Followers

Monday, April 29, 2013

காற்றாலையில் இருந்து ஓரே சமையத்தில் மின்சாரமும்..தண்ணீரும்..பிரான்ஸ் எஞ்சினீயரிங் நிறுவனம் (EOLE water) ஒன்று காற்றிலிருந்து ஒரே சமயத்தில் காற்றாலை மூலம் மின்சாரமும் தண்ணீரும் உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

அபுதாபியில் (UAE) 76 அடி உயர காற்றாலை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனுடைய இறக்கைகள் வேகமாக சுழலும் போது காற்றை உள்ளிழுக்கிறது.  கம்பரசர்கள் கொண்டு காற்றின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி குளிரூட்டும் எந்திரங்கள் மூலமாக மேன்மேலும் குளிரவைக்கப்படுகிறது.  அதானால் நீர் துளிகள் தொடர்ந்து உருவாகிறது

இந்த நீர்த்துளிகள் குழாய் மூலமாக நீர் தொட்டியில் சேகரிக்கப்படுகின்றன. ஒரு மணிநேரத்தில் 16 காலன் தண்ணீர் சேகரமாகிறது. ஒரு நாளைக்கு 265 காலன்கள் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள். இது காற்றின் வேகம் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை பொருத்தது.


பாலை வனப்பகுதிகளுக்கு இக்கருவி பயனுள்ள ஒன்று.

=====================================================
உசைன்போல்ட் போல வேகமாக ஓடும் ரோபோ இயந்திரம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். இவர் நூறு மீட்டரை 28 mph வேகத்தில் கடந்தார். ரோபோ அவரை விஞ்சியது 28.3 mph.

=======================================

இங்கிலாந்தில் காணப்படும் பென் ராப்ட் (Fen Raft spider) எனும் சிலந்தி வகை பூச்சிகளை மட்டும் இன்றி சிறிய வகை மீன்களையும் பிடித்து உணவாக்கிக்கொள்கிறது. இந்த ராட்சச வகை சிலந்தியின் கால்களில் எக்கச்சக்க நுண்ணிய மயிர்கால்கள் இருப்பதால் இது நீரின் மேல் இலகுவில் நடக்கிறது. இங்கிலாந்தில் அருகிவரும் சிலந்தி இது.========================================
குயின்ஸ்லாந்தில் காணப்படும் 200 ஆண்டு காலம் உயிர்வாழும் ஆமை.----------------------------------
”சீன சிறுத்தை” பரிசு பெற்ற புகைப்படம்.


----------------------------------
”ருவாண்டா சிம்பன்சி” இரட்டை சிம்பன்சி குட்டிகள் பிறப்பது அரிது. .

Download As PDF

Monday, April 22, 2013

புவிதினம் என்ற ஒன்று எதற்கு ?

சர்வதேச புவி தினம் (EARTH DAY ) இன்று  22 ஏப்ரல் 2013 உலக அளவில் கொண்டாடப்படுகிறது. சிலர் இல்லை மார்ச் 20 தானுங்க கொண்டாடனும் என்று சொல்கிறார்கள் ஏன்?

ஏப்ரல் 22 ல் கொண்டாட வேண்டும் என்றும் இதை 1970 ல் முதலில்
ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவைச்சேர்ந்த கைலார்ட் நெல்சன்(
(Senator Gaylord Nelson) அப்போது முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 20ல் என்று சொல்லப்படுவதற்கு அந்த நாளில் பூமியின் வட கோளார்த்ததிலும், தென்கோளார்த்ததிலும் இரவும் பகலும் சமமாக இருக்கு என்கிறாங்க. அதுமட்டும் இல்லை வட பாதியில் வசந்தகாலமும், தென்பாதியில் இலையுதிர் காலமும் தொடங்குது.

எந்த நாளிலும் இந்த பூமிக்கு நம்மால் ஏற்படுத்தும் கெடுதலை மட்டுப் படுத்தவேண்டும் என்பதை உணர வேண்டும்.

இந்த தினந்திற்காக ஒரு கொடியும் உண்டு(Ecology flag),பாடலும் (Earth Anthem)உண்டு. எப்போது தொழிற்புரட்சி (18 ம் நூற்றாண்டு) ஏற்பட்டதோ அப்போதிருந்து சுற்று சூழல் பாதிப்படைந்தது. 


மனித இனம் தொடங்கிய காலத்திலிருந்து இந்த பூமி பலப் பல விதங்களில் மனிதனால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.  இதை மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம் (Anthropogenic) எனலாம்.

மக்கள் தொகைப் பெருக்கம் இந்த பூமி மனிதர்களால் பந்தாடப்படுவதற்கு காரணமாயிருந்தது என்பது பல காரணங்களில் ஒன்று.

மனிதன் தான் தான் உயர்ந்தவன் என்று பெருமிதம் கொள்கிறான் அதோடு நின்று விடுவதில்லை எல்லாவற்றையும்..எல்லாவற்றையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு வர ஆசைப்படுகிறான். விழைவு தாறுமாறான அழிப்புகள்...காடுகளை அழிக்கிறான் நகரத்தை ஏற்படுத்துகிறான்..நகரத்திலும் மரங்களை நாசப்படுத்துகிறான்.

