டார். அரசின் அனுமதி மறுக்கப்பட்டதால் அப்படியே கைவிடப்பட்டன.


பல்துறை வித்தகர் ஜீ.டி நாயுடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.




இவரின் கோவை அருங்காட்சியகத்தில் 1930 ' நாற்பதுகளில் பயன் படுத்த  பட்ட எலக்ட்ரிக்,எலெக்ட்ரானிக்,கம்யூட்டர்கள்,போன்கள், கேமராக்கள், ப்ரொஜெக்சன் டி.விக்கள்,கம்யூட்டர்கள், பிரிண்டர்கள், டைப்ரைட்டர்கள், கார்கள்,(all in one) இயந்திரங்கள்...இன்னும் பல்வேறு பொருட்கள் இவரின் கலெக்சனில் உள்ளது நம்மை பிரமிக்க வைக்கிறது. நேரில் பார்க்க முடியாதவர்கள் சிலவற்றை இந்த லிங்கில் பார்த்து ரசிக்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்: பகுதி 1, பகுதி 2

source of book : உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு by மெர்வின் (1985)
source of some photos: http://site4preview.in/gm/index.php   
Download As PDF

நீச்சலில் சாதனை புரியும் தர்மபுரி தமிழாசிரியர் !

ஒன்றரை வயது குழந்தை நீச்சலடிப்பதை யுடியூபில் போட்டிருந்தார்கள். சாதனைக்கு வயதில்லை,  சாதனை புரிபவர்களுக்கு எதுவுமே தடையில்லை என்று தான் சொல்லவேண்டும் ஏனென்றால்,  சாதனை புரிந்தவர் என்று சொன்னாலே தடைகளை தாண்டியவர் என்றே பொருள் கொள்ளப்படும். மாணவர்களின் ஹீரோவான தர்மபுரி தமிழ் ஆசிரியர் வாழ்க்கையை எதிர்கொள்ள பயக்கும் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல். அவரை பற்றி கடந்த ஞாயிறு (28.7.2013) தினமலரில் வெளியான பேட்டி இதோ...

நீச்சல் வீரர் என்பது வெறும் திறமையல்ல..அதற்கும் மேல் 









Download As PDF

Tuesday, July 30, 2013

கணிப்பொறி என் தோழி

கம்ப்யூட்டரில் முதல் அனுபவம் குறித்து அழைப்பு கொடுத்திருக்காங்க எழில் இந்த பதிவு மூலமா நானும்  “ஜோதியில்” கலக்கிறேன்.

கணிணி பற்றி ஒவ்வொருவரும் எழுதும் தொடரும் சுவாரசிமாக இருக்கிறது என் நினைவுகளையும் தூண்டி விட்டது. வலையுலகத்தை சுற்ற புதியவகை ரேவர் வாகனத்திற்கு எம்மையும் அழைத்து வெள்ளை கொடி அசைத்து துவக்கிவிட்ட ராஜி அவர்களுக்கு நன்றி.


கணிப்பொறி பற்றி உயர்நிலை படிக்கும் போது அறிந்திருந்தாலும் அதைப்பற்றிய பெரிய ஆர்வம் இல்லை அதை பார்க்கும் வரைக்கும்.  சர்வஜன மேல் நிலைப்பள்ளியில்  படிக்கும் போது PSG தொழில் நுட்ப கல்லூரியில் கண்காட்சியில் வைத்திருந்தார்கள்.  அப்போது கம்யூட்டர் படிப்பவர்கள் எனக்கு அந்தஸ்துள்ளவர்களாக தெரிந்தார்கள் இது நமக்கு எட்டாக் கனி என்று மனதில் பதிந்து விட்டது.  தொழிநுட்ப படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக அது தவிர்க்கப்பட்டது. எனக்கு ஆலோசனை கூறுவதற்கும் யாரும் இல்லை.  கோவை அரசு கலைகல்லூரியில் கணிதப்பிரிவில் எனது படிப்பை தொடர்ந்தேன்.  அங்கு போர்ட்ரான் ஒரு பாடமாக இருந்தது. ஆனால் அப்போதும் கண்பொறியை தொட்டுப் பார்த்ததில்லை.  டைப்ரைட்டர் இயந்திரம் இதற்கு மாற்றாக (ஙே?!) என் கண்ணில் பட்டது. நண்பனின் தூண்டுதலால் டைப்ரைட்டர் கிளாசில் சேர்ந்து குறுகிய காலத்தில் ஹை ஸ்பீட் வரைக்கும் தேர்ந்தேன். அக்கவுண்டன்ஸி படிக்கல இருந்தாலும் ஒருத்தர்கிட்ட அரிசி கடை கணக்கு எழுதி கற்றுக்கிட்டேன்.

கல்லூரி படிப்பு முடிஞ்சு வேலை தேடிய போது நண்பன் உதவியால் ஒரு டெக்ஸ்டைல் மெசின் கம்பெனியின் முகவரி கொடுத்து பார்க்க சொன்னார்கள்.

