டாப்ளர் பின்விளைவு (Doppler Shifts)
படத்தைப்பாருங்கள் இவ் விளைவின் எளிய விளக்கம்.
சைரன் ஒலிக்க ஒரு கார் சென்றுகொண்டுள்ளது. ஒலியை கேட்கும் முதலாமவர் நிலை கார் அவரை கடந்து சென்றுவிட்டது. ஒலியானது இவருக்கு கார் ஓட்டுனரை விட குறைவாக கேட்கும். 2ம் நிலையில் உள்ளவருக்கு ஒலியானது கார் ஓட்டுனரை விடவும் அதிகமாக கேட்கும் ஏனென்றால் கார் அவரை நெருங்குகிறது.
டாப்ளர் பிற முக்கிய ஆய்வு:
ஒளி அலைகளின் நீளம் (நீலம் மற்றும் சிகப்பு) மற்றும் ஒலி அளவைக்கொண்டு தொலைவை நிர்ணயிக்கும் முறை. இந்த ஆய்வைக்கொண்டு தான் பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்ற கருத்து வெளியிடப்பட்டது.
டாப்ளர் செய்த ஆய்வு :
அவரின் ஆராய்சி என்னவென்றால் பிளாட்பாரத்தில் இவர் நின்று கொண்டு ரயில் போகும் போது ஒரு இசைக்குழுவை ரயிலின் உள்ளே அமரச்செய்து ஒரே ரிதம் பீட்டில் (குறிப்பொலியை) வாசிக்க வைத்து குறிப்பெடுத்தார்.
(...ஆரம்ப காலங்களில் ரயிலின் வேகம் 30 kmph தான்...)
மீண்டும் இவர் போகும் ரயிலின் உள்ளே உட்கார்ந்துகொண்டு பிளாட்பாரத்தில் அதே குறிப்பொலியை அதே இசைக்குழுவை வாசிக்கச் செய்தார். இதையெல்லாம் பார்பவர்கள் என்ன முட்டாள் தனமான ஆராய்ச்சி என்று ஏளனம் செய்தார்கள்.
இந்த ஆராய்சியின் கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவு (Doppler Shifts) என அழைக்கப்பட்டது.
"டாப்ளர் விளைவு" குறிப்புகளைக் கொண்டுதான் கோள்களின் தொலைவு மற்றும் கேளக்சி களுக்கிடையேயான தொடர்பு என்று விண்ணியலை தவிரவும் 12 அறிவியல் துறைகளில் இவரின் ஆய்வுதான் அடிப்படை.
அவர் வாழ்ந்த காலத்தில் இவரின் கண்டுபிடிப்புக்கு வரவேற்பே இல்லை என்று சொல்லவேண்டும். போக்குவரத்து மற்றும் சிக்னல்களின் ஒலி ஒளி உபயம் அவர்தான். பல விபத்துகளை தடுக்கும் இக்கருவிகளின் காரண கர்த்தா.
கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டபோது,அவர் பெரிதும் புகழப்பட்டார் டூ லேட் ! அவர் மறைவுக்குப்பின்னரே (1853).
ஈயத்தை தங்கமா மாற்றுவது ?
1880- ல அமெரிக்க விஞ்ஞானி க்லென் செபோர்க் (Glenn Seaborg ) ஈயத்தை (LEAD) தங்கமா மாற்றிக்காட்டினார். எப்படின்னா சைக்ளோட்டரான் மூலமா லெட் (மூலக்கூறு எண் 62) இருக்கர மூலக்கூறிலிருந்து புரோட்டான் நியூட்ரான்களை நீக்கி தங்கம் (மூலக்கூறு எண் 82) உருவாக்கி காட்டினார். இது ரொம்ப செலவு பிடிச்ச சமாச்சாரம் எப்படின்னா ஒரு கண்ணுக்கு தெரியாத தங்க மூலக்கூறுக்கு செலவளிச்ச காசுல அப்பவே ஒரு அவுண்சு தங்க வாங்கிடலாம். ( அப்புரமென்ன பொன்முட்ட அபாயிலாயிடுச்சு ....)
இவருக்கு நம்ம சித்தருங்களப்பத்தி தெரிஞ்சிருக்க வாய்பில்லைன்னு நினைக்கிறேன் !!!.
டாலி (Dolly) எனும் செம்மறி ஆடு
மரபுகள், குணநலன்களின் தன்மை குறித்து 1865 ல் ஆராய்ச்சி செய்தவர் கிரிகெர் மென்டல் (GREGOR MENDEL) (ஆஸ்திரிய விஞ்ஞானி). இவரின் ஆராய்சிகளை அடிப்படையாக வைத்தே DNA மரபியலில் பெரிய மாற்றமான குளோனிங். அம்மாவின் மரபணுவை மட்டுமே கொண்டு அச்சு அசலாக டாலி (Dolly) எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது 1997 லில் ஸ்காட்டிஸ் லேபில். ( ... 135 வருடங்கள் கழித்து தான்...)
இப்ப இருக்ககூடிய ஆராய்சியின் படி உங்களுக்கே தெரியாம உங்களக்கூட அச்சு அசலா உருவாக்க முடியும்.
"டாப்ளர் விளைவு" குறிப்புகளைக் கொண்டுதான் கோள்களின் தொலைவு மற்றும் கேளக்சி களுக்கிடையேயான தொடர்பு என்று விண்ணியலை தவிரவும் 12 அறிவியல் துறைகளில் இவரின் ஆய்வுதான் அடிப்படை.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.. பாராட்டுக்கள்..
நன்றி! இராஜராஜேஸ்வரி அவர்களே. ஒருவரின் மறைவுக்கு பின் கிடைக்கும் புகழ் பயனற்றது சரியா ?
Deletesuper paathivu .vaazththukkal
ReplyDeleteநன்றி, கலை.
Delete