அதிக உரங்கள்,வேதி மருந்துகள் கொண்டு ஏற்படுத்திய பசுமைப்புரட்சி என்பதெல்லாம் ஒரு எல்லைக்குமேல் இந்த பூமியை ஏதும் விழையாத மலட்டு நிலமாக்கிவிட்டன என்பதே உண்மை.

புதுப் புது கருவிகள் பலப்பல டெக்னாலஜி இந்த பூமியை இதுள்ள ஜீவ ராசிகளை நம்மையும் சேர்த்து படாத பாடு படுத்துகின்றன என்பதும் மறுக்க இயலாது.

நாம் இந்த பூமியில் இருந்து பெறும் வளங்கள் பல ஆனால் இந்த பூமிக்கு செய்யும் கைமாறு என்னவோ சிதையாத நெகிழி குப்பை கூழங்களை  (பிளாஸ்டிக்), அணு கழிவுகளை, சாயக்கழிவுகளை, ஓசோன் ஓட்டை ஏற்படுத்தும் மாசுக்கள், நச்சுபுகைகளை, இன்னும் பலப் பல.

சாலை விரிவாக்கத்திற்காக அனேக மரங்களை சாய்த்துவிட்டு இன்று பருவ மழை பொய்த்துப்போய் பரிதவிக்கிறது கோவை மாநகர்.கடந்த சனிஅன்று(20.4.2013) சில தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ”எர்த் டே 2013 “ கோவை ப்ரூக் ஃபீல்ட் மாலில் ஏற்படுத்தினர்.  ஐநூறு பேர்களுக்கு மேல் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நம் நண்பர்கள்.. கோவை வலைப்பதிவர்களும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து பங்கெடுத்தனர்.


குழந்தைகளுக்காண ”பூமி அன்னை” ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருப்பாடல்கள், நாடகங்கள், நாடனங்கள் கலை கட்டின.

கோவை கவிஞர் சரளா அவர்கள் பேச்சிலிருந்து சில மேற்கோள்கள்

இந்த பூமி தன் பசுமையை இழந்து பழுப்பாகும் போது மனிதன் தன் இறுதி எல்லைக்கு சென்று விடுவான்.  கட்டிடங்கள் மட்டுமே பச்சை வர்ணம் கொண்டு இருக்கும் சூழலை தடுக்கவேண்டும். பாக்கெட் தண்ணீர் போல எதிர் காலத்தில் பாக்கெட் காற்றினை சுவாசிக்கும் காலம் வராமல் நாம் போராட வேண்டிய கட்டம் இது.  வருங்கால சந்ததியினருக்கு நாம் பூமி பாதுகாப்பை உணர்த்தவேண்டும்.

”நான் எப்போதும் துணிப்பையை மட்டுமே உபயோகிக்கிறேன் “ வலைப்பதிவர் எழில் அருள்
(இ.வ : கோவை ஆவி,கவிஞர் சரளா, எழில், ஓவியர் ஜீவா(தேசிய திரைப்பட நூல் விருது பெற்றவர்)
(நடுவில் நிற்பவர் வலைப்பதிவர் ஜீவா)

(வலதுபுறம் நான் தான் !)

(போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சர்டிபிகேட்)தனி மனிதனின் சில...சில சுயக் கட்டுப்பாடுகள் :

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பாலிதீன்,பிளாஸ்டிக் உபயோகத்தை நிறுத்துதல், தம் வாகனத்தில் அதிக நச்சு புகை வெளியேறாமல் தடுத்தல், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்ப்பது,நீர் நிலைகளை மாசுபடுத்தாது இருத்தல், நம் குழந்தைகளுக்கு இயற்கை பாது காப்பை உணர்த்துதல், இவையே, இப்பூமிக்கு நாம் செலுத்தும் பிரதிபலன்.

Download As PDF

Tuesday, April 16, 2013

ட்ரோபா வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..


சீன தொல்பொருள் ஆராய்சியாளர் ச்சூ-பு-அய் (Chu Pu Tei ) இந்த  வட்ட (Dropa Stones) கல்தட்டுகளை 1937 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு குகையில் கண்டுபிடித்தார்.

மேற்படி, குகை சீன-திபெத் எல்லையில் உள்ள பயன்கரஉலா (BayanKara-Ula) என்ற சிகரத்தில் உள்ளது.

அந்த குகையில் பல சவக்குழிகள் இருந்தன. ஒவ்வொரு சவக்குழியிலும் மூன்றடி உயரமே உள்ள எழும்புக்கூடுகள் இருந்தன. ஒவ்வொன்றின் மேலும் ஒரு அடையாளம் போல் இந்த வட்ட கல் தட்டுகள் இருந்தன.

வட்ட தட்டில் சீரான வட்டத்துளை மையத்தில், மையத்தில் இருந்து சுழற் சுற்று கோடுகள் இருந்தன. (பழைய இசைத் தட்டுகள் போல.) பார்பதற்கே அவை கோடுகள் போல இருந்தன ஆனால் அவை (மைக்ரோ) மிக நுண்ணிய புரியாத குறியீட்டு எழுத்துக்கள்.இவருக்கு பின், பெய்ஜிங் தொல்லியல் அகாடமியை சேர்ந்த பேராசிரியர் சும்-உம்-நூய் (Professor Tsum Um Nui, of the Beijing Academy for Ancient Studies ) இதுபற்றிய சில விளங்கங்களை கொடுத்தார். இந்த எலும்பு கூடுகள் வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் பெரிய தலைகளை கொண்ட குள்ளமான அசிங்கமான தோற்றத்தினர்.  மேலும் அந்த வேற்றுகிரக வாசிகளை ட்ரோபா மலைவாழ்மக்கள் தங்கள் மூதாதையர் என நம்பியதாகவும் தெரிகிறது.  அதனாலேயே இந்த வட்டக்கல் தட்டுகள் ட்ரோபா கற்கள் என பெயரிடப்பட்டது. ஏதோ விபத்து அல்லது ஏதேனும் காரணத்தினால் இறந்து போயிருக்கலாம் என்றும் சொன்னார்.

ஆரம்பத்தில் இந்த மண்டை ஓடுகள் மனிதக் குரங்கினுடையது (ஏப் வகை) என்றே நினைத்தனர்.

பின்னர்,இந்த தட்டுகளின் காலங்கள் 10000 முதல் 12000 வருடங்களுக்குள் இருக்குமென கணிக்கப்பட்டது.

அந்த குகைசுவர்களில் பூமி, உதய சூரியன்,நிலா,நட்சத்திரங்கள் இன்னும் ஏதேதோ புரியாத குறியீடுகள் இருக்கிறதாம், ஒரு வரைபடம் போல.


வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கி இருக்க வேண்டும் என்றும் அப்போது அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டது. இந்த வேற்று கிரக வாசிகள் இக்குகைகளில் இருந்த பழங்குடிகளை கொன்று விட்டார்கள் அதோடு  அவர்கள் திரும்பி போக வாகனம் இல்லாமல் இறந்து போயிருக்கலாம். சுற்றியிருந்த மலைவாழ்மக்கள் அவர்களை ட்ரோப்பாக்கள் என்கின்றனர் ( கர்ண பரம்பரைக் கதைகளும் உண்டு !! ).

1965 ல் மேலும் 716 வட்டத்தட்டுகள் இந்த குகையில் கிடைத்ததாம்.

தட்டுகளில் கோபால்ட் மற்றும் பல உலோக கூறுகள் உள்ளன. மின்சாரம் செலுத்தப்பட்டால், இதனுடாக கடத்தப்படுகிறது. வெவ்வேறு குறியீடுகள் ஒவ்வொரு தட்டிலும் இருப்பதால் இது ஏதேனும் சர்க்யூட்டாக இருக்குமோ ? என்ற சந்தேகமும் உள்ளது.

(oscillograph )ஆசிலோகிராப் கொண்டு சோதனை செய்யப்பட்டதில்
” ஹம் “ என்ற ரிதம் மட்டுமே உணரப்பட்டது.

1965 உடன் இதைப்பற்றிய ஆராய்சிகள் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

படத்தில் காணப்படும் இந்த கற்கள் இப்போது இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்போதைய கால கட்டத்தில் (1938ல்) இவை அனைத்தும் ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன் பின் என்ன ஆயிற்று ? தெரியவில்லை ஆனால் இந்த நிழற்படம் மட்டுமே எஞ்சியுள்ளது.

இரும்புத்திரை நாடும், பெருஞ்சுவர் நாடும் இரகசியம் காத்தன. விடை தெரியாத மர்மங்களில் இதுவும் ஒன்று.
Download As PDF

Sunday, April 14, 2013

தமிழின் தொன்மை ஒரு இலட்சம் ஆண்டுகளா ?

”கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு” தமிழ் தமிழரை பற்றி நாம் எந்த அளவு அறிந்திருக்கிறோம்.  இன்னும் இவ்வுலகில் நாம் எவ்வளவோ அறிந்து கொள்ள வேண்டியவை இருக்கின்றன. சித்திரை திங்கள் முதல் நாளில் (14-04-2013) இக்கட்டுரை தமிழை தமிழனைப்பற்றிய பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.  இக்கட்டுரையை இன்றைய இளம் தலைமுறையினருக்கு இப்பதிவின் மூலம்  கொண்டு செல்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.கோவை ஞானி அவர்களால் தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் ? கட்டுரைகள் தொகுப்பு 2  எனும் கட்டுரை தொகுப்பு 2006ல் வெளியானது  என்பதை அறிகிறோம்.

வலைத்தளத்தில் கட்டுரையை வெளியிட்ட திரு.பொள்ளாச்சி நசன், முகநூல் நண்பர்கள் ஆசிரியர் பக்கம், ராஜேந்திரன் தமிழரசு அவர்களுக்கு எமது நன்றி!
குறிப்பு : தகவல்களை சிதைக்காமல் கட்டுரையை அப்படியே பகிர்ந்துள்ளேன். இக்கட்டுரை சில இடங்களில் குறிப்பிடப்படுபவை வரலாற்று தகவல்களே அன்றி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக பொருள் கொள்ள வேண்டாம். 
                                                                                             - கலாகுமரன்
==================================================================தமிழின் வயது 2000 ஆண்டு 3000 ஆண்டு என ஏலம் போட்டு வருகின்றனர்.

பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.

முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.

ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

நீ...நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.

என் கண் - நா புலன், உன் கண் - நின் புலன், அவன் கண் - அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 - 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்

எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ற வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.

தென் அமெரிக்கத் தமிழர்

அன்னை என்ற அருமையான அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதை அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 - 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.

எனவே 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.

==================

எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி' யின் அற்புதங்கள்.

உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" -
சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.

"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"
- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.

"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிற்குரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"
- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.

"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"
- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.

"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.

இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி

என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.

களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).

தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்

"நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.

தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.

பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice

காரணப் பெயராகிய புதிய சொற்கள்

தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்

திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.

* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.

S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடாய் (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)

* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா

* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்

* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.

* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.

ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்

இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.

"கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.

கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.

"ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?

(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!
(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!

(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.

தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.

ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு...
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை

ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.

சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...

"இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".

"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.

தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.

தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.

தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்?
உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?

இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.

தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.

கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்.

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

 ( ஈஸ்டர் தீவு சிலைகளின் மீது உள்ள குறியீடை இப்பதிவில் ”ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்” காணலாம்)

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் தன்னிகரற்று திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.

12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.

13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.

14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.

16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. இசுலாம், கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம் ஏற்கவே இல்லை.

17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.

18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரை, கொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் - என்று கூறுவது எத்தனை பெரிய பொய்.

19. ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம். ஆனால் இந்த நெறியற்ற கூட்டம், வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி, வரலாற்றுப் புரட்டாக, தமிழரை - இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் - என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்த பொய்மையாகும். இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ?

20. தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன. மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. எத்தனை வையாபுரியர்களும், அறவாணர்களும், எஸ்.ஆர்.ராவ்களும், மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்கு என்றென்றும் கைகொடுக்கிறதே?

எழுச்சிக்குச் சில காரணங்கள்.

ஒருநாடு எழுச்சியுற்று, தனிநாகரிகம் பெற்ற நாடாகத் திகழ வேண்டுமானால்...

1) கல்வியில் சிறந்தோங்கியிருக்க வேண்டும்.

2) பெண்கல்வி, பெண்ணுரிமை பேணப்பட வேண்டும்.

3) சிறந்த அரசர்கள் அல்லது அமைச்சர்கள், தானைத் தலைவர்கள் மிகுந்திருக்க வேண்டும்.

4) ஏற்றுமதிப் பொருட்கள் இருத்தல் வேண்டும்.

5) உலக நாடுகளின் நடுநாயகமாக இருத்தல் வேண்டும்.

6) திரைகடல் ஓடி ஒடிச் சம்பாதிக்கும் வணிகர் குழு இருத்தல் வேண்டும்.

7) அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள் பல்கிப் பெருகி இருக்க வேண்டும்.


முற்காலத்தில் மிளகாய் கிடையாது. மிளகுதான் உறைப்புச் சுவையைத் தரக்கூடியது. ஒரு மூடை மிளகு ஒரு சில நேரங்களில் ஒரு சிறு மூடை தங்கத்திற்கு ஈடாக விளங்கியது. மிளகின் மருத்துவக் குணங்கள் மிளகின் விலையை எப்போதுமே உச்சத்தில் இருக்க வைத்தன. அன்று ரோமாபுரி அவையின் பிளினி அலறிய அலறல் இன்றும் நம் செவியில் விழுகின்றதே. - ஐயோ எங்கள் நாட்டுப் பொன்னும் பொருளும் தமிழகத்திற்குப் பெருவாரியாகச் செல்கின்றதே - தமிழகத்திலிருந்து அறுசுவைப் பொருள்கள் பல நாடுகளுக்குச் சென்றன. மருந்து, மருந்துப் பொருள்கள், ஆடைகள், சாயமிடப்பட்ட ஆடைகள், உருக்காலான வாளும், வேலும், மிளகும் பிற வாசனைப் பொருள்கள், யானைத்தந்தம் இன்ன பிற பொருள்கள் உலகெங்கும் சென்றன. இதனால் தமிழன் வளம் பெற்றான். தமிழ் நாகரிகம் வளம் பெற்றது. நிலை பெற்றது. உலக நாகரிகங்களின் தாய் நாகரிகம் தமிழ் நாகரிகம் அல்லவா? மற்ற நாகரிகங்கள் கட்டுச் சோற்று நாகரிகங்கள். எனவே 300 - 400 ஆண்டுகளில் நிலை குலைந்தன. தமிழ் நாகரிகம் மட்டுமே 5000 ஆண்டுகள் நின்று நிலைத்தது.