அங்கே நாலஞ்சு கம்யூட்டர் இருந்துச்சு. காலர தூக்கி விட்டுக்கிட்டேன். ஆனா வேலை அங்க கிடையாது (போச்சா ! போச்சா ! ) அந்த ஆபிஸோட ப்யூன் இன்னொரு முகவரிக்கு என்னை கூட்டிட்டு போனான்.  அது அந்த கம்பெனியோட தொழில் முறை ஏஜெண்டு அட்ரஸ். அந்த பங்களாவின் மேல் மாடி அறைதான் ஆபீஸ். விசாரிப்பு அப்புரம் டெஸ்டு பத்து நிமிசத்தில பட படன்னு அடிச்சு கொடுத்தேன். வேலை கிடைத்தது ஆனா அங்கே டைப்ரைட்டர் ஒரு போன் மட்டுமே இருந்துச்சு.

முதலாளி பக்கத்தில ஒரு நாய் ஜெய்ஜாண்டிக்கா காலடியில் படுத்து கிடந்தது.
நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்க தயங்கி, தயங்கி இதுதான்  “ஆபீஸா சார்”

ஆமாம்பா ஏன்?... நாளைக்கு புதன் கிழமை நல்ல நாளு ஒன்பதரை மணிக்கே வந்துருன்னாரு மொதலாளி.“சொக்கா உனக்கு வந்த சோதனைன்னு !” மனசில நினைச்சுகிட்டேன். ஆனா குடும்பசூழ்நிலை எந்த வேலைன்னாலும் சேர அப்ப ரெடியா இருந்தேன்.

அங்கே தான் ஆங்கிலத்தில் போன்ல பேசி பழகி கிட்டேன்.  அடுத்த மாசத்திலேயே கம்ப்யூட்டரும் வந்திடுச்சு கூடவே ப்ரோக்ராம் படிச்ச பெண்ணும் வேலைக்கு சேர்ந்தாள்.  என் கண்ணு அந்த கம்யூட்டர் மேலேயே இருந்திச்சு, அட நம்புங்க !.. ஏன்னா அவள விட கம்யூட்டர் எனக்கு அழகா தெரிஞ்சது.

அவளுக்கு நடந்த உபசரிப்பு யப்பா! என் காதில் புகை வராத குறைதான். அவள் காஃபி டீ எல்லாம் சாப்பிட மாட்டாளாம் பால் தானாம்.

அவள் எப்படி மோனோக்ரோம் (கருப்பு வெள்ளை) கம்ப்யூட்டரை இயக்குகிறாள் என்பதையும் டாஸ் கமெண்ட்ஸ் களையும் மனப்பாடம் செஞ்சுகிட்டேன்.  அப்ப விண்டோஸ்-3 கிடையாது. ஒவ்வொரு புரோக்ராம் இருக்கும் டைரக்டரிக்கு உள்ள நுழைஞ்சு அந்த exe பைல்லோட பெயர தட்டினா புரோக்ராம் உள்ள நுழைஞ்சிடலாம் வெளியேறுவதற்கு பைல் எக்ஸிட் இப்படி  C :\ ப்ராம்ப்டிற்கு திரும்ப வந்திடலாம்.

சமயம் கிடைக்கும் போது எப்படியோ தட்டு தடுமாறி சி ப்ராம்டில் இருந்து புரோக்ராம் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தெரிந்து கொண்டேன். அப்பதான் சிக்கல் ஆரம்பமாச்சு அடுத்த நாள் கம்யூட்டர் பூட் ஆகல. அவள் என்மேல் புகார் சொன்னாள் சரியா சட்டவுண் செய்யாம ஆப் செஞ்சதால் பூட் பைல் கரப்ட் ஆகி பூட் ஆகல.

மொதலாளி சொன்னாரு நீ டைப்ரைட்டர் மாதிரி பட படன்னு தட்டியிருப்ப ஃபெதர்,  ஃபெதர் டச் கொடுக்கனும்னாரு.


அப்ப ஏற்பட்ட கோபம்,  அது வெறியா மாறி எப்படியும் கம்ப்யூட்டர் கத்துகிறதுன்னு முடிவு பன்னினேன்.  முதலாளி வெளியூர் போகும் சந்தர்பமெல்லாம் எனக்கு அங்க தான் ஸ்டே.  அவர் வாங்கி வெச்சு இருக்கும் கம்யூட்டர் புத்தகங்கள மேஞ்சேன்.  அதுக்கப்புரம் முதலாளியே ஆச்சர்யப்படும் படியா...வேர்ட்ஸ்டார், வேர்ட், லோட்டஸ்123, க்யூப்ரோ(அப்போதைய எக்ஸெல்), ஃபாக்ஸ்புரோ, டேலி எல்லாம் புகுந்து வருவேன். எல்லாம்  “பழகு தப்பு நடந்தா பரவாயில்ல” (trial and error) பாணி தான். அந்த பெண்ணா அவள் ஏற்கனவே ஒருத்தர காதலிச்சு இருந்ததால திடீர் கல்யாணம் செஞ்சுகிட்டா அப்பீட்டு !.

