வெல்த் ஃப்ரெம் வேஸ்ட் - பள்ளிகளில் வைக்கப்படும் ஒரு போட்டி.
எந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டாலும் நமக்கு எப்படியும் ஒரு பரிசு அல்லது முதல் மூன்று பரிசுகளில் ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவரும், மாணவியும் நினைக்கிறார்கள். சரி இது சரியானது தானே என்கிறீர்கள். ஆனால் நமக்கு பரிசு கிடைக்காமல் போனால் ? என்று சந்தேகத்துடன் கலந்து கொள்ளும் போதுதான் தோல்வியின் முதல் படியில் கால் வைப்பதாக அர்த்தம். ஆனால் நாம் இந்த போட்டியில் கலந்து கொள்வோம் பரிசு கிடைப்பதும் கிடைக்காததும் இரண்டாம் பட்சம் என்று மனதை பக்குவப்படுத்தி கொள்ளும் போது அடுத்த முறை வெற்றிக்கான் முதல் படியில் கால் வைத்துள்ளோம் என பாஸிடீவ் அப்ரோச் தான் நல்லது. தோல்வி எதனால் ஏற்பட்டது என்பது அடுத்த கட்ட நடவடிக்கை.
வெல்த் ஃப்ரெம் வேஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட ஆறாம் வகுப்பு மாணவி திவ்யாநிவேதிதா தனது அணுபவத்தை நமக்கு சொல்கிறார்.
வெல்த் ஃப்ரெம் வேஸ்ட் - இதப்பத்தி என்ன சொல்ல ... வேஸ்டா போன திங்ஸ் வெச்சு ஒரு யூஸ்புல் திங் செய்யரது. இந்த போட்டில கலந்துக்கும் போது எந்த ஐடியாவும் இல்ல...
அப்புரம் எங்க அப்பாட்ட கேட்டேன் நீயுஸ் பேப்பர வைச்சு ஒரு மேஜிக் ஃபேன் செய்யலாம்னாரு. எனக்கொண்ணும் புரியல அவரே எனக்கு எக்ஸ்பிலைன் பன்னார்.
ம்..எங்க அம்மாவா.. இதுக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரம் ...இந்த பக்கமே வரமாட்டங்க.
இந்த மேஜிக் விசிறி நீங்க நினைக்கிறமாதிரி ரொம்ப கஸ்டமெல்லாம் கிடையாது. என்ன மேஜிக்னா முதல்ல இத பார்க்க ஒரு பைப் மாதிரி இருக்கும் விரல்ல பிடிச்சு வெளியே இழுத்தா அழகா ஒரு விசிறி வெளில வரும். பைப்பை உள்ளே தள்ளினா விசிறி மடிஞ்சி உள்ள போயிரும். அவ்லோதான்.
இத எப்படி செய்யரது ? எங்கப்பா அப்புரமா சொல்லுவார்.
முக்கியமா நா சொல்லவர்ரது என்ன..ன்னா..
இத ஸ்கூல்ல செஞ்சி வெச்சதும் யாருமே இத கண்டுக்கலா..
சரி நல்லால்ல போலன்னு விட்டுட்டேன்.
ஜட்ஜா இருந்த மிஸ் கிளாஸ்க்கு வந்தாங்க.
அப்புரம் ஏதோ பேசும்போது எ பிரண்டு
"மிஸ், திவ்யா செஞ்சிருந்த மாடல் நல்லா இருந்ததில்லன்னா."
அப்பதா மிஸ், " என்ன செஞ்சிருந்தே ன்னாங்க.."
நா எடுத்து அது எப்படி வேல செய்துன்னு செஞ்சி காட்டினேன்.
மிஸ், " ரொம்ப நல்ல யுஸ்புல் திங் " இத அப்பவே நீ எக்ஸ்பிளைன் செய்யாம விட்டுட்டியேன்னாங்க.
இப்ப நான் என்ன சொல்ல வந்தேன்னா நாம, எதை செஞ்சாலும் மத்தவங்களுக்கு அதோட உபயோகம், இல்லேன்னா... ஸ்பெசல் பத்தி சரியா டிஸ்பிலே செய்யலேன்னா தோல்விதான்.
எப்படியோ டீச்சரோட ரெக்கமண்ட்ல தேர்ட் பிரைஸ் கிடச்சிச்சு
அவ்வ்ளோதான் மூச்சிறைக்க சொல்லி முடித்தாள்.
*********
என்னோட டேர்ன், மேஜிக் விசிறி எப்படி செய்வது என்பதை இங்குள்ள PDF பைலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அரவிந்த் குப்தா என்பவர் குழந்தைகளுக்காண இது மாதிரியான பல விசயங்களை அவரோட வளைத்தளத்தில் காணொலியுடன் பல ஆண்டுகளாக எழுதி வருகிறார். பல அவார்டுகள் அவரை தேடி வந்தன. நான் கண்ட வரையில் குழந்தைகளுக்கு, மாணவ மாணவியருக்கு இம்மாதிரியான அறிவியல் பூர்வமான இந்திய வளைத்தளத்தை காண்பது அரிது.
அந்த முகவரி :
http://www.arvindguptatoys.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !