<<முதல் பகுதியை படிக்க இங்கு சொடுக்கவும்>>
கோயில் கட்டிடக்கலைக்கு பல்வேறு அம்சங்கள் அல்லது நுணுக்கங்கள் தேவைப்படும். கட்டிட சாஸ்திரங்கள் அடுத்து கலை நுணுக்கம் இவை இரண்டும் அடிப்படை எனலாம். சிலை மற்றும் கற்தூண்கள் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் கல்வகை மற்றும் கற்பாறையின் ஸ்திரதன்மை முக்கியமானது.
சிதம்பரம் கோவில் சிலைகள், தூண் அமைப்பு, இடவமைப்பு, தத்துவங்கள், இப்படி பல ஒப்புமைகளை உடையதாக பேரூர் கோயில் திகழ்கிறது அதனாலே இது "மேலை சிதம்பரம்" என அழைக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் காரணம் அக்கோவிலின் நிர்மானித்தவரும் அக்குழுவும் இங்கும் பணிசெய்திருப்பது தான்.
கனகசபை மண்டபம் :
நடராஜரும், சிவகாமசுந்தரியும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த கனகசபை மண்டபத்திற்கு தனி வரலாற்றுச் சிறப்பு உண்டு.
பேரூர் கோவிலின் கனகசபை மண்டபம் கி.பி. 1625 முதல் 1659 வரை தொடர்ந்து 34 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்ப்பட்டது. அதாவது சுமார் 382 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சகோதரர் அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது.
இந்த கனகசபை மண்டபம் 36 தத்துவங்களை உணர்த்தும் வகையில் 36 தூண்களை கொண்டது. மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. இவை பல்வேறு கதைகளை சொல்கிறது.
சபை மண்டபத்தின் மேற் கூரையின் மையத்தில் நான்கு கற் சங்கிலிகள் மற்றும் அதன் உள்வட்டத்தில் தாமரை வடிவம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. இந்த கற் சங்கிலியில் பல ஆண்டுகளுக்கு முன் ஊஞ்சல் கட்டி விக்கிரக வழிபாடு நிகழ்த்தப்பட்டு வந்தது. அப்படி ஊஞ்சல் ஆட்டப்படும் போது கூரையின் தாமரை வடிவ கற்சிலையின் நடு மொட்டு கரகரவென சுழழும் என கேள்விப்பட்டுள்ளேன். அதனாலெயே இது "சுழழும் தாமரை" என அழைக்கப்படுகிறது. கற்சங்கிலி ஒரு கண்ணி உடைந்த பிற்பாடு இப்பூசை வழிபாடு வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.
கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. (இச்சிற்பங்களின் படங்களை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்)
கற்தூண் சிற்பங்களில் ஒரு உண்மை சம்பவத்தின் ஆதாரம் ஒன்று அறியக் கிடைக்கிறது.
இன்னொரு சிறப்பு மேற்சொன்ன தோற்றம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அச்சு அசலாக எதிர் எதிரெ இடது வலது நிலைகளுடன் பார்பவர்களை பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மகோன்னதத்தை பறைசாற்றுகிறது.
மேற்சொன்ன கற்தூண் சிற்பங்கள் நான்கில் ஒன்று உடைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. அதாவது அந்த தூணின் குதிரையின் இருகால்கள் மற்றும் குதிரைவீரனின் இரு கால்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறது. மேற்சொன்ன மற்ற எவையும் இல்லை.
இது பற்றிய காலங்காலமாக ஒரு உண்மை சம்பவம் சொல்லப்பட்டு வருகிறது.
ஒரு இளைஞன் தம் தகப்பனாரை தேடி நெடுந்தூரத்திலிருந்து பேரூர் வருகிறான். சிறு குழந்தையாக இருக்கும் போதே இங்கு சிற்பம் செய்ய வந்த தன் தகப்பனை பார்பதற்காக இங்கு தேடி வருகிறான்.