அதிலிருந்து கம்ப்யூட்டர் எனக்கு ஒரு தனி உலகத்தை காட்டிச்சு, அவள் என் கேர்ல் ப்ரெண்ட் ஆனாள்?.  ஏன் தோழன் இல்லையா ? உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.  நம் நாட்டு நதிகள் எல்லாம்(பெரும்பாலும்) பெண்களின் பெயரால இருக்குது அதனாலயே என்னமோ  கம்ப்யூட்டர் எனக்கு பெண்ணாகவே தோற்றம் அளிக்கிறது. இது வரைக்கும் எனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு விவரிக்க முடியாத ஒன்று. எனக்கு பல விசயங்கள அவள் கற்றுக் கொடுத்திருக்கிறாள், இன்னும் நான் கற்றுகொண்டே இருக்கிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், அவளின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

அப்ப ஆபீஸ்ல நடந்த ஒரு சம்பவம். புதுசா இரண்டு பெண்கள் வேலைக்கு சேர்ந்தாங்க. ஈட்டி க்கு ஆபிஸில் எல்லா இடங்களுக்கும் போகும் சுதந்திரம் இருந்தது. (ஈட்டியா..அந்த வளர்ப்பு நாய்ங்க!) நான் வெளி வேலையா... (என்ன வேலையா லெட்டர் போஸ்டிங் !) போய்ட்டு திரும்பி வந்தேன் ரெண்டு பேரும் கைய பிசஞ்சுகிட்டு நிக்கறாங்க நம்ம ஹீரோ பேக்ஸ் தாள கடிச்சு பிச்சு சுருட்டி முன்னங்காலுக்கடில வைச்சுகிட்டு வாலை ஆட்டி  “இப்ப..என்ன செய்வீங்க.. இப்ப..என்ன செய்வீங்க..” என்ற ரேஞ்சில நின்னிட்டு இருக்காரு.

ஹா..ஹா..ஹா.. என்னால சிரிப்ப அடக்க முடியல, ஏன்னா இந்த அனுபவம் எனக்கு முன்னமேயே ஏற்பட்டிருக்கு.

கொரியன் பேக்ஸ் மெசின்ல பேக்ஸ் தகவல் தாளில் பிரிண்ட் ஆகி வெளிய வரும் முடிஞ்சதும் கட்டரினால் கட் செய்யப்பட்டு விழும்.

மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழ அதை கவ்வி துவம்சம் செஞ்சிட்டான் நம்ம ஹீரோ ஈட்டி. அவருக்கு எந்த பேப்பர் கீழே விழுந்தாலும் அவருக்குதான் சொந்தம். (ஹி..ஹி)

பேக்ஸ் மெசினில் காலிங் டேட்டா எடுத்து சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு போன போட்டு பிரச்சினைய தீர்தேன்.

பின்னாளில்,  “க்யூலிங்க்” மூலமாக கம்யூட்டரில் இருந்து எளிதாக பேக்ஸ் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் உபயோகித்தேன்.

கலர் மானிட்டர் வந்த பின்னாடி  நிறுவனத்தின் விற்பனையை விரிவு படுத்தும் நோக்கில்  மியூசிக்கோட “ஸ்லைட் ஷோ” பவர்பாய்ண்டில் தயாரிச்சு கொடுத்தேன் என் திறமையை வெளிக்காட்டுவதா அமைஞ்சது.

நூறு பேருக்கு சர்குளர் அனுப்பனும்னா ஃபாக்ஸ்புரோ புரோக்ராம் மூலமா ப்ரிண்டரில் லேபில் தயாரிச்சு பின் பொது லெட்டரை வேர்ட் மெய்ல் மெர்ஜ் மூலமாக பிரிண்ட் எடுத்து தயார் செய்து கொடுப்பேன்.

ஒரு வருட அக்கவுண்ட்சை ப்ரிண்ட்ல போட்டுட்டு டீ சாப்பிட வெளிய போய்டு வந்து எடுத்துப்பேன்.   (tvs printer ம் tally software ம் இந்தியரின் திறமைக்கு ஒரு சான்று) டேலி சொல்யூசன்ஸ் திரு.கோயங்கா(S.S. Goenka ) அவர்களால் துவக்கப்பட்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் (NASSCOM) பெற்றுள்ளது


இன்னொரு சமயம் டேலியில் (tally) போட்டு வைச்சிருந்த ஒருவருட கணக்கு பேக்கப் எடுத்து வைக்காததால திரும்ப போடும் படியா ஆகிடுச்சு போர்ட் நைட்ல (14 நாள்) திரும்ப ரெடி செஞ்சு குடுத்தேன்.

எதுக்கு சொல்றேன்னா வேலையில் தவறு ஏற்படறது சகஜம் அதை ஏற்றுக் கொண்டு எப்படி தீர்கறது என்று பார்க்கவேண்டும். அதை சந்திக்கும் தைரியத்தை நாம் இழக்க கூடாது.

கம்யூட்டர் மேலிருந்த ஆர்வமே இன்றைக்கும் என்னை வலைப்பதிவு எழுதத்தூண்டியது.. எழுதி வருகிறேன். (ஸ் அப்பா...டா!)

நட்புடன்,
கலாகுமரன்.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)