வீழ்ச்சிக்குச் சில காரணங்கள்.

1) தமிழ் உணர்வு அற்றுப் போயிற்று.

2) கலப்பு மன்னர்கள் ஆட்சியும் (குலோத்துங்கன்) வேற்று மன்னர்கள் ஆட்சியும் (விசயநகர மன்னர்கள்) தோன்றின.

3) வேற்று மத மன்னர்கள் ஆட்சி (மதுரை சுல்தான்கள், ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் ஆட்சி) தோன்றியதால் தமிழன் உணர்வற்றுப் போனான்.

4) ஆரியக் கூத்தாடிகளையும், அவர்களது அபத்தக் கருத்துகளையும் ஏற்றமை.

5) தமிழ் மன்னர்களைத் தமிழ் மன்னர்களே காட்டிக் கொடுத்தல் (மாலிக்கபூரை வரவேற்றல், மதுரை வீரபாண்டியன்- சுந்தர பாண்டியன் போராட்டம்)

6) குறிப்பிட்ட சிலரை வீர வழிபாடு செய்தல், அடிமைப்புத்தி ஏற்பட்டதன் விளைவு இது. திரைப்பட நடிகனையும், நடிகையையும் வழிபட நேர்ந்தது.

7) சாதி சமயப் பிணக்குகள், வலங்கை - இடங்கை போராட்டம் இன்னபிற தமிழனைத் தமிழனாகக் காட்டாமல், சாதி சமயப் பிரிவினை உடையவனாகக் காட்டுதல்.

8) அரபியக் கொள்ளைக் காரர்களால் தமிழரது கடல் வாணிகமும் கடல் ஆதிக்கமும் குன்றத் தொடங்கல்.

9) இடைத் தரகராக மாறிய அரேபியரும், ஐரோப்பியரும் தமிழர் வணிகத்தைச் சீரழித்தல்.

10) கல்விக் கூடங்கள் பாமரருக்கு இல்லை.

11) மேற்கல்வி பூணுால் பார்ப்பனனுக்கு மட்டுமே.(ராமப்பையனின் குளறுபடிகள்)

12) போர் முறையில் துப்பாக்கியும், பீரங்கியும் ஆங்கிலேயரின் திறமையை உயர்த்தியது. தமிழர் வீரத்தின் தரத்தைத் தாழ்த்தியது.

13) மிளகாய் மலிவாக வந்தது. மிளகின் ஆதிக்கம் குன்றியது.

14) ஐரோப்பியர் இயந்திரங்கள் மூலம் துணிகளை நெய்து இந்தியத் துணிவணிகத்தை வீழ்த்தினர்.

15) இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், போன்ற பல முயற்சிகளுக்கு ஆங்கிலேய கும்பினியர்களும் அதன்பின் வந்த ஆங்கிலேயரும் பல்வேறு தடைகள் விதித்தனர். எந்தெந்த காரணங்களால் தமிழ் நாகரிகம் உச்சம் பெற்றதோ, அதற்கு மாறான காரணங்களால் தமிழ் நாகரிகம் வீழ்ச்சியுற்றது.

சுழலும் இயற்கையின் விதி.
===========================

இயற்கை எப்பொழுதும் முடங்கிக் கிடப்பதில்லை. அஃது ஒரு சுழற்சியின் பாற்பட்டது. சுழல் விதிப்படி கீழிருப்பது மேலே வரும். மேலே இருப்பது கீழே செல்லும். தற்காலிகமாகத் தாழ்ந்திருக்கும் தமிழ் நாகரிகம் மேலே வரவேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.

அன்று மிளகும் பிற வாசனைப் பொருட்களும் தமிழனின் வணிகக் களத்தைப் பெருக்கியது. இன்று.. கணிணியும் மென்பொருள் ஏற்றுமதியும் தமிழகத்திற்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு மாநாட்டில் பேசியதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். - கணினி இயற்கைக்கு ஒரு வரம். இன்னும் 50 ஆண்டுகளில் தமிழனின் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடும். மீண்டும் தமிழ் நாகரிகம் உலகில் அரங்கேறும். தமிழ் உணர்வு இப்போது 2 விழுக்காடு மட்டுமே உள்ளது. இதனை 5 விழுக்காடு ஆக்கிவிட்டால் தமிழ் நாகரிகம் மீண்டும் உச்சம் பெறும். கணினி தமிழகத்திலும் இந்தியாவிலும் பொற்காலத்தை உருவாக்கி உள்ளது. இதை மறுக்க முடியுமா? ஏன் மாற்றிவிடத்தான் முடியுமா? இன்னும் 50 ஆண்டுகளில் கணினி கை கொடுக்கும். அதன்பின் உயிரியல், உயிரி வேதியல், போன்றன மேலும் ஒரு 50 ஆண்டுகளுக்குத தமிழனுக்கு வரமளிக்கும். இலங்கைப் பிரச்சனையால் தமிழ் உணர்வு இன்னும் பல்கிப் பெருகும். மனநெருக்கம் மிகுதியாகும். கல்வி, மேலாண்மை, தத்துவம், மருத்துவம், மொழியியல் போன்ற சில துறைகள் தமிழ் நாகரிகத்திற்கு மேலும் சில ஐம்பது ஆண்டுகளுக்கு உதவி புரியும்.