அப்போது இக்கோயிலின் கனகசபை மண்டபம் முக்கால் பாகம் முடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
சிற்பக்கலை தெரிந்த அவன் இங்கேயே பணி செய்து சிற்பியான தமது தந்தையை தேட முடிவு செய்கிறான். பல நாட்கள் சென்ற நிலையில் மேற்சொன்ன கற்றூணை காண்கிறான். அந்த தூணில் ஒச்சம் இருப்பதாக கூறுகிறான். அதாவது நன்கு ஆராயாமல் சிலை வடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தூணில் நீரோட்டம் மற்றும் மிகச்சிறு தவளை போன்ற தேரை கல்லினுள் இருப்பதாக அருதியிட்டு கூறுகிறான். (கல்லினுள் தேரை என்பது மாம்பழத்தினுள் வண்டு எப்படியோ அது போல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்)
இது போன்று ஒச்சம் உள்ள கற்கலில் சிலை வடிக்க கூடாது என்பது மரபு. பிற்காலத்தில் இந்த தூண் பழுதடையும் அல்லது சுவாமி சந்நிதியில் கல்லினுள் உயிர் உள்ள சிலை இருக்ககூடாது.
இந்த சர்சையின் இறுதியில் இந்த கல் தூண் உடைக்கப்படுகிறது. அதிலிருந்து தேரை இருப்பது நிரூபிக்கப்பட்டது. அந்த இளைஞன் தேடிவந்த தந்தை வேறு யாருமல்ல அழகாத்திரி நாயக்கர் என்று சொல்கிறார்கள். இந்த இளைஞன் பிரதி உபகாரமாக தன் கையால் செய்து கொடுத்த சந்தன மரத்தாலான கலை வேலைப்பாடு மிக்க பெரிய ஜன்னல் இன்றும் கலை நயத்தை பறைசாற்றுகிறது.
<<சுவடுகளைத் தேடி ...தொடர்கிறது >>
கோயில் கட்டிடக்கலைக்கு பல்வேறு அம்சங்கள் அல்லது நுணுக்கங்கள் தேவைப்படும். கட்டிட சாஸ்திரங்கள் அடுத்து கலை நுணுக்கம் இவை இரண்டும் அடிப்படை எனலாம். சிலை மற்றும் கற்தூண்கள் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் கல்வகை மற்றும் கற்பாறையின் ஸ்திரதன்மை முக்கியமானது.
ஓவியம் மற்றும் நாட்டிய முத்திரைகள், பாவம், நளினம், கணக்கீடு, கற்பனை திறன், நுணுக்கம், முக்கியமாக பொருமை, கலையின் மேலான பக்தி இவையெல்லாம் இல்லாமல் ஒரு கற்சிலை உயிர்ப்பு தன்மை பெருவதில்லை.
சிதம்பரம் கோவில் சிலைகள், தூண் அமைப்பு, இடவமைப்பு, தத்துவங்கள், இப்படி பல ஒப்புமைகளை உடையதாக பேரூர் கோயில் திகழ்கிறது அதனாலே இது "மேலை சிதம்பரம்" என அழைக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் காரணம் அக்கோவிலின் நிர்மானித்தவரும் அக்குழுவும் இங்கும் பணிசெய்திருப்பது தான்.
கனகசபை மண்டபம் :
நடராஜரும், சிவகாமசுந்தரியும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த கனகசபை மண்டபத்திற்கு தனி வரலாற்றுச் சிறப்பு உண்டு.
பேரூர் கோவிலின் கனகசபை மண்டபம் கி.பி. 1625 முதல் 1659 வரை தொடர்ந்து 34 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்ப்பட்டது. அதாவது சுமார் 382 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சகோதரர் அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது.
இந்த கனகசபை மண்டபம் 36 தத்துவங்களை உணர்த்தும் வகையில் 36 தூண்களை கொண்டது. மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. இவை பல்வேறு கதைகளை சொல்கிறது.
சபை மண்டபத்தின் மேற் கூரையின் மையத்தில் நான்கு கற் சங்கிலிகள் மற்றும் அதன் உள்வட்டத்தில் தாமரை வடிவம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. இந்த கற் சங்கிலியில் பல ஆண்டுகளுக்கு முன் ஊஞ்சல் கட்டி விக்கிரக வழிபாடு நிகழ்த்தப்பட்டு வந்தது. அப்படி ஊஞ்சல் ஆட்டப்படும் போது கூரையின் தாமரை வடிவ கற்சிலையின் நடு மொட்டு கரகரவென சுழழும் என கேள்விப்பட்டுள்ளேன். அதனாலெயே இது "சுழழும் தாமரை" என அழைக்கப்படுகிறது. கற்சங்கிலி ஒரு கண்ணி உடைந்த பிற்பாடு இப்பூசை வழிபாடு வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.
கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. (இச்சிற்பங்களின் படங்களை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்)
"முன்னங்கால்கள் இரண்டை தூக்கி கொண்டுள்ள மூர்க்கமான குதிரையின் மீது ஒரு வீரன். குதிரை தூக்கிய கால்களின் கீழே சிறுத்தையுடன் போரிடும் மற்றொரு வீரன். அவ்வீரன் ஒருகையில் கேடயம் மறுகையில் இருக்கும் வால் சிறுத்தையின் உடலில் புகுந்து மறுபுறம் வெளிப்படும் அதன் முனை"
இன்னொரு சிறப்பு மேற்சொன்ன தோற்றம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அச்சு அசலாக எதிர் எதிரெ இடது வலது நிலைகளுடன் பார்பவர்களை பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மகோன்னதத்தை பறைசாற்றுகிறது.
மேற்சொன்ன கற்தூண் சிற்பங்கள் நான்கில் ஒன்று உடைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. அதாவது அந்த தூணின் குதிரையின் இருகால்கள் மற்றும் குதிரைவீரனின் இரு கால்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறது. மேற்சொன்ன மற்ற எவையும் இல்லை.
இது பற்றிய காலங்காலமாக ஒரு உண்மை சம்பவம் சொல்லப்பட்டு வருகிறது.
ஒரு இளைஞன் தம் தகப்பனாரை தேடி நெடுந்தூரத்திலிருந்து பேரூர் வருகிறான். சிறு குழந்தையாக இருக்கும் போதே இங்கு சிற்பம் செய்ய வந்த தன் தகப்பனை பார்பதற்காக இங்கு தேடி வருகிறான்.
அப்போது இக்கோயிலின் கனகசபை மண்டபம் முக்கால் பாகம் முடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
சிற்பக்கலை தெரிந்த அவன் இங்கேயே பணி செய்து சிற்பியான தமது தந்தையை தேட முடிவு செய்கிறான். பல நாட்கள் சென்ற நிலையில் மேற்சொன்ன கற்றூணை காண்கிறான். அந்த தூணில் ஒச்சம் இருப்பதாக கூறுகிறான். அதாவது நன்கு ஆராயாமல் சிலை வடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தூணில் நீரோட்டம் மற்றும் மிகச்சிறு தவளை போன்ற தேரை கல்லினுள் இருப்பதாக அருதியிட்டு கூறுகிறான். (கல்லினுள் தேரை என்பது மாம்பழத்தினுள் வண்டு எப்படியோ அது போல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்)
இது போன்று ஒச்சம் உள்ள கற்கலில் சிலை வடிக்க கூடாது என்பது மரபு. பிற்காலத்தில் இந்த தூண் பழுதடையும் அல்லது சுவாமி சந்நிதியில் கல்லினுள் உயிர் உள்ள சிலை இருக்ககூடாது.
இந்த சர்சையின் இறுதியில் இந்த கல் தூண் உடைக்கப்படுகிறது. அதிலிருந்து தேரை இருப்பது நிரூபிக்கப்பட்டது. அந்த இளைஞன் தேடிவந்த தந்தை வேறு யாருமல்ல அழகாத்திரி நாயக்கர் என்று சொல்கிறார்கள். இந்த இளைஞன் பிரதி உபகாரமாக தன் கையால் செய்து கொடுத்த சந்தன மரத்தாலான கலை வேலைப்பாடு மிக்க பெரிய ஜன்னல் இன்றும் கலை நயத்தை பறைசாற்றுகிறது.
<<சுவடுகளைத் தேடி ...தொடர்கிறது >>
தென்னிந்தியா முழுவதும் அன்னியர்களின் ஊடுருவலை முறியடித்து ஆன்மீக
ReplyDeleteஆட்சி செய்தவர்கள் நாயக்க மன்னர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது.