Followers

Thursday, May 1, 2014

பிளேட்டோவின் தத்துவங்களில் இருந்து...சில

கனவு

 நல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்
திலும் அடக்க முடியாத சில மிருகப் பிராந்தியமான இச்சைகள் இருக்கின்றன.  அவை மனிதன் உறங்கும் போது கனவுகளாக வெளிப்படுகின்றன.


அன்றாட வாழ்க்கையைப் பரிசுத்தமாகவும், நிதானமாகவும் நடத்தி செல்பவன், உறங்கப் போவதற்குமுன் மிதமாக உணவருந்தித் தன் ம்னதிலுள்ள இச்சைகளையும், கோப தாபம் முதலான உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, உறங்குவானாகில், அவன் கெட்ட கனவுகள் காண மாட்டான்.

(கனவுபற்றிய ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி தள்ளிய பேரறிஞர் ப்ராய்டிற்கு முன் 2300 வருசங்கள் முந்தியே மனதை பற்றிய சிந்தனைகளின் மூல வேர் பிளேட்டோவின் வார்த்தைகளில் இருப்பதை காணலாம்.)

பெண்களின் முன்னேற்றம் !

ஆண்களை போலவே பெண்களுக்கும் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்.  அப்போதுதான் நாட்டின் தற்காப்பு நிலைத்திருக்கும், அதற்குமாறாக இப்போது இருப்பது போல் பெண்களுக்கு சம உரிமை வழங்காதிருந்தால், அந்த ராஜியத்தின் பாதிப் பகுதி ஊனமடைந்ததாக இருக்கும்  - பிளேட்டோ

(இந்த முற்போக்கு கருத்து இன்னும் கூட உலகில் சரியாக வேர் விடவில்லை இல்லை இல்லை முளை விட வில்லை என்பதை கவனிக்க.)



செல்வம்

அளவுக்கு மீறிய செல்வமோ.. அளவு மீறிய வறுமையோ மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும் திறமை அற்றவர்களாகவும் செய்துவிடுகிறது.

ஒரு நாட்டில் பிச்சைக் காரர்கள் இருந்தால் அங்கே திருடர்களும் கோயிலில் கொள்ளையடிப்பவர்களும் இருப்பார்கள்.

கவிஞர்கள் எவ்வாறு தங்கள் சொந்த கவிதைகளின் மேல் மோகம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் குழந்தைகளிடம் பாசம் வைக்கிறார்களோ அப்படியே சுயமாக பணம் சம்பாதிப்பவர்களும் அந்த பணத்தின் மீது அதிக மோகம் (பாசம்) உள்ளவர்களாக இருப்பார்கள்.

பகுத்தறிவு

அறிவும் சத்தியமும் நெருங்கிய உறவு உடையன.

படிப்புகள் அனைத்திலும் அதி உன்னதமான படிப்பு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தேட வேண்டும் என்ற படிப்புதான்.

சமாதானத்திற்காக சண்டை பிறப்பிக்காமல் சண்டைக்காக சமாதானத்தைப் பிறப்பிக்கும் சட்ட சபையினன் புத்திசாலி அல்ல.

உண்மையான அறிவின் காதலனாய் இருந்தால் அவன் தன் இளமைப் பருவத்திலிருந்தே எல்லாவற்றிலும் மெய்மையை விரும்புபவனாய் இருக்க வேண்டும்.

மனிதனிடம் அறிவு உறங்கினால் மிருக இச்சைகள் கண் விழித்து எழுந்து குதியாட்டம் போடும்.

எவனொருவனுடைய ஆசைகள் ஒவ்வொரு வடிவத்திலுமுள்ள அறிவை நோக்கியே கவரப் படுகின்றனவோ, அவன் தன் மனதுக்கு ஏற்படக்கூடிய இன்பங்களிலே லயித்திருப்பானே தவிர உடலுக்கு ஏற்படக் கூடிய இன்பங்களை உணர மாட்டான்.

இளமை எனும் பக்குவமான வயதில் தான் எந்தவிதக் குணப் பண்பும் உருப்பெருகிறது; எந்த அபிப்ராயமும் ஆழமாகவே வேரூன்றுகிறது.

  தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை ; நாம் அறியாத ததை அறிந்து கொள்ள அலைவதில் எந்த வித உபயோகமோ இல்லை என்று அசமந்தமாக மூழ்கி கிடப்பதை : இந்த கொள்கைக்கு எதிராக என் சக்தி எல்லாம் திரட்டி சொல்லாலும் செயலாலும் போரிடத் தயாராக இருக்கிறேன்

என் அறிவின் பிரதி பலிப்பில் எனக்கு சிறந்தது என தோன்றினாலும், அந்த அறிவின் படியே எப்போதும் வழி நடக்கும் சுபாவமுள்ளவர்களில் நானும் ஒருவன்.

நான் சொல்வதில் ஏதாவது உண்மைக்கு புறம்பாக இருந்தால் என் தவரை மற்றவர் திருத்திக் கொள்ள விரும்புகிறேன்.  அதே போல பிறர் சொல்வது உண்மைக்கு மாறாக இருந்தால் பிறர் அவற்றை திருத்த விரும்புகிறேன்.  ஏனெனில் இது தான் இரு சாரருக்கும் பெருத்த லாபம்.  பிறர் தீமைகளை நான் குணப் படுத்துவதை விட எனது பெருந்தீமையைப் பிறர் குணப் படுத்துவதில் லாபம் அதிகம் உண்டு.

ஒவ்வொரு மனிதனின் அறிவிலும் 4 நிலைகள்; முதல் நிலை யூகம், இரண்டாவது நம்பிக்கை, மூன்றாவது சிந்தனை தெளிவு, நான்காவது மெய்யான பகுத்தறிவு. 

அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது.

அறியாமையில் எல்லாம் பெரிய அறியாமை தெரியாதவன் தனக்கு அது தெரிந்து இருப்பதாக நினைத்துக் கொள்வது.







Download As PDF

காதலும் ; காமமும் பிளேட்டோ - [18 +]



தத்துவ ஞானி பிளேட்டோ அறிஞர் சாக்ரடீஸின் மாணாக்கர்
கி.மு 427 ல் ஏதென்ஸில் (கிரேக்கம்) பரம்பரை பரம்பரையான செல்வமும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

அவர் எழுதிய 50க்கு மேற்பட்ட நூல்களில் ஒன்று சிம்போசியம் (Symposium) ”ஆன்மீக காதல்” திருக்குறளின் காமத்துப் பால் போன்றது எனச் சொல்லலாம். காதலும் காமமும் பற்றி பிளேட்டோவின் கருத்துகளின் (ஒரு பகுதி ) சுருக்கத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

காதல் - ஒரு தீவிரமான மனநோய்

உன்னைக் காதலிக்க வேண்டுமானால் நீ காதலி.

காதலானது மனிதர்களை தங்கள் காதலிகளுக்காகச் சாகவும் துணியச் செய்கிறது. காதல் ஒன்றுதான் அந்தமாதிரி ஆக்குகிறது ; ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும்.

அழகில் சிறந்ததை காதலிப்பது இயற்கை.  ஆத்மாவில் உள்ள குறை பாடுகளை காதல் விரும்பாதே தவிர, உடல் குறைபாடுகளை அது பெரிது படுத்துவதில்லை.

மனிதன் பல வழிகளில் இழுக்கப் படுகிறான்.  இரண்டு நோக்கங்களுக்கு இடையே இழுக்கப்படுகிறான் என்பதில் சந்தேகமே இல்லை.  இளமையின் அழகை அனுபவிக்க ஒன்று தூண்டுகிறது ; இன்னொன்று அவனை தடுக்கிறது.  ஏனெனில் முன்னவன், உடலை காதலிப்பவன், பழுத்த கனிபோல அழகைத் தேடிப் பசித்து அலைபவன்.  காதலியின் பண்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தன் பசியை வேட்கையுடன் திருப்தி செய்து கொள்வான். மற்றவனோ உண்மையில் இன்னொரு ஆத்மாவை விரும்பும் ஓர் ஆத்மா ஆவான் ; உடல் இச்சையை இரண்டாவதாகத் தான் கைக் கொள்கிறான்.  சரீர காதலின் திருப்தியை மூர்க்கத்தனமானதெனக் கருதுகிறான். சுபாவத்தையும் திட நெஞ்சையும், கம்பீரத்தையும், அறிவையுமே அவன் மதித்துப் போற்றுகிறான். அவன் வாஞ்சைக்கு பாத்திரமான தூய பொருளான ஒருத்தியுடன் தூய்மையான முறையில் வாழவே ஆசைப் படுகிறான்.

[ தோழமைக்காக பழகும் காதலை தோழமைக் காதல் என்கிறோம், உடல் ஈடுபாடு இல்லாமல் உள்ள ஈடுபாட்டை விரும்பும் காதலை “பிளேடானிக் லவ்” என்கிறோம் ]

ஆண்பெண் உறவை சிற்றின்பம் என்கிறார்கள் அதைவிட வலிமையான சுகம் வேறு ஏதும் இல்லை என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதைப் போல வெறியூட்டும் போதையும் வேறொன்றுமில்லை.

எது சீராகவும் அழகாகவும் அமைந்திருக்கிறதோ அதை நிதானமாகவும் ஆழமாகவும் கலை உணர்வோடும் காதலிப்பது தானே உண்மையான காதல்.

எது வெறியூட்டக் கூடியதோ, மிதமிஞ்சிப் போவதோ அதற்கு உண்மையான காதலில் இடமில்லை.

உண்மையான காதல் நிலைத்திருக்க வேண்டுமானால் சிற்றின்ப ஈடுபாடு தலை காட்டக் கூடாது.   காதலர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் காதலிக்கிறவர்களாயிருந்தால் உடல் இன்பத்தில் அக்கரை கொள்ள மாட்டார்கள்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிடலாம்; இறுக கட்டியணைத்துக் கொள்ளலாம்.  ஓயாமல் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் இந்த எல்லையைக் கடந்து அவர்கள் போகக்கூடாது;  சரீர சுகத்தில் நாட்டம் கொள்ளக் கூடாது.  அவ்வாறு மீறி செய்வார்களானால் காதலின் நிஜச் சுவையை உணராமல் போவதோடு, சரீர ஈடு பாடு அதிகரிக்க நாளடைவில் பலஹீன மாவார்கள்.

(திருவள்ளுவர் இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார் காமம் மலரைவிட மென்மையனது. அதன் தன்மை அறிந்து நுட்பமாக ஈடுபடுபவர்கள் இவ்வுலகில் வெகு சிலரே )
Download As PDF

Monday, April 28, 2014

எங்கே, ஏன், எப்படி ?


எத்தகைய நாகரீக மக்கள் ”மேக்கப்” முதலில் பயன்படுத்தி இருப்பார்கள் ?

நாகரீக ( ! ) ஹோமோசாபியன்ஸ் (Homo  sapiens) முதன் முதலில் மேக்கப் என்ற ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம்.  சுமார் 75000 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க ப்ளூம்பாஸ் குகை சித்திரங்களில் (ochre * ) இயற்கையில் கிடைக்கும் இரும்பு ஆக்ஸைடு பிக்மெண்ட் நிறங்கள் பயன்படுத்தப் பட்டு இருப்பதை  வைத்து அப்போதே மேக்கப் என்ற சமாச்சாரம் தோன்றி இருக்கலாம் என கருதலாம். அதை நாகரீக வாழ்க்கை என ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்,  ஃபிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களில் கிடைக்கப் பெற்ற சித்திரங்களில் வேலைப்பாடுகளில் அதே போல இரும்பு ஆக்ஸைடு வண்ணங்கள் பயன் படுத்தப் பட்டு இருக்கின்றன. இது சுமார் 20000 வருடங்களுக்கு முன்.


இன்னும் கிட்ட என்னால், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் ஆரஞ்ச் வண்ணக் கலவை, கண் மை, மருதாணி இவைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சரி அப்படியாயின் நமது இதிகாச காலத்திலேயே முக அழகு வசீகரம் பற்றியெல்லாம் கதை கதையாக படித்திருக்கிறோம். தமிழர்களும் இத்தகைய முக அழகு கலையில் சிறந்து விளங்கி இருப்பர் என்று கருத இடமுண்டு.

*Ochre = Any of various earths containing silica and alumina and ferric oxide; used as a pigment

புதிர் 

ஒருவர் வெளியூருக்கு வேலை விசயமாக போக வேண்டி இருந்ததால், இரவில் காரை அவரே ஓட்டிச் சென்றார். அசதி காரணமாக வழியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு லாட்ஜ் கிடைக்குமா என பார்த்தார் அந்த ஊரில் லாட்ஜ் இல்லை. பெட்டி கடைகாரரின் உதவியால் ஒரு இடம் கிடைக்க தூங்கிவிட்டு அதிகாலை காரை பார்த்தால் அதிர்ச்சி , காரில் இருந்து ஒரு டயர் திருடு போயிருந்தது. நல்ல வேலையாக அவரிடம் ஸ்டெப்னி ( டயர் ) இருந்தது ஆனால் அதுக்கு போல்ட் நட் இல்லை. பக்கத்தில் எங்கு தேடியும் டயருக்கான போல்ட் நட் கிடைக்கல. வயசானவர் சொன்ன யோசனைப் படி டயரை மாட்டி காரை ஓட்டி சென்றார் எப்படி ?

எப்படி  ? பதில் பதிவின் இறுதியில்.


பைசா சாய் கோபுரம் இன்னும் சாய்ந்து வருகிறதா ?

1173 முதல் அடித்தளமிட்டு கட்டப்பட்ட இந்த கோபுரம் இரண்டு அடுக்குகள் கட்டப்பட்ட நிலையிலேயே நிலை சாய்ந்திருக்கிறது.

சாய்மானத்தின் காரணமாக அதற்குமேல் கட்டப்பட்ட தளங்கள் (1178) சாய்வுக்கு எதிரான நிலையில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அது அமைந்துள்ள நில அமைவே அது மேன் மேலும் சாயத்தொடங்கியது.  அதன் பிறகு 200 ஆண்டுகள் கழிந்து அது சாய்ந்து விழுந்துவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.   அதன் அடித்தளம் உறுதிப் படுத்தப் பட்டது.


அதன்பிறகு 1990, 2001, 2008 ஆண்டுகளில் பல கட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் அடித்தள மண் (முக்கால் பாகம்) வெளியே எடுக்கப் பட்டு நிலத்தடி கடினப் படுத்தப் பட்டு கட்டிடத்தின் சாய்வு 3.97 டிகிரிகள் உயர்த்தப்பட்டதாகவும், கோபுரத்தின் சாய்வை தடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் வலது கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் ? 



பெரும்பாளும் 90 % பேர் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  பிறக்கும் பத்தில் ஒன்பது குழந்தைகள் வலது பெருவிரலை தான் சூப்புகின்றன.

இடது அரைவட்ட மூளை பகுதி நமது வலது கைகால் உடல் இயங்கத்தை கட்டுப் படுத்துகிறது.  அதே பகுதியில் தான் மொழி சம்பந்தமான சங்கதிகளும் மூளை செல்களால் இயக்கப் படுகின்றன. மொழியோடு கை எழுத்தும் வலது கை இயக்கத்தில் வந்துவிடுகிறது.  ஆனால் மொழி ஏன் இடது பாக மூளைப் பகுதியிலே செயல் பாட்டில் இருக்கு ?  இதற்கு காரணம் மில்லியன் ஆண்டுகால மனித மரபு கூறு.


விஞ்ஞானிகள், 2013 ல் இது குறித்த ஜெனிடிக் ஆய்வில்  PCSK6 ஜீன் கூறு கை பழக்கத்தை மனித உடலில் கடத்தி வருகிறது என தெரிந்து கொண்டார்கள். ஆனால் 4000 இரட்டை குழந்தைகள் அவற்றின் கை பழக்கங்களை ஆய்வு செய்ததில் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.  ( ??)

கான்சாஸ் பல்கலை கழகத்தில் கைபழக்கம் பற்றிய ஒரு ஆய்வில் அக்கால மனிதர்களின் கை பழக்கம் பெரும்பாளும் வலதாக இருக்க கண்டனர். மண்டை ஓட்டு எலும்புகளில் வலது தாடைப் பற்கள் தேய்மானத்தை வைத்து முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு மனிதனின் கைப் பழக்கம் என்பது ஜீனில் உள்ளபடி உறுதி செய்யப்படுகிறது என்பது மட்டும் புலப்படுகிறது.

க்யூப் வடிவதர்பூசணி  எப்படி விளையுது ?



சின்னதா வளரும் போதே படத்தில் இருக்கும் பெட்டியில், காம்புக்கு துளை விட்டு வளர்ப்பாங்க. அதே போல இதய வடிவ பெட்டியா இருந்தா அதே வடிவில் கோசாப் பழம் ரெடி

2001 ல ஜப்பான் இதை ரெஜிஸ்டர் செஞ்சதால 1st invention அவங்க தான். ஆன அதுக்கு பல வருசம் முன்னாடியே இது உருவாக்கப் பட்டுதுன்னு சொல்றாங்க.

எப்படி இந்த ஐடியான்னா ஈஸியா கேரி பன்ன வசதியா இருக்குமேன்ற எண்ணம் தான். ரெகுலர் விலை கம்மி இதுக்கு விலை அதிகம்.




Labels : கை பழக்கம், பைசா சாய் கோபுரம், ஆதிகால மேக்கப், முக அழகு, துணுக்கு


Download As PDF

Monday, April 14, 2014

நினைவெல்லாம் நித்யா !!




ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தோட்டத்து பங்களா.... சேர்த்து அணைத்த இருட்டு கருக்கொண்ட நிசப்தமான இரவை மரக்கிளைகளில் படபடத்த பட்சிகளின் சிறகுகளின் சப்தத்தை விடவும், விசு விசுத்து கிளம்பி இலைகளை பட படக்க வைத்து ஏற்படுத்திய.... ஹோ.... வென்ற ஓசை சன்னல் திரைச்சீலைகளை கிச்சு கிச்சு மூட்டி உள்ளே புகுந்தது காற்று.

இலைகள் விலக்கி புகுந்த நிலவின் கீற்றொளி ஏனோ ஒரு அமானுஷ்ய காட்சியை வெளிச்சம் போட்டு காட்டியது.

பங்களாவிற்கு சற்று தொலைவில் இருந்த மரத்தின் சிறு கிளைகளின் அசைவுகள் ஏதேதோ பேசுவதைப் போல இருந்தது.

பூமிக்குள் இருந்து மேலே கிளம்பிய வேர்கள் சட சடவென வளைந்து நெளிந்து பங்களாவை நோக்கி தன் கரங்களை அசைத்து திறந்திருந்த சன்னலினுள் புகுந்து கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அவளின் கால்களையும் கைகளையும் சுற்றி வளைத்து அப்படியே சுருட்ட

“ ஹக் ”



( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )


பட படத்த நெஞ்சைப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்த அவளுக்கு குப்பென வியர்த்து கொடிட்டியது தேகம் முழுவதும்.

இது கனவுதான் என்பதை அவளுக்கு உணர்த்தினாலும்...ஏன் இப்படிப்பட்ட கனவுகள் தனக்கு வருகிறதென்பது தெரியவில்லை அவளுக்கு..
அவள் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது.

கனவில் நடக்கும் சம்பவங்களை விடவும் சில சமயங்களில்.., நிஜத்தில் நடப்பவைகள் இன்னும் புதிராக தோன்றி மறைந்தது.

ஜன்னலின் பக்கம் செல்லவே பயமாக இருந்தது. அந்த மரத்தை வெறித்து பார்க்கும் பொழுதெல்லாம் ஏதேதோ பேசும் குரல்கள் கேட்டது... இதை எல்லாம் அவரிடம் சொன்னாலும் ஏதும் கேட்பதே இல்லை...,

பித்து பிடித்தவள் பேசிய பேச்சுகளாகவே அவருக்கு படுகிறதா?

நான்கு வயதிலும் ஒன்னறை வயது கைக் குழந்தையையும் வைத்துக்கொண்டு தான் படும் கஷ்டங்கள் ஏன் அவருக்கு புரிவதில்லை.?
மாமனாரும் அத்தையும் துணைக்கிருப்பது அவளுக்கு ஒரு ஆறுதல்.

ஓவியாவின் போக்கும் வர வர சரியில்லை அந்த மரத்தின் பக்கம் போகாதே என்றால்,,,சொல்வதை கேட்பதே இல்லை.. பார்த்துக் கொண்டிருந்த போதே மரத்தின் மீது தன் காதுகளை வைத்து என்னவோ... பேசிக் கொண்டிருந்தாள்

“....வா...டீ...ஈ ””

என கூப்பிட்டு ரெண்டு சாத்து சாத்தினாள் ஆனால் அழுவதற்கு பதில் அவள் கண்களை மலங்க வெறித்து அவளையே பார்த்தாள்.

குழந்தையின் தள்ளுவண்டியை ஒரு நாள் மரத்திடம் தள்ளிக் கொண்டு போனாள்.

தனக்கு தெரிந்து அத்தையும் மாமாவும் அந்த மரத்தின் பக்கம் செல்வதேயில்லை...

அவர்களும் அந்த மரத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லை.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

ஒரு நாள்

“...சு...ரே...ஷ் ”

கூப்பிட்டு கொண்டே ஓடினாள். அவன்...வெளி ரோட்டை நோக்கி ஓடினான் கொஞ்ச தூரம் சென்று பார்த்தும் அவன் அவள் கண்களுக்கு தட்டுப்படவில்லை வெறும் இருட்டு மட்டுமே நீண்டிருந்தது.