Download As PDF

Thursday, April 11, 2013

ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்


பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு.
இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch  explorer )
வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது.

இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள்.  இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது.

10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

ஈஸ்டர் தினத்தில் (1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இவர்களின் கலாச்சாரமும் ஒரு புதிர். ஒரே வடிவமைப்பில் உள்ள இந்த கற்சிலை ஏன் எதற்காக என்ற கேள்விக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடிகள் உள்ளன.
30 முதல் 40 டன் எடையுள்ள 30 அடி உயரசிலைகளும் உண்டு.
முழு உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரைக்குமான சிலைகள் இவை.

உருவங்களின் சாயல் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சிலைகளின் பின் புறம் குறியீடு அல்லது சித்திர எழுத்துகள் செதுக்கப்பட்டு உள்ளன.

சில எரிமலை கற்களால் வடிவமைக்கப்பட்ட சிலைகள்.

சிலைகளின் அமைப்பை வைத்து இத்தீவில் இரண்டு இன பழங்குடிகள் இருந்திருக்கலாம் என உறுதிப்படுத்துகிறார்கள்.  சிலைகளில் ஒருவகை குட்டை காதுகளை கொண்டும் இன்னொரு வகை நீண்ட காதுகளை கொண்டும் இருக்கிறது.

நீண்ட காதுகளை கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கலாம்.  குட்டைகாதுகளை கொண்டவர்களை இவர்கள் அழித்திருக்க கூடும்.

இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் அல்ல பாலினீஸியன்கள்.
மூலக்கூறு (டிஎன் ஏ) ஒப்பீட்டின் படி பாலினீஸியன்களோடு ஒத்துப்போகிறது.
இவர்கள் சுமார் 400 A.D வாக்கில் இங்கு குடியேறி இருக்கலாம்.


சில எரிமலை வாய்ப்பகுதியில் தீவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளன. பல டன் கொண்ட இவை எப்படி நிறுவப்பட்டது என்பது அடுத்த மர்மம்.

ஈஸ்டர் தீவு தீவின் தொன்மையான பெயர் ரப்பாநூயி, 15மைல் நீளமும் 10மைல் அகலமும் கொண்ட  ஒரு முக்கோணத்தீவு, பரப்பளவு 163 சதுர கிலோமீட்டர்கள். சிலியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது.


இத்தீவில் சுமார் பதினோராயிரம் பழங்குடிகள் (பூர்வ குடிகள்) இருந்திருக்கலாம் எனவும்,ஐரோப்பியர்கள் நுழைந்த போது (1877) சில நூறு மட்டுமே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சில கணிப்புகள் :

இச்சமூகத்தில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் அல்லது நரபலி இருந்திருக்கிறது.

இந்த சிலைகள் தமது கடவுளுக்கு பிரியமானது என்று நிறுவப் பட்டிருக்கலாம்.

வேற்று கிரக வாசிகளுக்கும் இத்தீவிற்கும் தொடர்பு இருந்து இருக்கவேண்டும்.

சக்கரைவல்லிக் கிழங்கு இங்கு இருந்திருக்கிறது 2300 மைல் தொலைவில் சிலியில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

வானியல் பற்றிய அவர்கள் அறிந்திருந்தனர்.

மிக கனமான இந்த கற்சிலைகளை எப்படி உயரமான இடங்களில் கொண்டு சென்று நிறுத்தினர் என்பதே ஆச்சர்யமான ஒன்று. இது குறித்து பல ஆண்டுகளாக பலவிதமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன ( Easter Island Statue Project.) உருளைகள், நீண்டகயிறுகள், சறுக்கு பலகைகள் இப்படி இவற்றை கொண்டு சோதித்து பார்க்கப்பட்டன. சுழற்றி சுழற்றி இவை கொண்டுசெல்லப்பட்டிருக்குமா?


(ஆராய்சியின் விழைவாக சில சிலைகள் உடைந்து போய் இருக்கின்றன)

ஹவாய் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிகன்ட் என்பவரும், கலிபோர்னிய மாகாண பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் கார்ல் லிப்போ மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சர்ஜிகோ ராபு இவர்கள் 12 ஆண்டுகால தொடர் ஆய்வின் இறுதியில் கற்சிலைகள் இப்படித்தான் நிறுவப்பட்டிருக்கும் என்ற முடிவிற்கு வந்ததோடு 18 பேர்களை கொண்டு செயல்படுத்தியும் காட்டினர். (இதற்கு முன் பல குழுக்கள் இது குறித்த உறுதியான முடிவை எட்ட வில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)

இந்த சிலையின் அடிப்பாக அரைவட்ட அமைப்பு, ஈர்ப்பு விசைக்கு தகுந்தாற்போல் செதுக்கப்பட்ட அளவீடு இவை சிலைகளை அவர்கள் நகர்த்தி செல்ல முடிந்திருக்கிறது.


12 அடி உயரமுள்ள 5டன் மோய் சிலையை, இக் குழு படத்தில் உள்ளது போல் மூன்று நீண்ட கயிறுகள் சிலையின் தலையில் கட்டப்பட்டு சிலையின் பின்புரம், பக்கவாட்டின் இருபுறமும் ஏற்படுத்தும் அசைவுகள் இந்த சிலையை பல மீட்டர்கள் தூரத்திற்கு உருளைகள் இன்றி நகர்த்தி காட்டியது.
                                                             விளக்கப்படம்

முன்பு கடின நார்போன்ற ஒருவகை புற்கள் இங்கு இருந்திருக்கின்ற அவற்றை அக்கால மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். (இப்போது இல்லை)
                                 கார்ல் லிப்போ மற்றும் பேராசிரியர் டெரிகன்ட்

பேராசிரியர் டெரிகன்ட் [Terry Hunt ] எழுதிய The Statues that Walked: [Unraveling the mystery of Easter Island ] எனும் புத்தகத்திற்கு அமெரிக்க தொல்லியல் சொசைட்டியின் 2011 ஆம் ஆண்டிற்கான விருது கிடைத்துள்ளது.

 காணொளி

Download As PDF

Thursday, April 4, 2013

விடைதெரியா மர்மங்கள் (புனித உடற்போர்வை,கல்தட்டு,ராட்சஷனின் படிமம்)

நேபாள கல் தட்டு

வேற்றுகிரக வாசிகள்,பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம். (ஏலியன்ஸ் இருக்குதா? இல்லையா? சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம்... அது வேறு)

மாயன்கள் காலத்தில்(இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம். நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது. 12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது. இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?) சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி..இப்படி பல வடிவங்கள் உள்ளன.அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா?  மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்..  இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது.

ராட்சஷனின் படிமம் Fossilized giant

டிசம்பர் 1895ல் பிரிட்டிஷ் ஸ்டேண்டேர்ட் சஞ்சிகையில் (the British Strand magazine) ஒரு செய்தி வெளியாகி இருந்தது. 12 அடி உயரமுள்ள ஒரு இராட்சஷ மனித உருவத்தின் படிமம் அயர்லாந்தில் கண்டறியப்பட்டது என்பதுதான் செய்தி. அந்த உருவத்தின் உயரம் 12 அடி இரண்டு அங்குலம், மார்பின் சுற்று ஆறு அடி ஆறு அங்குலம், கைகளின் நீளம் நான்கடி ஆறு அங்குலம், வலது காலில் ஆறு விரல்கள் (பைபிளில் சொல்லப்படும் ராட்சசனோ ? என்ற விளக்கம் அளிக்கபபட்டது..விடைதெரியா மர்மம்)

புனித உடற்போர்வை (Shroud of Turin)

யேசு கிருஸ்துவின் இறப்பின் பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று சொல்லப்படும் லினன் துணியின் காலத்தை கணிக்க ரோடியோ கார்பன் பரிசோதனை 1988ல் செய்யப்பட்டது. ஒருசாரர் இவ்வகைத்துணி 1260 மற்றும் 1390 களில் நெய்யப்பட்டிருக்கலாம் என்றனர்.  பின்னர் 2005 ல் நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ரைமான் ரோஜர் (raymond Rogers) என்ற ஓய்வு பெற்ற வேதியல் ஆராய்சியாளர் இது குறித்த மற்றுமொரு பரிசோதனையை செய்தார். இவரின் ஆய்வுப்படி 1300 மற்றும் 3000 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.

செக்கோந்தோ பீயா என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் நெகட்டிவ் மூலமாகவே முதன் முதலில் உருவம் தெளிவாக தெரிந்தது (1898) உலகிற்கு அறியக்கிடைத்தது. இரத்தம் உறைந்த பகுதிகள் கைகள் சிலுவையில் அறையப்பட்டதற்கான தடயம் உள்ளது. இப்புனித துணி நெருப்பில் இருந்து எரிவதிலிருந்தும் தப்பியதாகவும் அறிகிறோம். கருப்பு வெள்ளை ஒளிப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரக் காட்சியகத்தில் உள்ளது.

கிருஸ்துவின் உருவம் எப்படி இந்த துணியில் மெல்லியதாக தெரிகிறது என்பது ஆச்சர்யமானது. இந்த ஆய்வு மதத்தவரை புண்படுத்தும் என்பதாலோ? அல்லது பரிசோதனை பிரியோசனம் இல்லை என்பதாலோ விடப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஆகக்கூடி இது குறித்த சர்ச்சைக்கு முடிவு கிட்டவில்லை. புலப்படா மர்மங்களில் இதுவும் ஒன்று. Download As PDF

Monday, April 1, 2013

உள்ளுணர்வு விலங்குகளுக்கும் உண்டா?


குழந்தைகள் பெரியவங்க போல நடந்துகொள்வதை பார்க்கிறோம். வீட்டிலுல்ல பாட்டிகள் குழந்தையின் நடவடிக்கையை பார்த்து இவன் தாத்தா மாதிரியே நடந்துகிறான் ! என்றோ...அப்பன் புத்தி தப்பாம பிறந்திருக்கு ! இப்படி பட்ட பேச்சுகளை கேட்டிருக்கலாம்.

இம்மாதிரி பழக்கங்களை நாம் பரம்பரை பழக்கம் என்றோ பரம்பரை நினைவு என்றோ சொல்லலாம்.

அப்படியானால் நம்மூதாதையிடமிருந்து நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மிடம் சில பழக்கங்கள் தொத்திக்கொள்கிறது.

பசி, பாலுணர்வு, தற்காப்பு இவை முக்கியமான முதன்மையான உள் உணர்வுகள் எனலாம்.  அதைலும் பல வரையறைகள் உண்டு.  உதாரணமா தற்காப்பு என்பதில் சண்டையிடும் குணம், தான் தனது,பாதுகாப்பு.. இப்படி பல பிரிவு இருக்கு.

அந்த மனோபாவம் ஏற்படக்காரணம் உள்ளுணர்வு.  உள் உணர்வு மரபணுக்கள் (ஜீன்கள்) மூலமாக பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது.

”உள்ளுணர்வு உணர்ச்சி செயல்களிலிருந்தும் உணர்ச்சிகளில் இருந்தும் தனித்து பிரிக்க முடியாதது “ என்று சொல்கிறார்கள்.

சில விசயங்கள் நமக்கு போதிக்கபட வில்லை என்றாலும் இந்த உள்ளுணர்வின் பேச்சை சில சமயங்களில் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

உடல் உறுப்பு சம்பந்தமான உள் உணர்வுகள் நம்மைவிடவும் விலங்குகளிடம் அதிகம்.  நம்மிடம் பல சமயங்களிலும் பகுத்தறிவு என்பது அந்த உள் உணர்வை தடுத்துவிடும். விலங்குகளில் அப்படி இல்லை.

முட்டையில் இருந்து கோழி குஞ்சு வெளிவந்ததும் நடக்க கற்றுக் கொள்கிறது,ஓடுகிறது, குப்பையை கிளருகிறது.

குளவி கூட்டை கட்டிக்கொள்வது எப்படி?  அப்படி கூட்டை கட்டிய குளவி முட்டையோடு (கூட்டுபுழு) சேர்த்து மயக்கமடைய செய்த புழுவையும் வைத்து மூடிவிடுகிறது. முட்டையில் இருந்து வளரும் குஞ்சிற்கான ஆகாரம் புழு தயாராக இருக்கிறது. அது பறக்கும் நிலையை அடையும் வரை அந்த புழுதான் உணவு.

சில காட்டு முயல்கள் அறுங்கோண வடிவில் குழிகளை தோண்டி வசிக்கிறது.

தூக்கணாங்குருவியும், ஊர் குருவியும் ஒன்றுபோல் கூட்டை கட்டுவதில்லை.

தேனீ சீரான அறுங்கோண வடிவ அறைகளை கொண்ட கூட்டை அமைக்கிறது.

மனிதன் மிருகமாக நடந்து கொள்கிறான் என்றால்..அவனுள் இருக்கும் உணர்ச்சி மட்டுமே வேலை செய்கிறது. (மூதாதையர் விலங்குபோல் வாழ்ந்த காட்டுவாசிதானே !)  அப்போது பகுத்தறிவு வேலை செய்வதில்லை.

விலங்குகளுக்கு மனிதனை போன்ற பகுத்தறிவு இல்லை அது தன் மூதாதையரை போன்றே நடந்து கொள்கின்றன (பார்க்கப்போனால் அது மனிதனைவிடவும் மனிதாபிமானம் மிக்கது) எல்லாமே ஜீன் செய்யும் வேலை!

நாயின் உறங்கும் நடவடிக்கையை கவனித்திருபீர்கள். ஒரு சுற்று சுற்றிவிட்டே படுக்கிறது.  இது காட்டில் இருந்த காலத்தில் அதன் மூதாதையிடமிருந்து பெற்ற பாதுகாப்பு பழக்கம். (அப்ப கம்பத்தை கண்டா ?  ன்னு  கேட்காதீங்க)


நம் உள்ளுணர்வை சில சமயங்களில் நாய் உணர்ந்து கொள்கிறது அதன் படி நடப்பதையும் கவனித்திருக்கலாம். (அதனால் தானோ வீட்டம்மாவை விடவும் /விட்டுகாரரைவிடவும் அவர்களோட பெட் அவங்களுக்கு பிடிச்சிருக்கா ? )

இந்த காணொளியில் கொட்டையை உடைக்க கற்றுக்கொண்ட குரங்கு (brown capuchin) ( பரிணாம வளர்ச்சிக்கொரு ஆதாரம்)


உள்ளுணர்வு பற்றி இன்னும்...தொடர்கிறேன்...


தொடர்புடைய பதிவு :

உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாவின் எலும்புக்கூடு

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)