இந்த வார (18.4.2012) ஆனந்த விகடன் இதழுடன் இணைப்பு என் விகடனில் வலையோசையில் எனது வலைப்பக்கம் குறித்து எழுதியுள்ளார்கள்.
என்விகடன் கோவை எடிசன்..ஈரோடு,திருப்பூர்,நீலகிரி,சேலம்,நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளை உள்ளடக்கியது.
என்னைவிடவும் சந்தோசப்பட்டவர்கள் என் அம்மா, மனைவி மற்றும் மகள்.
புத்தகம் படிக்கும் பழக்கம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஆரம்பிக்கிறது. (...பாடபுத்தகம் அல்ல) ஆனா முக்கியமா புத்தகம் படிக்கனும்கர ஆர்வம் சுய சிந்தனையா இருந்தாலும் யாரவது ஒரு தூண்டுதல் காரணமா இருக்கும். எனக்கு சின்ன வயசுலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை தூண்டியவர் ஆசிரியரான எனது தந்தை திரு.நடராஜன். இப்போது அவர் நினைவுகள் மட்டுமே என்னோடு....
அவரோட வாழ்நாள் முழுக்க ஒரு வாசகனாவே இருந்தார். எனக்கு தெரிஞ்சு இறுதி நாட்களில் மட்டுமே படிக்கரத நிறுத்தினார்.
புத்தகங்களின் அறிமுகம் என்ற வகையில், என் கரம்பிடித்து அழைத்து சென்ற நூலகங்கள் என் மனக்கண்ணில் தோன்றுகிறது. கோவை மாநகராட்சி இருக்கும் அந்த பழமையான கட்டிடத்தில் ஒரு நூலகம் இயங்கி வந்தது.
வாயிலின் உள்ளே நுழைந்ததும் மரத்திலான சுழற்படிக்கட்டு (சுருள் வடிவ படிக்கட்டுங்க ...எக்ஸ்லேட்டர் மாதிரி சுத்தி போகும்னு நினைச்சுக்காதீங்க..) தென்படும் அதன் மேல் ஏறிச் சென்றதும். அத்தனைப் புத்தகங்கள் என் கண்கள் விரியப்பார்க்கிறேன். அதற்கு முன் அவ்வளவு புத்தகங்களை ஒரு சேரப் பார்த்ததில்லை.
அடுத்து ஒரு நூலகம் சலீவன் வீதியில் இருந்தது. அதன் பின் எனக்கு அறிமுகமான பேரூர் நூலகம். இது பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் கிழக்கு துணைவாயிலின் உள்புறக் கதவிணை அடைத்து ஒரு அறை முழுக்க புத்தகங்கள் நிறைந்திருக்கும்.
படிப்பதற்கு அங்கு நிலவிய நிசப்தமான சூழ்நிலை ... படபடக்கும் சிறகுகள் அடித்து கீச் கீச் என நம்முடன் படிக்கும் சிட்டுக்குருவிகள், ...கால்களில் கட்டிய சங்கிலியின் ஒலியுடன் கழுத்தில் கட்டிய மணி சப்ததத்துடன் கம்பீரமாக நடந்து செல்லும் யானையின் ஒலி ...என படிக்கும் சூழ்நிலை வித்தியாசமானது. வார இறுதி நாட்களில் சாப்பாட்டை மறந்து நூலகத்திலேயே படித்துக் கொண்டிருப்பேன்.
தற்போது தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
எனக்கு இந்த வார புத்தகங்கள் இருந்தால் போதும் எதுவும் வேண்டாம் அப்படி ஒரு ஆர்வம் அந்த பள்ளி பருவத்தில். சரி விசயத்திற்கு வருகிறேன் விகடன் பரிசயமானது அப்போது தான்.
அதில் முக்கியமா என்னைக் கவர்ந்த பகுதி வார்த்தை இல்லா கார்டூன் சிரிப்புகள். பிரபல எழுத்தாளர்களின் கதைகள் அதற்கு ஓவியர்களின் ஓவியங்கள். ஓவியங்களைப் பார்த்து கவரப்பட்டு கதைகள் படிக்க ஆரம்பித்தேன். ஓவியங்களின் கீழே இருக்கும் கையெழுத்த பார்க்காமலே இந்த படம் இவரு வரைஞ்சது என்கிற ஞானம் இருந்தது.
