Followers

Wednesday, April 25, 2012

அணுவும் தொல் தமிழனும் ! [ Atom Vs tamizhan ]


          பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம்   லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.

          தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .

          கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு  இதை விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே
                                          - திருமந்திரம் 2008 [ திருமூலர் ] 

இதன் சுருக்கமான பொருள் "நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்"

திருவாசகத்தின் இன்னொரு சான்றையும் உங்கள் முன் வைக்கிறேன்.

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப் பெருந்தன்மை வளப் பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரையலச்
சிறியவாகப் பெரியோன் தெரியின்  
திருவாசகம் - திருவண்டப்பகுதி [மாணிக்க வாசகர் ]

         இதன் சுருக்கமான பொருள் " அண்டங்கள் பலவாக உள்ளன அவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தாலோ நூற்றொரு கோடிக்கு மேற்பட்டு நிற்பனவல்லாமல், ஒன்றை விட ஒன்று அளவிட்டறிய முடியாதபடி அழகு பொருந்தியவாகவும் உள்ளது இவ்வண்டங்கள் அணைத்தும் இறைவனின் முன்பு வீட்டின் கூரையில் உள்ள மிகச்சிறிய துவாரத்தின் விழியாக நுழையும் சூரிய கிரணத்தில் தோன்றித் தெரியும் சிறு துகள்களுக்கு ஒப்பாகும் தன்மையதே"


திருமூலர் 4525 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.  18 சித்தர்களில் முதன்மையானவர்.  திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த  அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். 


சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர்
மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர்.  பாண்டிநாட்டின் அமைச்சராகவும் இருந்தார். 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை, திருவாசகம்,திருக்கோவை இவரால் எழுதப்பட்டவை. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர்.

அணுவை பற்றிய தகவல்கள் : )

         உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் நிரம்பியுள்ளது. நேர்மின் தன்மை கொண்ட புரோட்டான் அணுவின் மையத்தில் உள்ளது (1.0073 amu நிறை) எதிர்மின் தன்மை கொண்ட எலக்ட்ரான் மையத்தை சுற்றி சுழன்று வரும்.புரோட்டானுக்கு சமாமான மின்சக்தி கொண்டிருக்கும்.புரோட்டானைவிட 2000 மடங்கு நிறை குறைந்தது (0.000549 amu). நியுட்ரான் ஒரு அணுவில் இல்லாமலும் இருக்கும் (நிறை 1.0087amu)

புரோட்டான்களின் எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண்.

2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.

கிரேக்க தத்துவஞானி டெமோகிரிடஸ் (DEMOCRITUS) கி.பி 470 ல் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய மூலக்கூறை அணு (atom) என்று கூறி ஆரம்பித்து வைத்தார். பிறகு 1800 வரை நிறுபிக்க படாத ஒன்றாக இருந்தது. டால்டன் (DOLTON) தான் அணுவின் பொருண்மை குறித்த அணுவியல் கோட்பாடுகளை
1808 ல் வெளியிட்டார்.

பின்வந்த ஸ்வீடிஷ் வேதியலார் ஜான் பெர்ஜிலியஸ் (Jons Berzelius) அணுவின் நிறையை நுண்ணியமாக  கணக்கிட்டார். உதாரணமாக இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் சேர்ந்த கலவைதான் நீர் என நிறுபித்தார் H2O என்ற குறியீடையும் அளித்தார்.

140 ஆண்டுகள் கழித்து அணுவின் சக்தியை கண்டுபிடித்தார் அவோகாட்ரோ (AVOGADRO) ஆங்கிலத்தில் மாலிக்யூல் என்பது லத்தீன் வார்த்தை மாஸ் லிருந்து எடுத்தெழுதினார். மூலக்கூறின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை அறுதியிட்டு கணக்கிட்டார்.

22 லிட்டர் வாயுவில் 602 பில்லியன் டிரில்லியன் மாலிக்யூல்ஸ் உள்ளது. சுருக்கமாக இதை 6.02 x 1023 Mole-1 என்று எழுதினார். இதுவரை இந்த மாறிலி தான் அடிப்படை.

அணு சக்தி : நியூட்ரான்கள் மூலம் அணுவின் உட்கருவை துளைக்கும் போது மேலும் நியூட்ரான்களை சிதறடித்து அவை அண்மை அணுக்களை துளைத்து தகர்க்க இந்த சங்கிலி ரியாக்சனில் அபரிமிதமான சக்தி வெளிப்படுவது.

ஐன்ஸ்டின் அணுவை யுரேனியத்தில் இருந்து பிரித்தெடுத்து அதிலிருந்து பெரும் சக்தி கிடைக்கும் என்ற கருத்தை அறிவித்தார். இவர் ஜெர்மன் நாட்டிலிருந்து உயிர் பிழைக்க அமெரிக்காவிற்கு தப்பினார். இவரை வைத்து அமெரிக்கா தயாரித்த அணு குண்டு ஹிரோஷிமாவின் அழிவுக்கு வித்திட்டது. இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை.

அவர் இறப்பதற்கு(நவம்பர் 1954) ஐந்து மாதங்களுக்கு முன் அணு ஆயுதம் குறித்து "என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு" எழுதினார். இப்படி பின் விழைவைப் ஏற்படுத்திய அணுகுண்டை இனி எப்போதும் யாரும் பயன் படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.


Download As PDF

9 comments:

  1. நம் மக்கள் வெகு காலத்துக்கு முன்னரே விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தமிழர்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

      Delete
  2. திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

    மிகப் பயனுள்ள ஆச்சரியமளிக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தொல் தமிழர்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்கினர். நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். நன்றி.

      Delete
  3. நம் முன்னோர்கள் பெருமைக்குரிய விடயம் - தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி-க்கு எனது நன்றிகள்.

      Delete
  4. i know very well by intuition that ancient tamizhans were the reasons for discovering lot of things but those who invaded snatched everything from them and claimed that they only found this and that. False pride never wins! sorry to write in english i dont know how to write tamizh here using special keys. i hope one day the world would come to know abt the ancient mind of tamizhans which was constantly researching science. I feel sad that today tamizhans do not care about science and literature but wasting time by doing unnecessary activities which make them lose peace. I think before reaching the graveyard one should do good to the humanity otherwise what is the use of coming into this earth. Vaazhka Tamizh!! Vaazhka Tamizh Sittharkal!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை எனக்கு மகிழ்சியளிக்கிறது. உங்கள் கருத்துகளில் தொணிக்கும் உண்மைதுவம்
      மனிதன் இறப்பிற்கு முன் எதையாவது சாதித்து செல்லவேண்டும் என்ற கருத்துகள் ஆங்கிலம் அறியா மற்றவரும் அறிவதற்காக கீழே தமிழ் படுத்தியுள்ளேன்.

      பெயர் வெளியிடாமற் கருத்திட்ட உங்களுக்கு எனது நன்றி. உங்கள் மெயில் ஐடியை தெரியப்படுத்தினால் தமிழில் எழுதுவது எப்படி என்பதை தெரிவிக்கிறேன். அது மிக சுலபமே.
      நீங்கள் எழுதியதன் தமிழாக்கம் கீழே

      //பண்டைய தமிழர்கள் நிறைய விசயங்களை கண்டுபிடித்தார்கள் பின் வந்த படையெடுப்பாளர்கள் அவற்றை மறைத்து தாம் கண்டறிந்தது போல வெளிப்படுத்தினார்கள், இதை என் உள்ளுணர்வும் உரைக்கிறது. தவறான பெருமை வெற்றியாகாது.

      ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும் எப்படி தமிழில் டைப் செய்து எழுதுவது தெரியவில்லை. நான் உறுதியாக நம்புகிறேன், ஒருநாள் இவ்வுலகம் பண்டைய தமிழனின் அறிவியல் ஆய்வு குறித்து அறியும்.

      இன்றைய தமிழர்கள் அறிவியல், இலக்கியங்கள் இவை பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் தேவையற்ற போக்கினால் மன அமைதியை தொலைக்கிறார்கள் என்பதே எனது வருத்தம்.

      மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சுடு காடு செல்வதற்கு முன் மனிதனுக்காக நல்லது செய்ய வேண்டும் இல்லை எனில் பிறப்பிற்கு அர்த்தமில்லை. வாழ்க தமிழ் ! வாழ்க தமிழ் சித்தர்கள்.!! //

      Delete
  5. இயற்கையை சிதைத்து மனிதன் நுகரும் பலன்கள் அனைத்தும் சரிப்படுத்த முடியாத அளவு பின்விளைவுகள் உடையதாகவும் இருக்கிறது.ஏனென்றால் இயற்கை இறைவனின் உடல் அதை சிதைக்க மனிதனுக்கு உரிமை கிடையாது.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)