சில சமயம் காணாமல் போன மூத்த பையன் அந்த மரத்தினடியில் நிற்பது போல் தோன்றும்

ஒரு நாள் ஓவியா ”...பொலிஸிர்கு சொல்ல...லியா...? என வார்த்தைகள் உதிர்த்தாள்.

ஏன் ? எதுக்கு ??

”அண்ணா வை கண்டுபிச்சி குடுப்பாங்கல்ல...”

”..யார் உனக்கு சொன்னா? ”

கேள்விக்கு பதிலாய்.... அந்த மரத்தை நோக்கி கை நீட்டினாள்.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )



சில தினங்கள் கழிந்து அதிசயமாக பூத்துக் குழுங்கியது அந்த மரம். ஒடிந்து விழுந்த பூங் கொத்தை முகர்ந்து பார்த்த அத்தை மூர்சையாகி விழுந்தாள். சரியாக ஒருவாரம் இருக்கும் நினைவிழந்த நிலையில் இறந்து விட்டாள்.

மாமனாரும் யாரையாவது வரச் சொல்லி அந்த மரத்தை வெட்டிப் போட வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்தார். சரியான ஆள் கிடைக்கவில்லை. இரண்டு மாதங்களின் பின்னே அந்த மரத்தையே வெறித்துப் பார்த்தபடி அதன் அருகில் போனார். நிலத்தின் அடியிலிருந்து குபு குபுவென கட்டெரும்புகள் அவர் உடல் முழுதும் ஏறியது தடுமாறி விழுந்தவர் பின் எழவே இல்லை.

அவ்வப் போது பையனின் நினைப்பாகவே இருந்தது. இரவு நேரங்களில் இரண்டு கைகளாலும் அத்தானின் நெஞ்சை குத்தி சட்டையைப் பிடித்து பையன இன்னும் தேடி கண்டுபிடிக்காம இருக்கியே த்தூ...என சிலுப்பினாள். அவன் ஏதும் பேசாமல் மெளனி யாகி விட்டான்.

சிலசமயங்களில் இருப்பு கொள்ள மாட்டேனெகிறது. என்ன எளவு ...நாய் பொளப்பு என சலித்த அவளுக்கு கண்களில் நீர் முட்டியது.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

வெட்டிப்போடப்பட்ட மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த அவனுக்கு நித்யாவின் போக்கு மிகுந்த கவலை தருவதாக இருந்தது. அவள் ..அவள் செய்த காரியத்தை நினைத்தால் .... கிர் என்ற தலையை பிடித்து கொண்டான்.

பையன் காணமல் போய்விட்ட ஏக்கம் அவளை நிரப்ப பாதித்து இருப்பது புரிந்து கொள்ள முடிந்தது.

அவளிடம் பேச்சு கொடுத்து பரிசோதனை செய்த டாக்டர் அதைத்தான் சொன்னார். அவனுக்கு புரியாத வார்த்தைகள் சொன்னார் அந்த பாதிப்பு கொஞ்ச காலத்திற்கு பிறகு சரியாகி விடும் என்றார்.

அவன் முடிவெடுத்து விட்டான் இனி இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. அவள் செய்த காரியம் அவளுக்கே தெரியவில்லை. எதுவோ தன்னை தாக்க வருவதாக நினைத்து பலமாக தள்ளிவிட்டு அந்த பிள்ளையின் சாவுக்கு காரணமாகி விட்டாளே. யாருக்கும் தெரியாமல் மறைத்தாலும் அவன் மனது கேட்கவில்லை....ஓ..வென பீரிட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்தது. அவன் உடல் குலுங்கியது. கண்கள் சிவந்து போயிருந்தது. தாரை தாரையாக கண்ணீர் ஓடிய தடத்தை இரண்டு கைகளாலும் அழித்தான், கெட்ட சம்பவங்களோடு சேர்த்து.

சாமான்களை ஏற்றப் பட்ட வாகனம் வெளிச்சக்கீற்றை மறைத்து புழுதி பறக்க அந்த இடத்திலிருந்து புறப்பட்டு சென்றது நிசப்தத்தை கரைத்து.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

நினைவெல்லாம் நித்யா !! கதையாக்கம் : கலாகுமரன்

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )




Download As PDF

ஜோக்ஸ்...ஜோக்ஸ்


சலூன்கடையில் “உங்க தல முடிய ரொம்ப கட் பன்னனும் போல இருக்கே”

சீட்டின் பின்னால் வாகக சாய்ந்து கொண்டவர்
“ம்..இருக்கலாம் இந்த தடவை நல்லா கட்பன்னிடுங்க...”

“ போன தடவ மோசமா கட்செஞ்சு இருப்பீங்கலோ”

 @#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

தன் அப்பாவுடன் முதன் முதலில் பாலட் நடனம் பார்க்கப்போனான் ஒரு சிறுவன்.

“பெண்கள் கால் விரல்கள் தரையில் சுழல துள்ளி ஆடினர்”

பையன் அப்பாவிடம் கேட்டான் “ டான்சுக்கு ஏம்பா உயரமானவங்க கிடைக்க மாட்டாங்களா ?”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

பல்லு புடுங்க எவ்வளவு பீஸ் டாக்டர்

ஐநூறு ரூபாய்கள்

டாக்டர் என்கிட்ட முன்னூறு ரூபாய்தான் இருக்கு

நிதானமா பல் பிடுங்க கொஞ்ச நேரம் ஆகும் பரவாயில்லையா?

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

கண் ஆபரேசன் முடிஞ்சதும் கண் திறந்து பார்த்த நோயாளிக்கு எல்லாம் கொஞ்சம் மங்களா தெரிஞ்சது டாக்டரிடம் கேட்டான்.

“டாக்டர் சினிமாவுல யூஸ் பன்ற புகை மூட்டம் எக்யூப்மெட் இங்க எதுக்கு ? “

ஓ அதுவா...

திடும்னு பளிச்சுனு தெரிஞ்சா நான் ஆபரேசன் சரியா செய்யலேன்னு பலரும் ஃபீல் செய்யராங்க அதான்.”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

டாக்டர் என்னோட வலது மூட்டு வலியா இருக்கு

அது ஒன்னுமில்ல வயசாகுது இல்லியா ?

...டாக்டர் ஆனா என்னோட ரெண்டு காலுக்குமே ஒரே வயசுதான் இருக்கும்

டாக்டர் “ ஙே “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

பஸ் நடத்துநர் “இந்த புள்ளக்கு 5 வயசாச்சுன்னு சொல்லுதே டிக்கட் எடுக்கனும்மா”

பெண்மணி “ எனக்கு கல்யாணமாகியே 4 வருசம்தான் ஆச்சு புள்ளக்கி எப்படிங்க 5 வயசு ஆகும்”

”அதெல்லாம் எனக்கு தெரியாது ...நான் டாக்டர் இல்லம்மா கண்டக்டர் “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ      


மொத மொதலா சர்சில் நடக்கும் கலியாணத்திற்கு தன்னோட பையனோடு உடன் போனார் ஒருவர்.

பையன் : “அப்பா ஏம்பா பொண்ணு வெள்ள வெளேர்னு டிரஸ் போட்டிருக்கு

அப்பா : தேவதை வெள்ள டிரஸ் போட்டிருக்கும் இல்லியா. இன்னிக்கு வாழ்க்கையில் அந்த பொண்ணுக்கு எல்லா சந்தோசமும் வந்து சேரப் போகுது அதுக்குத் தான்.

பையன் : சரிப்பா அப்ப ஏன் மாப்ள கருப்பு கலர் கோட் போட்டு இருக்காரு.

அப்பா : “ ங்...ஙே “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பாலத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்ய இருந்தவனை பார்த்தவர் ஓடி வந்து தடுத்து “ஏம்பா ஏன் எல்லாத்துக்கும் இது தீர்வு இல்லப்பா” என சமாதானம் செய்து அமைதி படுத்தினார்.

”சரி ஏன் இந்தமுடிவு எடுத்தே ?”

”சம்சாரம் பக்கத்து வீட்டு காரனோடு ஓடி போய்ட்டா”

”இன்னொரு கலியாணம் செஞ்சிட்டா போச்சு. எப்ப நடந்திச்சு ?”

“ 1 வருசம் ஆகிடுச்சு இப்ப அவன் போன் பன்னினான் அவள திரும்ப எங்கிட்டயே ஒப்படைக்கப் போறானாம் “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


நீண்ட நாள் கழித்து இரண்டு பெண்கள் ஒரு காஃபி சாஃபில் சந்தித்து கொண்டார்கள்.

முதலாமவள் “ஏன் அடிக்கடி சொறிஞ்சிக்கிட்டே இருப்பியே.. இப்ப எப்படி?”

இரண்டாமவள் “அதெல்லாம் தேவையில்ல இப்ப எனக்கு கலியாணம் ஆகிடுச்சு அவரு பாத்துப்பாரு”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


இரண்டு ப்ரிகேஜி சிறுவர்கள்.... எங்கம்மாக்கு இருட்ல கூட நல்லா
கண்ணு தெரியுதுடா ?

எப்படிடா சொல்ற

நேத்து கரண்ட் போனப்ப எங்கம்மா எங்கப்பாட்ட ஷேவ் செய்யலன்னு திட்டினாங்க..டா

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இரண்டு ப்ரிகேஜி சிறுவர்கள்.... கூடிய சீக்கிரம் எங்க வூட்ல தம்பி பாப்பா வரும்டா...

எப்படிடா சொல்ற,,,

போன தடவ எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாம போனப்ப தங்கச்சி பாப்பாவோட வந்தாங்க

இப்ப எங்க அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாமா

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


“ஹலோ...இது பயர் ஆபீஸா”

”ஆமா சொல்லுங்க”

”என் வீட்டு முன்னாடி அழகான பூந்தோட்டம் வெச்சிருக்கேன்”

”சரிம்மா நெருப்பு எங்க புடிச்சது?”

”நீங்க வரும்போது அதுமேல வண்டிய ஓட்டிட்டு வராம பார்த்துக்கங்கன்னு சொல்ல தான் கூப்ட்டேன்”

“நா கேட்டதுக்கு பதிலே சொல்லலியே”

”நெருப்பு பக்கத்து வீட்ல புடிச்சிருக்கு”

“ ஹலோ...ஹலோ... கட்டாகிடுச்சே”


@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நண்பர்களுக்கு கடன் கொடுத்தா நட்பு முறிஞ்சிடுமாம்....நான் உனக்கு கடன் தர முடியாது.

“அதனால பரவாயில்ல நாம எப்பவும் நல்ல நண்பர்கள்னு சொல்லிகிட்டதில்லியே”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

Download As PDF

Friday, April 11, 2014

சக்கரை கலந்த இறைச்சியினால் மறதி ஏற்படுமா ?

மொறு மொறு இறைச்சியில் சுவைக்காக இனிப்பு சேர்க்கப் படுகிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள்  குறித்த தகவல்கள் ...தொடர்ந்து படியுங்கள்..

இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 



பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும். இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள். இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல்
மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

தற்போது இத்தகைய உணவுகள்,  குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த மருத்துவ விஞ்ஞானிகளின்  எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக
வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.

Tks to bbc news

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?'

பழமொழியாக வழங்கி வந்தாலும் இதுக்கு விடை சொல்ல முடியுமா ?

இதற்கான பதில் இறுதியில்...

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

தவறு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது. தவறுகளே நம்மை கூர் செய்கின்றன



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நகைச்சுவை

தேர்தலில் நின்ற ஒருவர் தோற்ற தாக அறிவிக்கப் பட்டது. அவருக்கு 3 ஓட்டுகள் மட்டுமே கிடத்து இருந்தது. அவர் மனைவி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

"யோவ்...எனக்கு அப்பவே சந்தேகம் இருந்திச்சு. உனக்கு ஓட்டு போட்ட அவ யாருன்னு இப்ப ...இப்பவே தெரிஞ்சாகனும்"

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

நடிகையை கல்யாணம் செஞ்சுகிட்ட ஒருத்தன், டாக்டரிடம் போனான்...

" டாக்டர் எ மனைவி மேலே ஒரே சந்தேகமா இருக்கு "

"ஏன் "

" அவ அந்த மாதிரி போஸ் கொடுத்து இருக்கா டாக்"

" நடிப்பு தானப்பா"

" அதில்ல இல்ல டாக் அதுக்காக டிரைவிங் லைசென்ஸ்ல கூடவா.... "



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அப்ப புதுசா கலியாணம் ஆகி இருந்தது. பல சமயத்துல வீட்டுக்கு வர லேட்டாகிடும்.  வீட்டு நாய் என்ன பார்த்து சுத்தி சுத்தி குரைக்கும். அவ என்னோட செறுப்ப எடுத்து போடுவா அது குரைப் பத நிறுத்திடும்.

3 வருடங்களுக்கு பிறகு.....



"என்னோட நாய் செறுப்பு எடுத்து கொண்டு வருது

"அட டே"

என்ன நொ டே டே...

அவ என்ன பார்த்து குரைக்கிறா...



(நகைச்சுவைக் காக யார் மனதையும் புண் படுத்துவதற்காக இல்லை முக்கியமா என வூட்டுகாரி க்கு LoL) 

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~


மொபைல் போன் பயன் படுத்துவோரில் நூற்றில் 68 பேருக்கு "பான் தம் வைப்ரேசன் சின்ரோம்" இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.  அதாவது அருகில் இருக்கும் யாரோட மொபைல் சினுங்கினால் நம்முழுதான்னு எடுத்துப் பார்க்கரது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

விடுகதைக்கான பதில்  "காளான்"

விடுகதையாக இருந்தது பின்னாளில் பழமொழியாக மருவியது.



Download As PDF

Friday, March 28, 2014

வால் செத்துப் போச்சி !!

சந்தர்பங்களும் வாய்ப்புகளும் வாழைப் பழம் போல் வருவதில்லை....

அவைகள் பலா பழம் போலவே வருகின்றன.
ஆம்.... வாழை பழம் வேண்டுமென்கிற போது சுலபமாக உறித்து தின்று விடலாம்.  பலா பழத்தை சுவைக்க முட்களை நீக்கி பிசு பிசுப்பைத் தாண்டி சுளைகளை எடுக்க மெனக்கெட வேண்டும்.



கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள் தனக்கு வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட காரணமாயிற்று என்று கவிஞர் வாலி குறிப்பிட்டார்

அந்த பாடல் வரிகள் ...

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

இதே பாடலில் இந்த வரியையும் ரசிக்காமல் கடக்க முடியாது....


""வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும் 
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.""

ஆம் அந்த பாடலின் முதல் வரிகள்...

மயக்கமா தயக்கமா....


#படித்து_ரசித்தது

வால் செத்துப் போச்சி !!

இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை அவன் வாலைப் பற்றித்தான் கவலை. வாலி வானுலகம் போயிருந்தாலும் அவன் வால் மண்ணுலகில் வைக்கப் பட்டு இருந்தால் என்ன செய்வது ?? அந்த வால் வந்து தன்னை துன்புறுத்துமோ என்ற பயம்.

வாலி மீளாது போயினும் அவன் வால் மீண்டுவிட்டால் என்ன செய்வது என்று அச்சப் படுகிறான். அச்சத்தை தீர்த்து வைக்கிறான் அனுமன்.

அஞ்சலை அரக்க ! பார்விட்டந்தர மடைந்தானறே

வெஞ்சின வாலி, மீளான், வாலும்போய் வீழ்ந்ததன்றே !!

{{ கம்பராமாயணம்}}


தானிக்கி தீனி!!

{பரமார்த குரு கதை}

ஒரு சமயம் குருவும் சீடர்களும் வெளியூரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். செமையான வெயில், வழியில் தென்பட்ட ஒரு விடுதிக்கு சென்றனர். விடுதியாளரிடம் சற்று இளைப்பாறி செல்வதாக கேட்டு இடம் பிடித்தார்கள். அந்த விடுதிக்கு பணக்காரர் ஒருவர் குடும்பத் தோடு வந்தார். அவர் விடுதியாளரிடம் பணத்தை பற்றி கவலை படாமல் அறுசுவை உணவு செய்து தரும் படி கேட்டார். உணவின் மணம் மூக்கை துளைத்தது. குருவிற்கும் சீடர்களுக்கும் பசி வயிற்றை கிள்ள கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்று மூட்டைகளை பிரித்து உண்ணத் தொடங்கினர். ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் மணத்தை உறிஞ்சி யவாறே கட்டுச் சோற்றை காலி செய்தனர்.

சட்டென்று வந்த விடுதியாளர் அவர்களின் செயலை கவனித்துவிட்டார். அவர்களிடம் சமையல் மணத்தை நுகர்ந்தவாரே அவர்கள் சாப்பிட்டதால் அதற்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.

காசு தர மறுத்த குரு சீஷ்ய கோடிகளை பஞ்சாயத்தில் நிறுத்தினார். நடந்த தை கேட்ட நாட்டாமை விடுதியாளர் சொல்வது சரிதானென்றும் அதனால் குரு அவருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு சொன்னார். குரு மற்றும் சீடர்கள் தீர்ப் பை கேட்டு நொந்தனர்.

அதோடு நில்லாமல் நாட்டாமை வேலைக் காரனை கூப்பிட்டு பண முடிப்பை எடுத்து வர செய்தார். விடுதியாளரை அழைத்து காசு நிறைந்த முடிப்பை மேலும் கீழு ஆட்டிக் காட்டி என்ன இது ? எனக் கேட்டார்.

" காசு, துட்டு, பணம், பணம்...என சந்தோசமாக கூறினார் "

பணத்தின் ஓசையை கேட்டீர்கள் அல்லவா அது நீங்கள் காசை வாங்கி கொண்டதற்கு சமம்.

தானிக்கி தீனி சரியா போச்சு " இதுதான் தீர்ப்பு என்றார்.

$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


// மேரி க்யூரி //

போலந்து பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் பட்ட இடத்தில் பிறந்தவரான மேரி க்யூரி உலக மக்களுக்காக புற்று நோய் குணப் படுத்தும் ரேடியத்தை தன் உயிர் கொடுத்து கண்டு பிடித்தார் என்று சொல்லலாம்.

சோதனைச் சாலையில் கதிர் வீச்சு தாக்கத்தினால் அவர் ரத்தம் கெட்டது.
அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் சொன்னார் "அழகான யுவதிகள் இருக்க வேண்டிய இடம் சமையல் அறையும் வரவேற்பறையும் தவிர விஞ்ஞான வகுப்பறை அல்ல..."

பெண்ணான அவருக்கு நொபல் பரிசு வழங்குவதை ஒரு கூட்டம் கடுமையாக எதிர்த்தது. எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு 45 மாதங்கள் ஓய்வில்லாமல் முதுகு ஒடியும் படியான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். மேரி கண்டுபிடித்த ரேடியம் மிகக் கொடுமையான புற்று நோயை குணப் படுத்தும் மருந்தாயிற்று.

ரேடியம் கண்டுபிடிக்கும் முறையை, காப்புரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்து இருந்தால் கோடி கோடியாய் சம்பாதித்திருக்க முடியும் ஆனால், உலகத்துக்கே இலவசமாக வழங்கிவிட்டார்.

அதன் பின் அவருக்கே ரேடியம் தேவைப் பட்ட போது தயாரித்து வைத்திருந்த எந்த நிறுவனமும் அவருக்கு கொடுக்க முன் வரவில்லை.

அமெரிக்காவை சேர்ந்த மாதர் அமைப்பு லட்சம் டாலர் நிதிதிரட்டி அவருக்கு ரேடியம் கிடைக்க ஏற்பாடு செய்தது. இறக்கப் போவதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அந்த முடிவை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார். அவர் வேண்டியது இறப்புக்குப் பின் கணவர் க்யூரியின் கல்லறைக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே விருப்பமாய் இருந்தது.

அவரின் விருப்பத்திற்கும் சாதனைக்கும் உற்ற துணையாக இருந்தார் அவர் கணவர். பெண்கள் படிப்பதை கேலி பேசும் படிப்பாளிகள் நிறைந்த சமூகத்தில் இருந்து மீண்டுவந்த மேரி அன்றைக்கு சவால்களை சந்திக்காமல் இருந்து இருந்தால் உலகம் ஒரு அருமையான விஞ்ஞானியை இழந்து இருக்கும்.  








Download As PDF

Friday, February 28, 2014

சர்தார்ஜி ஜோக்ஸ்...[ PART TWO ]



சர்தார் சிறிய டி.வி வாங்குவதற்காக ஒரு வீட்டு பொருள்கள் விற்கும் கடைக்கு சென்றார். அந்த கடையில் சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

விற்பனையாளரிடம் "இந்த குட்டி டி.வி வேண்டும் என்ன விலை என்றார் ? "
விற்பனையாளர் "சர்தாருக்கு நாங்க விக்கறது இல்ல"

அவரை முறைத்து பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் ஒரு நாள் டர்பனை கழட்டி வைத்து விட்டு அதே கடைக்கு சென்றார் அதே ஆள்

"இந்த டிவி என்ன விலை ? "

அதே பதில் .

சில நாட்களுக்கு பின்,...

சர்தார் விடுவதாக இல்லை போனால் போகிறது என்று சலூன் கடைக்கு சென்று கெட்டப்பை மாற்றிக்கொண்டார்.  மீண்டும் அதே கடை அதே ஆள்.

அவரது துரதிருஷ்டம் "நாங்க சர்தாருக்கு விக்கறது இல்ல"

மிகக் கடுப்பானார் ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாந்தமாக கேட்டார்.

"அது சரி நான் தான்னு எப்படி கண்டுபிடிச்ச ? "

"அது மைக்ரோவோவன் " என்று பதில் வந்தது

  #@#@#@#@#@#@#@#@#@#@#@


சர்தாரும் அவர் நண்பரும்

சர்தார் :  ராத்திரி ட்ரெயின்ல தூக்கமே இல்ல பா...

நண்பர் : ஏன் ?

சர்தார் : ஊ(அ)ப்பர்  பெர்த்

நண்பர் : கீழ் இருக்கும் பெர்த் காரங்கள மாத்தி கேட்டிருக்கலாமே...

சர்தார் : ஒயே...அதான் யாருமே இல்லியேபா

 #@#@#@#@#@#@#@#@#@#@#@



சர்தார்  சேமிப்பு கணக்கு துவங்க ஒரு பேங்கிற்கு போனார்.  அவரிடம்
ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது..

விறு விறுவென்று மேனேஜரிடம் போனார்....

நான் இந்த பேங்கல தானே அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போறேன் பின்ன எதுக்கு
நான் டெல்லி போவனும்.... என்று அந்த விண்ணப்பத்தில் சுட்டி காட்டி னார்.

சுட்டிய இடத்தில்   " FILL UP IN CAPITAL " என்று இருந்தது.

#@#@#@#@#@#@#@#@#@#@#@



சர்தார் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

ஆசிரியர்  "  இந்தியாவுல ஒவ்வொரு 10 செகண்டுக்கும் ஒரு பெண்  குழந்தையை பெற்று எடுக்கிறார் "

சர்தார்   " ... அந்த பொண்ண உடனடியா தேடி கண்டுபிடிச்சி  நிறுத்த சொல்லனும் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது

டின் & மார்டின்  - ன்னு பேர் வெச்சார்

அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு

பீட்டர் & ரிபீட்டர்  - ன்னு பேர் வெச்சார்

அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு

மேக்ஸ் & க்ளைமேக்ஸ்  - ன்னு பேர் வெச்சார்

அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு
என்ன பேர் வெச்சு இருப்பாரு....

''''''
''''''
'''''

"டயர்ட் & ரிடயர்ட் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

(சினிமா தியேட்டரில்..)

சர்தார் டிக்கட் கிழிப்பவரிடம் திரும்ப திரும்ப சொன்னார்

"நாங்க 19 பேரு...நாங்க 19 பேரு "

இன்னொருத்தர் இருந்தா  ...20 பேரு ஆகி இருக்குமே ?

" 19 பேரு சேர்க்கரதுக்கே ரெம்ப கஷ்டமா போச்சுது, இது 18 ப்ளஸ் படம் தானே 19 பேர் போதுமே "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தார்ஜி சாவு வீட்டுக்கு போயிருந்தார்  போட்டோ கிராபர் வராததால்
செத்து போனவரை  புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள்.

ஆனால் அவருக்கு  தர்ம அடி  விழுந்தது

என்ன நடந்திருக்கும்....
..
...
....

"ஸ்மைல் ப்ளீஸ் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

ப்யூனை கூப்பிட்டு அவசரமாக ஒரு பிளம்பரை கூட்டி வரச்செய்தார் புரெபசர் சர்தார்.

உங்கள எதுக்கு இங்க வரச் சொன்னன் தெரியுமா?

பிளம்பர் தலையை சொரிந்து கொண்டே “தெரியலயயே சார்”

ஃக்வெஸ்டின் பேப்பர் லீக்காகிடுச்சாம் சீக்கரம் கண்டுபிடிச்சு அடைக்கனும் “

#@#@#@#@#@#@#@#@#@#@#@

  வேலைக்காரனை கூப்பிட்ட சர்தார்

“செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டியா ? “

இல்லீங்க ஐயா... மழை வருது

இது கூட உனக்கு சொல்லி தரனுமா ? கொடை பிடிச்சுட்டு தண்ணி ஊத்து போ...

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாரின் காதலி “ ஓ டார்லிங் நிச்சயத்திற்கு நீங்க எனக்கு ரிங் குடுக்கனும் “
”நிச்சயம் கண்ணே உன்னோட போன் நம்பர் சொல்லு “

#@#@#@#@#@#@#@#@#@#@#@

தெருவில் போன சர்தாரை நாய் துரத்த எப்படியோ தப்பிச்சு மாடி ஏறினார்.

இதை மேலிருந்து கவனித்தவர்  “ஏன் சிரிச்சிக்கிட்டே வரீங்க”

ஹி..ஹி... நான் ஹட்சில் இருந்து இப்ப ஏர்டெல்லுக்கு மாறிட்டேன் அதுக்கு தெரியல போல...

#@#@#@#@#@#@#@#@#@#@#@

இங்கிலீஸ் டீச்சர் எல்லோரையும் “கிரிகெட்டை பற்றி கட்டுரை எழுத சொன்னாங்க”

சர்தாரிடம் ” அதுக்குள்ள எழுதியிட்ட யா எங்கே காட்டு“

”DUE TO RAIN NO MATCH "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

  அம்மா :  "அந்த சோனியா பொண்ணுக்கு உன்ன விட ஒரு வயசு அதிகம்டா"

 சர்தார்  : “ ஓயே,,.. நான் அடுத்த வருசம் தானே கல்யாணம் செஞ்சுக்கபோறேன்...நீ கவல படாத”

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாரும் மனைவியும் ஒரு காஃபி ஷாபிற்கு போனாங்க.

சர்வரை கூப்பிட்டு “தம்பி ரெண்டு ஹாட் காஃபியே கொடு ஒரு எக்ஸ்ட்ரா டம்ளர் குடுத்துருபா”

மனைவி கடிந்து கொண்டார் “பாப்ரே பாப்...நான் கோல்ட் காஃபி தானே கேட்டேன்”

நான் தான் எக்ஸ்ட்ரா டம்ளர் கேட்டிருக்கேன்ல ஆத்தி குடுக்குறேன். அவங்களே ஆத்தி கொடுத்தா ரேட் ஜாஸ்தி மா“

 #@#@#@#@#@#@#@#@#@#@#@

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த சர்தார் புலம்பினார்

“ஹையோ... என்ன மார்டர்ன் ஆர்ட்டோ,.. மோசமா இருக்கே”

பக்கத்தில் இருந்தவர் “ஜி அது கண்ணாடி”

#@#@#@#@#@#@#@#@#@#@#@

பார்க்கில் ஒருவர் சர்தாரிடம் கேட்டார்....

ஏன் மன்மோகன் சிங் காலைல வாக்கிங் போகாம சாயங்காலமா வாக்கிங் போறார் ?
சர்தார்  " அரே பாய்.... அவரு  P.M ... A.M  இல்லே..."

#@#@#@#@#@#@#@#@#@#@#@

உடல் எடையை குறைப்பதற்காக சர்தார் ஒரு டாக்டரிடம் போனார்.
தினமும் 8 கிலோமீட்டர்கள் நடந்தால் 300 நாட்களில் 34 கிலோ குறைஞ்சிடும்னார் டாக்டர்.

300 நாட்கள் கடந்துவிட்டது, சர்தார் டாக்டருக்கு போன் செய்தார்.

"டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே உடல் இளைச்சு போச்சு ஆனா ஒரு ப்ராப்ளம் "

"என்னாச்சு "

"என் வூட்லேருந்து இப்ப நான் 2400 கிலோமீட்டர் தாண்டி இருக்கேன் என்ன செய்யட்டும்"

 #@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாரின் இரண்டு காதுகளும் சிவந்து போய் இருந்தது....டாக்டர் கேட்டார்
"அச்சச்சோ என்னாச்சு "

டாக்டர் நான் துணிக்கு அயர்ன் செஞ்சிட்டு இருந்தப்போ.... போன் வந்திடுச்சு
"போனுக்கு பதிலா  அயர்ன் பாக்ஸை காதுல வெச்சு"

"அது....சரி அந்த காது ?"

"அதே ஸ்கவுண்டரல் திரும்ப போன் பன்னிட்டான் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தார் செல்ல நாயை வாக்கிங் கூட்டிட்டு போய்டிருந்தார்....

எதிரே வந்த நண்பர்.... "மூனு நாய் வளர்த்தரீங்களா ?"
திரும்பிப் பார்த்த சர்தார்....

அதுங்க ரெண்டும் "ஜூலியோட  ஃப்ரென்ட்ஸ்...எங்களோட வாக்கிங் வருதுங்க..."

#@#@#@#@#@#@#@#@#@#@#@





Label :  சர்தார்ஜி ஜோக்குகள், சர்தார் நகைச்சுவை

Download As PDF

Friday, February 21, 2014

சர்தார்ஜி ஜோக்குகள் !!


Disclaimer : நகைச்சுவைக்காக மட்டும் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...

முதலாளி ; உனக்கு ஸ்டார்டிங் சேலரி 2000

சர்தார் ; "ரொம்ப சந்தோசம், அப்ப டிரைவிங் சேலரி ? "

@#@#!#@

எகிப்து கேளரியில் மம்மியை பார்த்து கொண்டிருந்த இரண்டு சர்தாஜிகள்.

"பெரிய ஆக்ஸிடண்டு போலப்பா...உடம்பு முழுக்க கட்டு போட்டிருக்கு."

"இருக்கும், இருக்கும் வண்டி நம்பரு கூட எழுதிருக்கே BC 1827 "

@#@#!#@#

ஒரு டிடக்டிவ் நிறுவன இண்டர்வியுவில்;

காந்திய சுட்டது யாரு ?

சர்தார்ஜி ; நன்றி சாப்., இப்பவே அத கண்டு புடிக்கிற வேலைய ஆரம்பிச்சுடுரேன்.

@#@#!#

பரிட்சைக்கு ப்ரட்ண்ட் பத்தி மட்டுமே படிச்சிருந்த சர்தார் பரிட்சையில் கேட்கப் பட்ட பாதர் ங்கர கேள்விக்கு, இப்படி எழுதினார்.

I am fatherly person. I have lot of fathers, some of my fathers are male, some are female. My true father is my neighbour.

@#@@!@

இண்டர்வியூவில் P.hd ன்னு போட்டிருக்கீங்க அப்படின்னா ?
சர்தாஜி புன்னகையுடன்

" Passed Highschool with Difficulty "

@#!#!@!#

தமிழ் காரன் கேட்டான் "தமிழ் தெர்யுமா?"

சர்தார்ஜி "ஹிந்தி தெர் ரா பாப் "

@#!#!@!#

சர்தார் அடிக்கடி சமையல் அறைக்கு போவதும், சக்கரை டப்பாவை திறந்து பார்பதுமாக இருந்தார்.

மனைவி கேட்டார்
"ஏனுங்க டப்பாவை அடிக்கடி திறந்து பார்கரீங்க"

"டாக்டர் சொன்னதை மறந்திட்டியா...அடிக்கடி சுகரை செக் செய்ய சொன்னாரே"

@#!#!@!#

இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று சர்தாஜிகள் போய்ட்டு இருந்தாங்க, வழியில் ட்ராபிக் போலிஸ் கை காட்டி நிறுத்தினார்.  ஒருத்தர் சொன்னார் " ஏற்கனவே நாங்க 3 பேர் இருக்கோம் சார்"

@#!#!@!#

ஒரு காட்டில் இரண்டு சர்தார்கள் சென்று கொண்டு இருக்கும் போது எதிரே ஒரு சிங்கம் வந்து விட்டது ஒருத்தர் தைரியமாக மணலை அள்ளி அதன் கண்களில் போட்டுவிட்டு ஓடினார். இரண்டாமவர் மெதுவாக நடந்து போனார். ஏன் ஓடாமல் நடந்து வருவதாக கேட்டதற்கு "அது கண்ணுல மண்ண போட்டது நானில்லையே பின்ன எதுக்கு ஓடனும்"

@#!#!@!#

பேங்க் வேலைக்கு இன்டர்வியூவில் சர்தாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது " சைக்ளோன் என்றால் என்ன ? "

அவரின் பதில் "சைக்கிள் வாங்க பேங்கில் கொடுக்கப்படும் லோன்"

இன்னொரு இன்டர்வியூவில் "உங்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் தெரியுமா ? "

"அட்ரஸ் சொல்லுங்க சார்"

இன்னொரு இன்டர்வியூவில் " கர்பனை செஞ்சுக்கோங்க.... நீங்க பதினஞ்சாவது மாடீல இருக்கும் போது தீ பிடிச்சுக்குது எல்லோரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யராங்க நீங்க என்ன செய்வீங்க"

"கர்பனை செய்யறத நிறுத்திடுவேன் "

@#!#!@!#


மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கி வந்த சர்தார் ஒன்னொன்னா எடுத்து அதன் ஓரங்களை நறுக்கினார். நண்பர் ஏன் என்று கேட்டார்.

" சைட் எபெக்ட் வராம இருக்கோனுமே அதான் கட் செய்றேன்"

@#!#!@!#

பஸ் கண்டரிடம் இரண்டு டிக்கெட் கேட்டார்.

"ஒரு ஆளுக்கு எதுக்கு 2 டிக்கெட்"

"ஒன்னு தொலஞ்சி போனா இன்னொன்னு இருக்குமே அதுக்குதான்"

இரெண்டுமே தொலஞ்சி போச்சின்னா

"பாஸ் இருக்கே பாஸ்"


@#!#!@!#

இஸ்ரோ சர்தார் ஒருவரை நிலவுக்கு அனுப்பியது. நிலவுக்கு சென்றதும் ராக்கெட்டில் இருந்து இறங்க மறுத்த சர்தார்.

 " யாருகிட்ட காது குத்தரீங்க இன்னிக்கு அம்மாவாசை இது நிலாவா இருக்காது"

@#!#!@!#

"மேரா பேட்டா மோட்டார் சைகிள் சே கிர் கயா "

டாக்டர் " ஐ டோன்ட் நோ இந்தி டெல் மி இன் இங்கிலீஸ்"
" My londa gironda from Hero Honda"

@#!#!@!#

இங்கிலீஸ் வாத்தியார் " Tell a compound sentence."

சர்தார் " Stick No Bills! "

@#!#!@!#

ATM மெசினில் பணம் எடுக்கும் போது பின்னால் இருந்தவர் "உங்க பாஸ்வேர் எனக்கு தெரிஞ்சிடுச்சே **** தானே"

தவறான பதில் அது "2345"

@#!#!@!#

விற்பனையாளர் : "சார் இந்தாங்க எறும்பு பவுடர் "

சர்தார்ஜி " வேனாம் வேனாம் இன்னிக்கு அதுங்களுக்கு பவுடர் போட்டா...நாளைக்கு லிப்ஸ்டிக் கேட்கும் "

@#!#!@!#

_கலாகுமரன்

Download As PDF

உப்புநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம்


க்ராபைன் (கிராபைட் அல்ல) உப்பு தண்ணீரை குடிநீராக மாற்றும் தன்மையுடையது.

"Graphene makes salt  water drinkable "

பல வருட சோதனைகளுக்குப் பின் யு எஸ் மாஸாசூஸெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (M I T ) ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் குறைந்த செலவில் உப்பு தண்ணீரை குடிநீராக மாற்ற ஒரு வழி கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்த ரகசியம் என்னவெனில் சூப்பர் மெட்டீரியல் என அழைக்கப் பெறும் “க்ராபைன் [Graphene] இத் தனிமத்தில் உள்ள கார்பன் மூலக்கூறுகள் (அணுக்கள்) தட்டி போன்ற அமைவு கொண்டது, அது மட்டுமல்ல இரும்பை விடவும் இது ஆயிரம் மடங்கு வலிமையானது.  இந்த மீச்சிறு தட்டி  1 நானோமீட்டர் அளவினாது.  உப்பு தண்ணீர் இதன் மீது வேகமாக பீச்சி அடிக்கும் போது மீச்சிறு நீர் மூலக்கூறுகள் உடைபட்டு சோடியம் மற்றும் க்ளோரின் அயன்களாக பிரிதலில் உப்பானது விடுபடுகிறது.


இக் கண்டு பிடிப்பு தொழில் வல்லுனர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கான செயல் நுட்பமுடைய க்ராபைன் தண்ணீர் பில்டரை கண்டுபிடிக்கும் முயற்சியும் ஜரூராக நடக்கிறது. கூடிய விரைவில் சந்தைக்கு வரலாம்.

 க்ராபைன் கடினத்தன்மை காரணமாக இதை கட்டிடங்களுக்கு பயன் படுத்துகிறார்கள்.

It's easy to make graphene in the lab, but hard to make perfect graphene on a large scale.

பார்முலா 1 கார்களுக்கு கடினமாகவும் அதே சமயத்தில் எடை குறைவானதாக இருக்கும் படியான கார்பன் ஃபைபர் (Carbon fibre) பயன் படுத்தப் படுகிறது.

Download As PDF

Tuesday, February 18, 2014

ooஓவியர் மருது - நவீன கலைவெளியின் விளைபுலம் 00[பகிர்வு ]





மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயர் நூலின் இரண்டாவது
அத்தியாயம் இப்படித் தொடங்கும்:

“சனிக்கிழமை காலைப் பொழுது தொடங்கியிருந்தது. கோடை உலகம் புதுப்பொலிவோடு ஒளிர்ந்தது; ஜீவன் பொங்கி வழிந்தது; ஒவ்வொரு இதயத்திலும் பாடல் ஒன்று பதிந்திருந்தது;

அந்த இதயம் இளமையாயிருப்பின் உதடுகளில் இசை கசிந்து
கொண்டிருந்தது. ஒவ்வொரு முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்;
எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் வசந்தம் குடிகொண்டிருந்தது. லோகஸ்ட் மரங்கள் பூத்துக் குலுங்கின.  அந்த மலர்களின் வாசம் காற்றில் கலந்திருந்தன.”

மருதுவின் இருப்பில் மார்க் ட்வைனின் இந்தக் கிராமத்து இதமும் வசந்தமும் கலந்திருக்கும். ட்ராட்ஸ்கி மருதுவின் செயல்பாடுகளிலும் உரையாடல்களிலும் உடனிருக்கும்போது பலமுறை இந்த வரிகள் என் நெஞ்சில் நிழலாடுவதை உணர்ந்திருக்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் மருதுவுடன் நிகழ்ந்த சந்திப்புகள் எல்லாம் எனக்கு வைகாசி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன. மணிக்கதவின் தாழ்திறப்பாகத் தொடங்கும் மருதுவின் நேர்ப்பேச்சு, உலகை ஏகதேசமாக்கிக் காட்டும்; தமிழ்த் தொன்மங்களை பேசியும் எழுதியும் சித்திரங்களாக்கியும் சிலாகிக்கும்; அவரது அம்மா
வழி தாத்தா சோலைமலையின் பிம்பம் எழும். அவருடன் நேற்றைய திரை உலக ஆளுமைகளின் முகங்கள் வந்து போகும்.


அவரது கோரிப்பாளையம் வீட்டின் இரண்டு தலைமுறை கலை இலக்கிய அரசியல் வரலாறு அதிர்ந்து கொண்டிருக்கும். அவரது கோட்டோவியங்களில் காணப்படும் தீர்க்கமான கோடுகளும் முகங்களும் நமது வேர்களை அடையாளப் படுத்துவதைப் போல அவரது உதடுகள் தமிழர் சார்ந்த கலை
அரசியல் பண்பாட்டு வெளிகளில் அவரது நிலைப்பாட்டை தீர்க்கமாக உச்சரித்துக் கொண்டிருக்கும். மொன்னைத் தன்மை அறியாதது அவரது மொழி;

எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் மருதுவுக்கு வெளிப்படையான மதிப்பீடுகள் உண்டு. அவரது உணர்வுகளுக்கும் உந்துதல்களுக்கும் வாழ்வியல் அறத்திற்கும் அப்பால் உள்ள எதையும் யாரையும் நிராகரிக்க அல்லது
புறக்கணிக்க அவர் தயங்குவதே இல்லை.

அவர் வாழ்வதும் வரைவதும் ஒரே தளத்தில்தான். வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்து வரும் உறுதியும் தெளிவும் துணிவும் அவரது பதின் வருவ வரலாற்றிலேயே இடம்பிடித்துள்ளன. ‘கல்லூரிக் கல்வி எனக்கு பிரதானமில்லை’ என்று தனது தந்தையிடம் பிரகடனப்படுத்தும் சொற்கள் பொருள் பொதிந்தவை. தனது வாழ்க்கையைத் தானே தகவமைத்துக் கொண்டவர் அவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா தனது ஆசான் மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘அவர் தமிழின் விளைபுலமாக’ விளங்கினார் என்று குறிப்பிடுவார். என்னைப் பொறுத்தவரை நவீன கால தமிழக கலைப் பெருவெளியின் விளைபுலமாக மருது வாழ்கிறார்
என்று எவ்வித தயக்கமுமின்றி உரத்துச் சொல்லமுடியும். அப்படிச் சொல்வதற்கான காரணிகள் நிராகரிக்க முடியாதவை.

கணினியை அறிவியல் உலகத்திற்கான அதிசயப் பொருளாகக் கண்டு காத தூரம் விலகியிருந்த தமிழ்க் கலையுலகில் கணினி தமிழ்க் கலையுலகின் விரைவான விரிவாக்கத்திற்கான திறவுகோல் என்று பேசியும் பயன்படுத்தியும் உணர்த்தியவர் மருது. ஒரு காலக்கட்டத்தில் தமிழகத்தில் டிஜிட்டல் என்ற சொல்லை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரே கலைஞன் மருதுவாகத்தான் இருக்க முடியும். தமிழில் உலகத்தரமான காமிக்ஸ் புத்தகங்களின் தேவையை  கிராஃபிக்ஸ் நாவல் பற்றிய அறிமுகத்தை இவை சார்ந்த மாபெரும் உலகக் கலைஞர்களை ஓயாமல் ஓதிக் கொண்டிருந்தவரும்
இவரே.

வருங்காலத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பின் பெரும்பகுதி ஒரு பெரிய அறைக்குள்ளே முடிந்துவிடும் என்று அலறிக் கொண்டிருந்த கலைஞனும் இவரே. அனிமேஷன் செய்யப்போகிற அதிசயங்களை திரைப்படத் துறை
நண்பர்களிடம் ஏன் சொல்கிறேன்? எதற்குச் சொல்கிறேன் என்று வினாக்களை எழப்பியபடி 20 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசிவந்த விஷயங்கள் அவரின் தொடுவான எல்லையை தீர்மானிக்க முடியாதபடி நம்மைத் தடுமாறச்
செளிணிகின்றன.

சிற்றிதழ் கூடாரங்களில், நவீன இலக்கிய முகாம்களில் வான்காவும் டாலியும் வலிந்து பேசப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் வந்த காலங்களில் மருது 19ஆம்
நூற்றாண்டின் ஈடு இணையற்ற பிரெஞ்சு ஓவியர் புகெரவ்வை   எனக்கு அறிமுகப்படுத்தினார். வாழ்நாள் முழுவதும் இழிபுகழைத் தவிர வேறோன்றும் காணாத அந்த மகா கலைஞனின் மனித உருவ சித்தரிப்புகளில் உள்ளார்ந்து கிடக்கும் அந்த மனிதர்களின் நுட்பமான மனநிலையையும்
ஆளுமையையும் உணர்த்தும் மேதைமையை பேசிக் கொண்டிருந்தார்.

‘எழுத்தாளர்களுக்கு ஓவியர்கள் பக்கவாத்யகாரர்கள் அல்ல’ என்று பகிரங்கமாக பிரகடனம் செளிணித மருதுவுக்கு கலைஞர்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை எல்லையற்றது. கலைஞனின் தனித்துவதத்திற்கும் சுதந்திரத்திற்கும் அறிந்தோ அறியாமலோ ஏற்படும் கடுகளவு பிசகைக் கூட அவர் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருமுறை தமிழ்நாட்டின் பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் தனது நூலுக்கான அட்டையை வடிவமைத்து தருமாறு மருதுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
மருதுவின் வடிவமைப்பில் நாளுக்கொரு திருத்தங்களைச் சொல்லியதோடு முகப்பு ஓவியத்தின் வண்ணங்களிலும் சிலமாற்றங்களைச் செளிணியுமாறு கூறினார். அவர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்டதோடு சரி.
குறுக்கீட்டை விரும்பாத மருது அந்த எழுத்தாளரை புறக்கணித்தார். வடிவமைத்த அட்டையை கிடப்பில் போட்டார். கடைசியாக மருதுவின் மனநிலையை உணர்ந்து தன் மீது ஏதேனும் வருத்தமா? என்று கேட்டார் அந்த பிரபல எழுத்தாளர்.

‘நீங்கள்தான் வாயால் எதையும் வரைந்துவிட முடியும் என்றால் நான் எதற்கு? கலைஞன் உங்கள் கையில் ஒரு கருவியல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்’ என்று காட்டமாகப் பதில் சொன்னார். இது கலைஞர்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கான மருதுவின் அறைகூவல். 

மருதுவின் கலைப்பயணம் வானில் சீறிஎழும் வாணவேடிக்கைகளின் வேகத்தோடும் அவை வெடித்துச் சிதறி விண்ணை வண்ணமயமாக்கும் அழகோடும் தொளிணிவின்றித் தொடர்கிறது. மருது ஒரு இறைமறுப்பாளர். பெரியார் அவருக்கு மிகநெருக்கமான ஆசான். தந்தை மருதப்பன் ஒரு
ட்ராட்ஸ்கியிஸ்ட்; தொடக்கத்தில் காந்தி ஆஸ்ரமத்தில் ஓராண்டு காலம் தங்கி பணியாற்றியவர்; இலங்கையிலிருந்து தப்பி வந்த கொமீனா டி செல்வா, என்னம் பெரைரா ஆகிய இரண்டு ட்ராட்ஸ்கியவாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்.

பீம்சிங் படங்களுக்கு கதை வசனம் எழுதிய சோலைமலை மருதுவின் அம்மா வழி தாத்தா. இவர்தான் மருதுவின் கலையார்வத்தை சிறுவயதிலேயே இனம் கண்டு அவரை ஊக்குவித்தவர். நடிகர் எஸ்.எஸ்.ஆர் மருதுவுக்கு பெரியப்பா
மகன். இத்தகைய குடும்பச் சூழலில் மருதுவின் கலை இலக்கிய வாழ்க்கை பயணப்பட்டிருக்கிறது.

ஒரு நல்ல நாற்றங்காலில் முளைவிட்ட பயிர் மருது. இந்த இளம் நாற்று எந்த நிலத்தில் பிடுங்கி நடப்படவேண்டும் என்பதையும் தான் அளிக்கப்போகும் விளைச்சலின் தரத்தையும் மகசூலையும் தீர்மானித்து வைத்திருந்தது.
முதல் முறையாக மருது சென்னைக்கு வந்தது அவரது உறவினர் திருமணம் ஒன்றிற்காக. அது அவரது பதின்பருவம் தொடங்கிய காலகட்டம். அவரை அழைத்துச் செல்ல நடிகர் எஸ். எஸ். ஆர் அவர்கள் ஒரு நீண்ட கார் அனுப்பி
வைத்திருந்தார். தனது குடும்பத்தினரோடு அந்த மோட்டார் வண்டியில் ஏறி முன்சீட்டில் அமர்ந்த மருதுவின் கண்களில் ஸ்டியரிங்வீலில் பதிந்திருந்த எஸ்.எஸ்.ஆர் என்ற வார்த்தைகள் இன்னும் அவரது நினைவில் உள்ளது. சென்னையில் அவர் பயணித்த அதே வண்டியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்
மரணமடைந்த தியாகராஜ பாகவதரின் உடல் திருச்சிக்கு எஸ்.எஸ்.ஆரால் எடுத்துச் செல்லப்பட்டது. இதை எஸ்.எஸ்.ஆர் சொல்லக் கேட்டறிந்திருக்கிறார் மருது. நாடறிய வாழ்ந்த கலைஞனின் அவலம் மிகுந்த கடைசிப் பயணத்துடன் தான் பயணித்த வாகனமும் சம்பந்தப்பட்டிருப்பதைச் சொல்லி மருது நெகிழ்ந்து போவார்.

மருதுவின் வாழ்க்கை சம்பவங்களாலும் மனிதர்களாலும் நிறைந்தது. தீவிர கொள்கைகளோடும் தீர்க்கமான முடிவுகளோடும் இயங்கும் மருது தனது சுயசிந்தனைகளை மையப்படுத்தியே பயணிக்கிறார். வறட்டு வாதங்களுக்கு அவர் இடம் தருவதில்லை. புற அடையாங்களை உவப்பதில்லை. அழகியல்
பார்வையும் அறிவியல் பார்வையும் அவரது வழித்தடங்கள்.

ஒருமுறை நான் சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்கு சிதம்பரம் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கலைஞன் ரோடின் பார்த்து வியந்த ஆடல்வல்லானுக்கு இரவு 3.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்கியது. அற்புதமான அந்த
வெண்கலச் சிலைமீது குடம் குடமாக ஊற்றப்பட்ட தேன் வழிந்தோடியது. வழிகிற கெட்டித்தேன் நடராசரின் முகத்தை மறைத்து நின்றது. முகமற்ற முகத்துடன் நடனம்புரிந்த அழகில் ஆயிரம் மாயவித்தைகளை கண்டுணர முடிந்தது. மருது வரைந்த ஒரு நடராஜர் ஓவியத்திலும் நடராஜர் முகமற்ற
முகத்துடன் இருந்தார். மற்ற ஆராதனைகள் தொடர்ந்தன.

மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட திருநீற்றில் முகமற்றிருந்த நடராசர் மறுஒன்றிலாத ஒளிரும் முகத்துடன் காட்சியளித்தார். பிறகு வண்ண மலர்கள் தூவித் தொழுதனர். ஏறக்குறைய மூன்று மணி நேரம் இந்த ஆராதனை தொடர்ந்தது. இவையணைத்தும் முடிந்தபின் கோயிலை விட்டு வெளியே வந்ததும் முகமற்ற நடராசரைப் பற்றிப் மருதுவிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. காலை 7 மணி இருக்கும். கைபேசி மூலம் மருதுவை தொடர்பு கொண்டேன். அவர் குடும்பத்துடன் பொங்கலுக்காக காரில் மதுரை சென்று கொண்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் பேசினேன்.

“இல்ல மருது. இன்றைக்கு சிதம்பரம் வந்திருந்தேன். நடராஜரின் ஆருத்ரா தரிசனத்திற்காக, மூன்று மணிநேரம் அபிஷேகம் நடந்தது. நடராஜர் சிலைமீது குடம் குடமாகத் தேனைக் கொட்டியபோது நடராஜரின் முகம் முழுதுமாகத் தெரியவில்லை. நீங்கள் வரைந்த முகமற்ற நடராஜரை இன்று நேரில் தரிசித்தேன். மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்த ஆராதனையில் அழகின் பேரலைகள் எழுவதை உங்களால் கண்டுகொள்ள முடியும். அடுத்த ஆருத்ரா தரிசனத்திற்கு நீங்களும் உங்களது பிரதம சீடன் கருணாநிதியும் மற்ற இளங்கலைஞர்களுடன் இதைக் காணவேண்டும்” என்று சொன்னேன்.

“ஆஹா பிரமாதம். இதுதான் நான் சொல்றேன். இது எல்லாமே ஒரு ’Theatrical Effect’. உங்களுக்கு பக்தி, எங்களுக்கு கலை. இதை நீங்க புரிஞ்சி வைச்சிருக்கிங்க. அங்கதான் நாம ஒண்ணு சேர்றோம்” என்று என்றைக்குமான ஏகாந்த கிளர்ச்சியோடு பேசினார்.

இறைமறுப்பாளரான மருதுவின் அழகியல் பார்வையில் எந்த வறட்டு தத்துவங்களுக்கும் இடமிருக்காது என்று நான் சொல்லுவது இதை வைத்துத்தான். ‘தரிசனம் என்பது தானாக நிகழ்வது’ என்பார் லா.ச.ரா.
எனக்கு கிடைத்த மருது தரிசனமும் அப்படித்தான். இந்தக் கட்டுரையில் வேண்டுமென்றே மருதுவை ஓவியர் என்ற அடைமொழியிட்டு குறிப்பிடவில்லை. நாயக்கர் மஹாலில் ஒரு தூணைக்காட்டி இதுதான் நாயக்கர் மஹால் என்று சொல்ல முடியுமா? அது பரமார்த்த குருவின் சீடர்கள்
யானையைப் பார்த்த கதைதான். உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு நிகழ்த்துக் கலைஞனாக மாறிவிடும் மருதுவின் பல்பரிமாணங்களை கண்டு கொண்டவர்களுக்கு வெறும் ‘ஓவியர் மருது’ என்ற விளி உவப்பாகாது. அவரது நெஞ்சில் தமிழ் மண்ணின் ஈரம் கசியும். அவரது நுண்மான் நுழைபுலத்தில் மேலைத் தேய நவீனங்களுடன்
ஆயிரம் கலைகள் பரவசப்படும்.



"அரசன்"






"2012 ல் ''

இத்தகைய கலைஞனின் வீட்டுக்கு கலைமாமணி மட்டும் வந்து கதவைத் தட்டிச் சென்றுள்ளது. ‘பத்ம’ங்களுக்கு இன்னும் பாதை தெரியவில்லையாம்.
‘நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டுக்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்’ என்று வேண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்த பொழுது ஆஸ்கார் ஒயில்டு எழுதினான். இன்றைக்கு இந்த வாசகம் மருதுவுக்கும் பொருந்தும். ‘வாளோர் ஆடும் அமலை’ மூலம் கடந்த எட்டாண்டுகளில் மருதுவின் நவீன ஓவியங்கள் நூல் வடிவில் பதிவாகியுள்ளன. இதை வெளியிட்டு மருதுவுக்கு சிறப்பு செளிணிதிருக்கும் தடாகம் அமைப்பு சார்ந்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மிகுந்த கவனம் செலுத்தி அயராமல் இந்த நுலை உருவாக்கி மருதின் கலை ஆளுமையை பதிவு செளிணியும் கவிஞர். வெண்ணிலாவுக்கு எனது வணக்கங்கள். மருதுவுக்கு என்னை
ஆற்றுப்படுத்திய எனதன்புக்குரிய இளையபராதியை நினைவுகூர்ந்து அகமகிழ்கிறேன்.

கட்டுரை : முத்தையா நடராஜன் (சந்தியா பதிப்பகம்)


tks to artist jeevananthan

ஒரு கலைஞனை அவன் வாழும் காலத்திலேயே கொண்டாடுவது என்பது மிக உன்னதமான காரியம்.அதையும் உயரியமுறையில் செய்வதென்பது அதைவிட உன்னதம்.ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது பற்றிய நாற்பது கட்டுரைகளை மருதுவை நன்கு அறிந்த சிறந்த ஆளுமைகள் ஆத்மார்த்தமாக எழுதியுள்ளவை தோழர் அ.வெண்ணிலா,தோழர் முருகேஷ் ஆகியோரின் ஈடுபாடு மிக்க உழைப்பினால் “காலத்தின் திரைச்சீலை” என்று புத்தகமாக வெளி வந்துள்ளது.அவசியம் படிக்க வேண்டிய நூல்.  “அகநி”வெளியீடு,வந்தவாசி -94443 60241/04183-226543அதில் வந்துள்ள ஒரு நல்ல கட்டுரை.நண்பர் (சந்தியாபதிப்பகம்) நடராஜன் எழுதியது. - "ஜீவாநந்தன்"
Labels :  ஓவியர் மருது, டிராட்ஸ்கி மருது, காலத்தின் திரைச்சீலை,


Download As PDF

Friday, February 14, 2014

மறைக்கப்பட்ட தமிழரின் வரலாறு (பகிர்வு)

திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.................

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்2012ல் ஆய்வு மேற்கொண்டார்....... அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்..................


பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது.

அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.........

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ, சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்தியஅரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.............

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது..............ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடுவெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

tks to  டொனால்ட் ராபர்ட் _originally shared

(Ref: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 and ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007 )
Download As PDF

Wednesday, February 12, 2014

டாவின்சி ஓவியத்தில் ஒளிந்திருக்கும் இரகசியம் !

15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் "தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)" திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

 கட்டிடக்கலை "ப்ரஸ்பெக்டிவ் " என்று சொல்ல கூடிய நுணுக்கமும் இந்த ஓவியத்தில் உள்ளது.  இதை பார்வையிட்ட அறிஞர்களும், ஆர்வளர்களும் இந்த ஓவியம் பற்றி பல்வேறு கருத்துக்கள் ,அபிப்ராயங்கள் சொல்லுகிறார்கள். (தத்துவ விளக்கம், ஜோதிடம், விண்ணியல், கணிதவியல், கலாச்சாரம் இப்படி)


1726 லிருந்து 1954 வரையிலும் பல கால கட்டங்களில் , பல ஓவியர்களால் இந்த ஓவியம் சிதையாமல் (ரீ கலரின்ங் / பேட்ச்) பாதுகாக்கப்பட்டது.  பார்ஸிலோன் என்பவர் சுமார் 20 ஆண்டுகாலம் (1979- 1999) துல்லியமான முறையில் இதை மறுசீரமைவு செய்து பழைய வடிவத்தை கொடுத்தார். இந்த ஓவியம் இருக்கும் சுவரின் மறுபக்கம் சமையலறை அதனாலும் ஈரம் காரணமாக இந்த ஓவியம் பொழிவிழந்தது. 1943 ல் உலகப்போரின் போது கட்டிடத்தின் அருகில் குண்டு விழுந்தது, அப்போது அதிர்ஷ்டவசமாக இந்த ஓவியம் தப்பியது. ஓவியம் இருந்த அறை சிறையாகவும் இருந்திருக்கிறது.

யேசு தன் சீடர்களுடன் விருந்துன்னும் காட்சி "தி லாஸ்ட் சப்பர்" பைபிளில் இந்த காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறது (as it is told in the Gospel of John, 13:21. Leonardo has depicted the consternation that occurred among the Twelve Disciples when Jesus announced that one of them would betray him.)


The Last Supper (1498)—Convent of Sta. Maria delle Grazie, Milan, Italy







  • மூன்று வாயில்கள் எதற்கு  ? நாம் காந்தப்புல மற்றும் மின் உலகத்தில் வசிக்கிறோம்.  யேசுவை  சூரியனாகவும் , சூரியனைச் சுற்றி 12 ராசிகளையும் உருவகப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது.



  • மூன்று மூன்று பேராக 4 குழுக்கள் இருக்கு, மொத்தம் 12 பேர் இது வருடத்தின் 12 மாதங்களையும், நான்கு சீசனையும் (காலங்கள்), ஒவ்வொரு சீசனும் மூனு மாசம் இருக்கும் என்பதை சுட்டி காட்டுகிறது.  முதல் குழுவில் 3பேர் இருக்காங்க இரண்டு கைகளை உயர்த்தி இருப்பது ஜெமினி, அடுத்த குழு லியோ, இப்படி ராசிகளையும் சுட்டிக்காட்டுது. மூன்று வாயில்களில் வலதில் செல்லக் கூடாது, இடதிலும் செல்லக் கூடாது, நடுவில் உள்ள வாயில் வழிதான் செல்லவேண்டும்.

  • யூதர்கள் அந்த டேபிலை சுற்றி இருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்து இருக்கவில்லை. .. இதை டாவின்ஸி ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார். எகிப்தியர், இந்தோனேஷியன்கள், மெக்ஸிகோ டேபிலை சுற்றி இருக்கிறார்கள்.


(in medieval )ஐரோப்பிய சர்சுகள் மற்றும் கதீரிட்ரல்களில் இந்த வாயில் வடிவங்களை காணலாம்.


  • ஐரோப்பிய கலாசாரத்தில் மூன்று எனபது வாழ்கையின் பிறப்பு, உயிர், மறு பிறப்பு இன்னும் இது போல மூன்று என்ற எண் ( triadas),செயல்கள், வழிமுறைகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பதை காணலாம்.
  •  Trinity மூன்று வாயில்கள் , கட்டிடக்கலையில் அந்த கால கட்டங்களில் அப்படி அமைக்கப்பட்டிருக்கும் அதை அவர் அப்படியே யோசித்து வரைந்து இருக்கலாம்.


  • இந்த படத்தை( ஓவியத்தை) அப்படியே திருப்பி பார்த்தோமானால் பின்புலமானது பியானோ கட்டைகளை போலிருக்கும் விரல்கள் வாசிப்பதையும் பார்க்கலாம். 


                                              கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் 
(In greek mythology the stars of Pleiades represented the seven sisters)
மூன்று வாயில்கள் (கதவுகள்) ஓரியான் (Orion ) நட்சத்திர கூடங்களை குறிக்கிறது.

  • யேசுவின் உருவமே ஒரு பிரமிட் வடிவத்தில் இருப்பதை பார்க்கலாம்.
  • சிறிய வாயில் கதவுகள் இரண்டும் சூரியனையும்(ஆண்பால், ஆண்), நிலவையும் (பெண்பால்,பெண்) குறிக்கிறது நடுவில் உள்ள பெரிய கதவு யுனிவர்ஸ், அதன் வழி செல்லவேண்டும்.


  • கணிதவியலின் கூற்றுப்படி, 3, 9 , 6 தனித்த சத்தி கொண்ட எண்கள் எனலாம்.  இந்த மூன்று எண்களையும் அந்த வாயில் கதவுகள் குறிப்பிடுகின்றன.


“Philosophy [nature] is written in that great book which ever is before our eyes — I mean the universe — but we cannot understand it if we do not first learn the language and grasp the symbols in which it is written. The book is written in mathematical language, and the symbols are triangles, circles and other geometrical figures, without whose help it is impossible to comprehend a single word of it; without which one wanders in vain through a dark labyrinth.”  — Galileo Galilei

The entire Universe (including our solar system, as well as atoms, DNA and life-forms) reveals the secrets of balance, rhythm, proportion and unity in diversity, the fractal  interconnection of parts with each other and the whole. This harmony is expressed by some “key” numbers: Fibonacci Series, Phi, Pi and “e”.

The creation myths of many traditions describe the universe as the work of a Divine Architect who uses “sacred geometry” to unfold the dimensions of a beautiful cosmos, wisely designing every aspect of it, and governing by just proportions evidenced in the geometric shapes and processes of nature.

நன்றி _ கலாகுமரன்

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)