இப்பொழுது பழைய பக்கங்களை "பொக்கிஷம்" என்கிற தலைப்பில் வெளியிடுகிறார்கள். அவைகளில் சில, அப்போது படித்த நாட்களை நினைவு படுத்துகிறது. ( பொக்கிஷமா ...இவரு ரொம்ப வயசானவர்ன்னு அண்டர் எஸ்டிமேட் வேண்டாம்.. அதுக்குத்தான் " அவைகளில் சில" -க்கு அடிக்கோடு போட்டிருக்கேன்..! )
நமக்கென ஒரு வலைப்பகுதி ஆரம்பித்து எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவை என் தந்தை ஆர்வமுடன் வாங்கிப்போட்ட அந்த புத்தகங்கள் என்றால் அது மிகையாகாது. ஒரு சில புத்தகங்களை வாசிக்கும் போது அவர் என்னுடன் சேர்ந்து படிப்பது போலவும், பேசுவது போலவும் உணர்கிறேன்.
முகம்தெரியாத அன்பு உள்ளங்கள் என் எழுத்துக்கு கொடுத்த வரவேற்புகள், வாழ்த்துகள், விகடனைச் சென்றடைந்து என்விகடனில் "வலையோசையில்" அறிமுக அங்கீகாரத்தை இவ்வளவு விரைவில் கொடுத்துள்ளது.
ஆனந்த விகடன் குழுமத்தாருக்கும், திரு.சஞ்சீவ் குமார், விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவர்களில் அறிமுகப்பதிவராக இந்த "இனியவை கூறலை" அறிமுகம் செய்து பல வாசகர்களை படிக்க வைத்த திரு.சதீஷ் (சங்கவி), இந்த பதிவ வெளியிட்டு இவ்வளவு நேரமாச்சு என நேரத்தேட குறிப்பிட்டு வரவேற்பு கொடுக்கும் திரு.சி.பாலசுப்ரமணியன் (பாலா பக்கங்கள்) அவர்களுக்கு என்நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்க முக்கியமா ஒன்னு சொல்லிக்கிறேன் என் முகமறியாமல் என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்தவங்க.
இன்டலி வழி தொடர்ந்த ஆதரவு கொடுக்கும் அன்பர்கள் - நண்பர்கள்,
குணாதமிழ், மஞ்சு, ஆரிப்ஸ்டார், முகவரி, வழிப்போக்கன், நிலவன்பன்(நிலாப்பொண்ணுக்கு), கிருஷ்ணா கார்திக், திண்டுக்கல் தனபாலன், சம்பத், ராஜராஜேஸ்வரி(ஜெகாமணி)...
மற்றும் கூகிள் வழி தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்
அப்துல் பாசித்(பிளாக்கர் நண்பன்), ம.பாண்டியராஜன் (எலக்ட்ரிக்கல் ஹிஸ்ட்ரி), ராஜா MVS, கலை (கிராமத்து கருவாச்சி), வேதா.லங்காதிலகம்,ரத்தினவேல் நடராஜன், சென்னைபித்தன் அவர்கள், முனைவர்.இரா.குணசீலன் (வேர்களைத்தேடி), NICE VENTURES (சொல்வனம்), பாலா, ஜீவா(கோவைநேரம்)....
வலை திரட்டிகள்..இன்டலி,தமிழ்வெளி,தமிழ்மணம்,ஹாரம்,தேன்கூடு,
தமிழ்10,வலைப்பூக்கள்,உலவு,தமிழ் இணயங்கள்,திரட்டி...
"தொடந்து என்பதிவுகளை படித்து வரும் அனைவருக்கும்
என்னோட மகிழ்ச்சியையும் நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சதீஷ்.
Deleteவாழ்த்துக்கள்...இன்னும் மென் மேலும் புகழ் பெறவும்...
ReplyDeleteநன்றி கோவை நேரம்.
Deleteவாழத்துகள்!
ReplyDeleteநன்றி சுரேஸ்குமார்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி திருமதி.விக்கி சேவியர் அவர்களே.
Deleteஇன்டலி வழி தொடர்ந்த ஆதரவு கொடுக்கும் அன்பர்கள் ராஜராஜேஸ்வரி(ஜெகாமணி)..
ReplyDeleteஎம்து பெய்ரை குறிப்பிட்ட இனியவை கூறலுக்கு இனிய நன்றிகள் !!